மங்குஸ்தானின் பயன்கள் | Mangoestan Benefits in tamil
மங்குஸ்தான் என்பது தென்கிழக்கு ஆசியாவிலிருந்து, முக்கியமாக மலாய் தீபகற்பத்தில் தோன்றிய ஒரு தாவரமாகும். இன்று, இது தாய்லாந்து, மலேசியா, பிலிப்பைன்ஸ், ஹவாய், கரீபியன் தீவுகள்,தென் அமெரிக்கா போன்ற வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் பயிரிடப்படுகிறது.
இது வெப்பமான மற்றும் ஈரப்பதமான வெப்பமண்டல காலநிலையை விரும்புவதால், மங்குஸ்தான் சாகுபடி பரப்பளவு குறைவாகயிருக்கும்.
இது இந்தியாவில் பயிரிடப்படுவதில்லை அதனால் உறைந்த மங்குஸ்தான் பழத்தை இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது . ஒரே ஒரு
வகையுடன் பழங்களை உற்பத்தி செய்ய 10 ஆண்டுகளுக்கு மேல் எடுக்கும் அப்படிப்பட்ட மென்மையான பழம் இது.
இது இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட வெள்ளை சதையைக் கொண்டுள்ளது.மங்குஸ்தான் பழத்தில் அளவில் சதைப்பற்றுள்ளது.
பயன்கள்
உடல் இடையைக் குறைக்க பயன்படுகிறது
உடல் இடையில் உள்ள கொழுப்பைக் கரைக்க நினைப்பவர்கள் இந்த மங்குஸ்தானை தினமும் ஒரு முறையென ஒரு மாதத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடலில்யுள்ள கொழுப்பு கரைந்து உடல் அழகாகத் தோன்றும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்
நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளிலும் முக்கியமான உறுப்பாகக் கருதப்படுவது இருதயமாகும். இந்த இருதயத்தை பாதுகாப்பது மிகவும் அவசியம்.
உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் சரியான அளவிலும் சுத்தமான ரத்தத்தை அனுப்பும் அற்புதமான பணியைச் செய்வது இந்த இருதயமாகும்.
ஆரோக்கியமான இரத்த அழுத்தம் இருப்பது ஆரோக்கியமான இதயம் என்று பொருள். மாங்குஸ்தான் அதிக பொட்டாசியம், தாமிரம், மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு உள்ளடக்கம் உடலில் ஆரோக்கியமான இரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவுகிறது. நல்ல இரத்த அழுத்தம் சாதாரண இதயத் துடிப்பைப் பராமரிப்பதன் மூலமும், மாரடைப்பு அபாயத்தைத் தடுப்பதன் மூலமும் மைய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. மேலும், மாங்குஸ்தான் உடலில் உள்ள கொழுப்பின் அளவையும் குறைக்கிறது.
இந்த இருதயத்தை வலுப்படுத்த ஒமேகா 6 வேதிப்பொருள் தேவைப்படுகிறது மங்குஸ்தான் பழத்தில் ஒமேகா 6 அதிகமாக உள்ளது. இதனால் மங்குஸ்தான் பழத்தை நம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இருதயத்தை வலுப்படுத்தலாம்.
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்
தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் சாந்தோன்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்களின் மூலமாக இருப்பதால், மங்குஸ்தான் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
வெள்ளை இரத்த அணுக்கள் உருவாக்கம் மற்றும் வைட்டமின் சி உருவாக்க உதவுகிறது. உடலில் உள்ள ஆரோக்கியமான வெள்ளை இரத்த அணுக்கள் நோயிலிருந்து உடலைப் பாதுகாக்கின்றன.
ஆக்ஸிஜனேற்றம் நிறைந்தது
மாங்குஸ்தான் பழம் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளால் நிரப்பப்பட்டுள்ளது.
மங்குஸ்தான் ஒரு வளமான மற்றும் பரவலாகக் கண்டுபிடிக்கப்பட்ட தனித்துவமான ஆக்ஸிஜனேற்றியாகும்.
ஆக்ஸிஜனேற்றிகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து, தோல் மற்றும் ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன. ஆக்ஸிஜனேற்றிகள் காரணமாக மங்குஸ்தான் ஒரு சிறந்த பழமாக அறியப்படுகிறது.
சளி மற்றும் காய்ச்சல் முதல் நாள்பட்ட மற்றும் மைய கோளாறுகள்வரை பல்வேறு நோய்களைத் தடுக்கிறது.
மாதவிடாய் கோளாறுக்கு உதவும்
பாரம்பரிய காலத்திலிருந்தே, மங்குஸ்தான் பழம் மற்றும் வேர்கள் பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
மாதவிடாய்க்கு முந்தைய/பின் பிடிப்புகள் மற்றும் வலி, மனநிலை மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் உங்களுக்கு வழக்கமாக இருந்தால், மாங்குஸ்தான் அல்லது அதன் சாற்றைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் கடினமான சூழ்நிலையை நீங்கள் சமாளிக்கலாம்.
ஆரோக்கியமான சருமப் பராமரிப்பு
மாங்குஸ்தான் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, ஒவ்வாமை எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற குணங்களைக் கொண்டுள்ளது, இது சருமத்தை பராமரித்த்து சேதமடைந்தச் செல்களைச் சரிசெய்கிறது.
புற ஊதா கதிர்களைத் தடுத்து தோல் அழற்சி, தோல் வயதானது, அரிப்பு , ஒவ்வாமை மற்றும் பாக்டீரியா தொற்றுகள் போன்ற பல தோல் பிரச்சினைகளைத் தடுக்கிறது.
