த்ரிஷா 1999இல் மிஸ் சென்னையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடக்க காலத்தில் துணை கதாபாத்திரங்களில் மட்டுமே இவர் நடித்திருந்தார், மௌனம் பேசியதே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்,இப்படத்தை இயக்கியது இயக்குனர் அமீர், மற்றும் சூர்யா நடிப்பில் 2002இல் இப்படம் வெளிவந்தது.
இதனைத் தொடர்ந்து சாமி, ஆறு ,ஆதி, மங்காத்தா, அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா ,96, கில்லி ,போன்ற படங்களில் பெரிய ஹீரோக்களுடன் இணைந்து ஹிட் கொடுத்து புகழின் உச்சத்திற்கு அடைந்தார்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், போன்ற திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். திரைத்துறையில் ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து முன்னணி கதாநாயகியாக மட்டுமே உள்ளார்.
குறிப்பாக இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில், வெளிவந்த பொன்னியன் செல்வன் படத்திற்கு பிறகு ,த்ரிஷாவின் புகழ் மற்றும் அவரின் மார்க்கெட் வானின் உச்சத்தை அடைந்தது.
இந்த வகையில் 2025 இல் வெளிவந்த குட் பேட் அக்லி படத்தின் மூலம் த்ரிஷாவிற்கு,வரவேற்கும் கொடுக்கும் அளவைவிட எதிர்மறையான விமர்சனங்கல் அதிகமாக எழுந்தது.
எந்த விமர்சனங்களுக்கு ஆவேசமாக பதிலிட்டார் தன்னுடைய சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விஷத்தன்மை கொண்ட நண்பர்களே .. நீங்கள் எல்லாம் எப்படி வாழ்க்கையை வாழ்கிறீர்கள் ?எப்படி நன்றாக தூங்குகிறீர்கள்? சமூக வலைதளங்களில் மற்றவர்களைப் பற்றி அர்த்தம் இல்லாத,பதிவுகளை விட உங்களுக்கு உண்மையில் நிம்மதியை அளிக்கிறதா?

பெயர் தெரியாத தைரியம் இல்லாத நண்பர்களே …கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுக்காகவும், உங்கள் உடன் வாழும் நண்பர்களுக்காகவும், உண்மையில் மிகவும் வருந்துகிறேன்.

இயக்குனர் ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் முதல் நாளிலிருந்து இன்று வரை மிகப் பெரிய வசூலை செய்து சாதனை படைத்துள்ளது. இதில் இதில் த்ரிஷா, அஜித் குமார் ,மற்றும் யோகி பாபு, பிரபு ,பிரசன்னா, சுனில், பிரியா வாரியர், அர்ஜுன் தாஸ், போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.
மங்காத்தா படத்திற்கு பிறகு ரசிகர்களுக்கு முழு மகிழ்ச்சியுடன் ஆதி ரவிச்சந்திரன் இப்படத்தை வழங்கியுள்ளார். ரசிகர்கள் அவரைக் கொண்டாடி வருகின்றனர் ,நடிகர் அஜித்குமாரின் அடுத்த படத்தையும் இயக்குனர் ஆதித் ரவிச்சந்திரன் இயக்கப் போவதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்திற்காக நடிகை திரிஷாவிற்கு சிலர் அதிக விமர்சனங்களை பதிவு செய்திருந்தாலும் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து த்ரிஷா அவர்கள் குட் பேட் அக்லி படத்தின் சில காட்சிகளை மற்றும், ஆதி பிரபுவுடன் எடுத்த புகைப்படங்களையும்,செல்பிளையும் அவரது சோசியல் மீடியா பக்கமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தப் பதிவுக்கு நன்றி மாமே என்ற கேப்டன் பதிவிட்டுள்ளார் .இந்தப் பதிவுக்கு லட்சக்கணக்கான லைக்குகளும், ஆயிரக்கணக்கான கருத்துக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குட் பேட் அட்லி பாக்ஸ் ஆபீஸ் வசூல்
இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த மூன்றாவது தமிழ் படம் குட் பேட் அக்லி. சமீபத்தில் வெளிவந்த மதகத ராஜா, மற்றும் வீர தீர சூரன் ,படங்களை பின்னுக்கு தள்ளி, இந்த பட்டியலில் முதலிடம் முதலிடத்தில் உள்ளது .
அஜித் குமாரின் படமான விடாமுயற்சி, மற்றும் பிரதீப் ரங்கநாதரின் டிராகன்,ஆகவே முதல் இடத்தில் உள்ளது
குட் பேட் அட்லீ திரைப்படம் 100 கோடியை தாண்டி உலக அளவில் 114.50 கோடியே வசூலித்தது ஞாயிற்றுக்கிழமையும் படம் வெற்றிகரமான பசலை அள்ளிக் கொடுத்தது சனிக்கிழமையும் 32.67% அதிகரிப்புடன் இருந்தது வெள்ளிக்கிழமை 49.72 சதவீதம் சரிவை சந்தித்து 15 கோடி வசூலித்தது.

இதன் முதல் வார இறுதியில் வசூல் 84.50 உயர்ந்துள்ளது இந்தியாவில் 30.25 கோடிக்கு நிகர் வசூலை எட்டியது இந்த படம்.