மீண்டும் பிக் பாஸ்! அல்டிமேட் சீசன் 2 எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

By carniya

Published on:

Follow Us
biggboss-tamil-ultimate-season2-disney-plus-hot-star

விஜய் டிவியில் கடந்த  ஆண்டு அக்டோபர் மாதம் பிரம்மாண்டமாக ஆரம்பமான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வெற்றிகரமாக நூற்றி ஐந்து நாட்களை கடந்து  கிராண்ட் பினாலே கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பேச்சாளர் முத்துக்குமரன் டைட்டில் வின்னராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

பினாலே வின் போது விஜய் டிவியின் ஹெட் பாலச்சந்திரன் அவர்கள் ஒரு முக்கிய குறிப்பு ஒன்றை கூறியிருப்பார். அச்சமயத்தில் அது சிலருக்கு மட்டுமே புரிந்தது. பலரும் கவனிக்கவில்லை. அதாவது அந்த இறுதிப் போட்டியின் மேடையில் ஹெட் பாலச்சந்திரன் அவர்கள் “நவரசங்களையும் கலந்த சீசன் ஒன்று வரப்போகிறது அது என்ன என்பது உங்களுக்கு தெரியும்” என்று  கூறி இருப்பார்.இவ்வாறு கூறியது பிக் பாஸ் அல்டிமேட் சீசன் 2 வரப்போகிறது இன்று ஒரு துப்பு கொடுத்திருப்பார். இந்த செய்தியானது பிக் பாஸ் ரசிகர்களுக்கு பெரும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பிக் பாஸ் அல்டிமேட்

பிக் பாஸ் அல்டிமேட் என்பது தமிழில் முதல் சீசன் ஒளிபரப்பப்பட்டது. இந்த அல்டிமேட் சீசனில், முடிந்த பிக் பாஸ் சீசன்களிலிருந்து சில கண்டஸ்டென்டுகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். புதிய நபர்கள் யாரேனும் போட்டிக்கு வருவார்களா என்றால், ஒரு சிலர் புதிய நபர்களாக இணைய வாய்ப்புள்ளது. 95 சதவீதம் பழைய போட்டியாளர்கள் மட்டுமே இந்த பிக் பாஸ் அல்டிமேட் சீசனில் பங்கேற்பார்கள் என்பது பிக் பாஸ் அல்டிமேட் சீசன் 1 மூலியமாக தெரியவந்தது. 

ஒன்றாவது பிக் பாஸ் அல்டிமேட் சீசனில், சீசன் 1 முதல் 5 வரை ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றியாளர்கள் பங்கேற்க மாட்டார்கள். அவ்வாறு நடத்தப்பட்ட முதல் பிக் பாஸ் அல்டிமேட் சீசனில் பாலாஜி முருகதாஸ் பட்டத்தை வென்றார். இரண்டாம் இடத்தை போட்டியாளரான நிருப் அவர்கள் வென்றிருப்பார்.

பிக் பாஸ் அல்டிமேட் சீசன் 2 தொகுப்பாளர் 

பிக் பாஸ் அல்டிமேட் சீசன் ஒன்றை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கினார். இரண்டாவது அல்டிமேட் சீசனை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது. ஏனென்றால் நடிகர் விஜய் சேதுபதிக்கு பல படங்கள் காத்துக் கொண்டிருப்பதால் அவரால்  அல்டிமேட் சீசன் 2வை  தொகுத்து  வழங்குவது என்பது முடியுமா என்று கேள்விக்குறியாகவே உள்ளது. 

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் 

பிக் பாஸ் அல்டிமேட் சீசன்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படாது என்பது பலருக்கும் தெரியும்.   சிலருக்கு பிக் பாஸ் அல்டிமேட் சீசன் 1 நடந்து முடிந்தது தெரியாது. அப்படி ஒன்று இருப்பது தெரியாதவர்கள் பலர். காரணம் இது தொலைக்காட்சியை ஒளிபரப்பு செய்யாமல் இருந்தது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மட்டுமே பிக் பாஸ் அல்டிமேட் சீசன்கள் ஒளிபரப்பப்படும். இரண்டாவது அல்டிமேட் சீசனும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் 24×7 ல் ஒளிபரப்பு படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment