Explain rosemary oil for hair growth in 2 minutes | ரோஸ்மேரி எண்ணெய் தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் வழிகள்
முடி வளர உதவும் ரோஸ்மேரியின் மற்ற பயன்கள்பற்றி தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
முடி வளர்ச்சிக்கு பெரிதும் பங்கு வகிக்கிறது ரோஸ்மேரி ஆயில். ரோஸ்மேரி ஆயிலில் என்னென்ன சத்துக்கள் உள்ளது, ரோஸ் மேரியை எந்தெந்த முறையில் பயன்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சியை பெறலாம் எனவும் மற்ற பயங்களை எவ்வாறு பெறலாம் என்பதையும் கீழ்வருவனவற்றுள் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
முடியின் வளர்ச்சியை தூண்டக்கூடிய முக்கியமான என்சைம்களும் ஊட்டச்சத்துக்களும் அதிக அளவு இயற்கையாகவே கொண்டுள்ளது
ரோஸ்மேரி ஆயில்.ரோஸ் மேரி ஆயிலை நாம் தினந்தோறும் பயன்படுத்துவதன் மூலம் பலநல்ல மாற்றங்களை உணரலாம்.முடியின் வளர்ச்சியை தூண்டக்கூடிய என்சைம்கள் அதிக அளவில் இந்த ரோஸ்மேரி ஆயில் கொண்டு உள்ளதால், இதை பயன்படுத்துவதன் மூலம் முடியின் வளர்ச்சி தூண்டப்படுகிறது.
முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ரோஸ்மேரி
ரோஸ்மேரி இலைகள் முடியின் வளர்ச்சியை தூண்டுவதற்கு பெரிதும் உதவுகிறது என்பதனை சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சிலருக்கு சிறு வயதில் முடி அடர்த்தியாகவும், அவர்கள் வளர வளர முடி அடர்த்தி குறைந்து மெல்லிசாக காணப்படும். இது போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த ரோஸ்மேரி பெரிதும் கைகொடுக்கிறது. ரோஸ்மேரி ஆயிலை உச்சந்தலையில் நன்றாக தடவி வருவதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர உதவுகிறது. உங்களின் அடர்த்தி குறைந்த மெல்லிசான முடியை மீண்டும் அடர்த்தியாக வளர இந்த ரோஸ்மேரி உதவுகிறது.
முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ரோஸ்மேரி ஆயிலில் உள்ள காஃக் அமிலம், ரோஸ்மேரிக் அமிலம், சபோனின்கள், கார்சோனிக் அமிலம், டானின்கள் ஆகியவை இரத்த ஓட்டத்தை சீராக்கி உச்சந்தலையை மிருதுவாக்கி முடி வளர உதவுகிறது.
கருமையாக முடி வளர இதை செய்யுங்கள்!
இன்றைய காலகட்டத்தில் பலரும் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாக முக்கிய காரணமாக அமைவது இளநீரை.முடியை சரியாக பராமரிக்காமல் விடுவது, சத்துக் குறைபாடு, உணவு பழக்க வழக்கங்கள், வெயில், போன்ற பல காரணங்களால் இளநிறை ஏற்படுகிறது.
இளநிறையை போக்க கருமையான முடி வளர பெரிதும் உதவி செய்கிறது ரோஸ்மேரி ஆயில். இளநிறையை சரி செய்து கருமையான முடியை பெறுவதற்கான அனைத்து இயற்கை வலிமையை உடையது ரோஸ்மேரி ஆயில்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் அல்லது தலைக்கு பயன்படுத்தும் எந்த எண்ணையாக இருந்தாலும் அந்த எண்ணெயுடன் ரோஸ்மேரி ஆயிலையும் சேர்த்து தினமும் தடவி வந்தால் இளநீரை வெகு விரைவில் கருகருவென முடியை மாற்றி அமைக்கும்.
முடியின் வேரை சுத்தம் செய்யும் ரோஸ்மேரி வாட்டர்
முடி உதிர முக்கிய காரணமாக அமைவது முடியின் வேர்கள் பலவீனமாக காணப்படுவது. இப்படி முடியின் வேர்கள் பலவீனமாக இருப்பதனால் நாம் கைகளால் நம் கூந்தலை வருடினாலே முடி நம் கையோடு கழன்று வரும். இப்படி இருக்கும் நிலையில் சீப்பை பயன்படுத்தி முடியை சீவினால் என்ன ஆகும் என்று நினைத்துப் பாருங்கள். அதனால் முடியின் வேரை பலமாக்க வேண்டும். அதற்கு முடியின் வேர்க்கால்கள் சுத்தமாக இருக்க வேண்டும். முடியின் வேர்க்கால்களை சுத்தப்படுத்த எந்த ஒரு நவீன ஆயுதமும் தேவையில்லை இப்படி ஒரு ஆயுதமும் இல்லை. முடியின் வேர்க்கால்களை சுத்தம் படுத்த ரோஸ்மேரி வாட்டர் பெரிதும் உதவுகிறது. இந்த ரோஸ்மேரி வாட்டரை பயன்படுத்துவதன் மூலம் முடியின் வேர் பகுதியில் உள்ள அழுக்குகள் நீங்கி முடியை சுத்தமாக வைப்பதோடு முடியை வறட்சி இல்லாமல் பளபளப்பாக காணப்பட உதவுகிறது.

ரோஸ் மேரி வாட்டர் தயாரிப்பது எப்படி?
தலைமுடி வளர ரோஸ்மேரி ஆயில் மட்டுமின்றி ரோஸ்மேரி வாட்டரும் பெரிய உதவி செய்கிறது. இவ்விரண்டில் எது முடி வளர அதிக பங்கு வகிக்கிறது என்று கேட்டால் அதற்கு பதில் இரண்டும் தான். ரோஸ்மேரி ஆயில் எந்த அளவுக்கு பயன் தருகிறதோ அதே அளவு ரோஸ்மேரி வாட்டரும் முடி வளர உதவுகிறது.
ரோஸ் மேரி இலையை பச்சை இலையாகவோ அல்லது காய்ந்த இலையாகவோ பயன்படுத்தலாம். இரண்டுமே ஒரே மாதிரியான பயனை தரும். அதாவது ரோஸ்மேரி இலையை பச்சையாகவோ அல்லது காய்ந்த இலையாகவோ எடுத்துக் கொள்ளலாம். இலையை காய வைத்துப் பயன்படுத்துபவர்கள் என்றால் வெயிலில் வைத்து காய வைக்கக்கூடாது. நிழலில் உலர விட வேண்டும். இவ்வாறு செய்வதனால் வெயிலின் வெப்பத்தினால் அதில் உள்ள சத்துக்கள் சாகாமல் இருக்கும். இவ்வாறு பச்சை இலையோ அல்லது காய்ந்த இலையையோர் தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளவும். எடுத்துக்கொண்ட ரோஸ்மேரி இலையை நன்றாக கொதித்த தண்ணீரில் போட்டு மீண்டும் கொதிக்க விட வேண்டும். பின்பு அந்த நீரை நன்றாக கொதித்த பிறகு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். வடிகட்டிய ரோஸ்மேரி நீர் இளஞ்சிவப்பு நிறத்திலோ அல்லது பிங்க் நிறத்திலோ காணப்படும். தற்பொழுது ரோஸ்மேரி வாட்டர் ரெடி! இந்த ரோஸ்மேரி வாட்டரை பயன்படுத்துவதனால் முடி வலுவாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
ரோஸ் மேரி ஆயில் தயாரிப்பது எப்படி?
ரோஸ்மேரி ஆயிலை பெரிதும் வீட்டில் தயாரிப்பது இல்லை. ஏனென்றால் ரோஸ்மேரி வாட்டர் என்பது கொதிக்க வைத்தாலே நமக்கு கிடைத்துவிடும். ஆனால் ரோஸ்மேரி ஆயிலோ ‘கோல்ட் பிரஸ்’ மூலம் தயாரிக்கப்படுகிறது. இதற்கென தனி இயந்திரங்கள் உள்ளன. ரோஸ்மேரி இலையில் உள்ள ஆயுளை பிரித்தெடுப்பதற்கு கோல்ட் பிரஸ் செய்து ஆயிலை கான்சன்ட்ரேட்டாக எடுத்து விற்கப்படுகிறது. இந்த ரோஸ்மேரி ஆயிலை நாம் தலைக்கு தேய்க்க பயன்படுத்தும் அன்றாட எண்ணெயில் கலந்து வைத்துக் கொண்டு நம் தினமும் அல்லது எப்பொழுது தலைக்கு எண்ணெய் தேய்கிறமோ அப்பொழுது தேய்த்துக் கொண்டால் போதும். தினமும் தேய்த்து வந்தால் முடி விரைவில் அடர்த்தியாக வளரும்.
பொடுகை விரட்டும் ரோஸ்மேரி வாட்டர்

முடி உதிர்தலுக்கு காரணங்கள் உண்டு. அவற்றுள் முக்கிய காரணமாக பார்க்கப்படுவது பொடுகு. பல பேருக்கு இந்த பொடுகு பிரச்சனை உள்ளது. பொடுகை விரட்ட ஷாம்பூவை பயன்படுத்துகிறோம். ஷாம்புவால் பொடுகு கொட்டுகிறதோ இல்லையோ முடி நன்றாகவே கொட்டும். இவ்விரண்டையும் போக்க ஒரே வழி ரோஸ்மேரி வாட்டர்.
ரோஸ்மேரி வாட்டரை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டால் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். தலைக்கு குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இந்த ரோஸ்மேரி வாட்டரை தலையில் முடி மற்றும் ஸ்கேல்ப் பகுதிகளில் நன்றாக ஸ்பிரே செய்து கை விரல்களால் நன்றாக ஒரு ஐந்து முதல் பத்து நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்யவும். பிறகு ஒரு அரை மணி நேரம் அல்லது 45 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் நன்றாக அலசவும் இவ்வாறு செய்து வந்தால் பொடுகு நீங்கும் முடி கொட்டுவதும் குறையும்.
முடி வளர்ச்சியை தூண்டும் ரோஸ்மேரி வாட்டர் மற்றும் ஆயில்
ரோஸ் மேரி வாட்டரை தலைக்கு ஸ்பிரே செய்து குளித்து வருவதினால் தலைமுடி நன்றாக வளரும். ரோஸ்மேரி ஆயிலை தினமும் தலைக்கு தேய்த்து வர உச்சந்தலையில் உள்ள ரத்தம் நன்றாக ஓட்டம் பிடித்து முடி வளர உதவுகிறது. இந்த ரோஸ்மேரி வாட்டர் மற்றும் ஆயில் முடியை வளர்ச்சியடைய உதவி செய்வதுடன் வளரும் முடி அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் காண உதவுகிறது.
முடி வளர தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இயற்கையாகவே அதிக அளவு இந்த ரோஸ்மேரியில் உள்ளது. எனவே ரோஸ்மேரி ஆயில் மற்றும் வாட்டரை பயன்படுத்துவதன் மூலம் முடி வேகமாக வளர தூண்டப்படுகிறது.
முடி உதிர்வை தடுக்குமா ரோஸ்மேரி?
ரோஸ் மேரி ஆயில் மற்றும் வாட்டர் முடி உதிர்வை தடுக்கிறது மற்றும் பெரிதும் குறைக்கிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. முடி உதிர்வை தடுக்கக்கூடிய ஆண்டி-இன்ஃபிளமேட்டரி பண்புகள் அதிக அளவில் இயற்கையாகவே இந்த ரோஸ்மேரியில் உள்ளது.ரோஸ்மேரி ஆயில் பயன்படுத்துவதன் மூலம் எந்த ஒரு பக்க விளைவும் யாருக்கும் ஏற்பட வாய்ப்பில்லை. தலையின் நரம்பு மண்டலம் மற்றும் முடியின் வேர் பகுதி ஸ்கேன் போன்றவற்றில் ரத்த ஓட்டத்தை வேகமாக்கி முடி வளர உதவும் ரோஸ்மேரி வாட்டர் மற்றும் ரோஸ்மேரி ஆயிலை பயன்படுத்தி முடி உதிர்வை தடுக்கலாம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். இதனால் ரோஸ்மேரி ஆயிலை பயன்படுத்தினால் முடி உதிர்வை தடுக்கலாம் மேலும் அடர்த்தியான பளபளப்பான முடியை பெறலாம்.