அதிக அளவு வைட்டமின் சி சரும பளபளப்பை ஆதரிக்கிறது,
ஆக்ஸிஜனேற்றிகள் அற்புதங்களைச் செய்கின்றன, குறிப்பாக உங்கள் சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் வயதான அறிகுறிகளைத் தடுப்பதன் மூலம் அழகான பளபளப்பான சருமத்தைப் பெறலாம்.
எடை இழப்பை ஊக்குவிக்கவும்
மாங்குஸ்டானில் கலோரிகள் குறைவாகவும், நிறைவுற்ற கொழுப்பு இல்லாமலும், கொழுப்பு இல்லாததாகவும் உள்ளது. எனவே, இது எடை மேலாண்மைக்கு நன்கு அறியப்பட்டதாகும்.
மாங்குஸ்டானை தொடர்ந்து பயன்படுத்துவது மக்களில் பிஎம்ஐ மதிப்பைக் குறைக்கிறது.
அழற்சி எதிர்ப்புக் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது மற்றும் உடல் தேவையற்ற எடை அதிகரிப்பைத் தடுக்கிறது. மாங்குஸ்டான் பழங்களில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கொழுப்பு அளவை அதிகரிக்காமல் உடலை வளர்க்கின்றன.

காசநோய்
மங்குஸ்தானில் சான்தொன்ஸ் ர என்னும் முக்கியமான ஒரு திரவம் இருக்கிறது.
இந்தத் திரவம் காச நோயைக் குணமாக்கும் வல்லமை பெற்றது.
மங்குஸ்தான் பழத்தைத் தினமும் சாப்பிட்டு வந்தால் காசநோய் நம்மிடம் அணுகாது.
புற்றுநோய்
வளர்ந்து வரும் காலகட்டங்களில் புற்றுநோய் என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு சராசரியான நோயாக மாறிவிட்டது உலகிலே மிகவும் மோசமான நோயாகவும் பார்க்கப்படுவது இந்தப் புற்றுநோய்.
மங்குஸ்தான் பழம் சற்று விலை அதிகமாக இருந்தாலும் இதனுடைய பயன் மிகவும் அதிகம்.
புற்றுநோய் ஏற்பட்டவர்கள் மங்குஸ்தான் பழத்தை உட்கொண்டு வந்தால் புற்றுநோய் குணமாகும்.
கண்பார்வை
மனிதனுக்கு முக்கியமாகக் கருதப்படுவது கண்ணாகும். கண்ணில்லை என்றால் ஒரு மனிதனால் எதையும் காண இயலாது மங்குஸ்தானில் அதிகப்படியான வைட்டமின் ஏ இருப்பதனால் இது பார்வை திறனை மேம்படுத்தும்.
அஸ்கார்பிக் அமிலம் , நிக்கோடினிக் அமிலம் போன்ற அமிலங்களும் நிறைந்துள்ளது இந்த அமிலங்களும் கண்பார்வையை மேம்படுத்த உதவுகின்றன.
மங்குஸ்தான் பழங்களைத் தினந்தோறும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறையென 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும்.
மலச்சிக்கல்
மலச்சிக்கல் சராசரியாக நூறில் 70% மக்கள் அவதிப்படும் ஒரு நோயாகும் சரியான உணவு உட்கொள்ளாமல் இருப்பது தண்ணீர் அருந்தாமல் இருப்பது சரியான தூக்கம் இல்லாமல் எனப்பல காரணங்களினால் மலச்சிக்கல் ஏற்படும் .
மங்குஸ்தான் பழத்தில் நார்ச்சத்து இருப்பதினால் இது குடல் அசைவுகளைச் சரி செய்து மலச்சிக்கல் பிரச்சனைகள் இருந்து விடுபட உதவுகிறது.
வயிற்றுப் புண்ணுக்கு மருந்தாகப் பயன்படுகிறது மங்குஸ்தான்
வயிற்றுப்புண் என்கிற அல்சர் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாமலும் அதிகபடியான குளிர்பானங்கள், காரமான உணவுகளை உட்கொள்வதும் காரணமாக விளங்குகிறது.
மங்குஸ்தான் பழம் மட்டும் மருந்தாகச் செயல்படவில்லை படத்தில் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
மங்குஸ்தான் பழத்தைச் சாப்பிட்டு விட்டு அதன் தோலை மிதமான வெயிலில் காய வைத்துப் பொடியாக அரைத்து அதனுடன் சற்று தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும் வயிற்றுப்புண் வாய்ப்புண் குணமடையும்.
உதிரப்போக்கு
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய உதிரப்போக்கு அதிகப்படியாக இருந்தால் அது சரியான மாதவிடாய் கருத்தப்படாது.
நீண்ட நாள் கழித்து வரக்கூடிய மாதவிடாய் மற்றும் உடல் பலவீனமாக இருந்தால் உதிரப்போக்கு சற்று அதிகமாகக் காணப்படும்.
இந்த நிலையில் நாம் மங்குஸ்தான் பழங்களை வாங்கி சாப்பிடுவது சிறந்தது அல்லது இதனை பானகமாகக் குடிக்கலாம்.
மங்குஸ்தான் பழத்தின் தோலை உரித்து அதனைக் காய வைத்துப் பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் அதிக இரத்தப்போக்கு குறையும் சுவைக்குச் சற்று பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்.

தலைவலி
தலைவலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது தண்ணீர் சரியாக அருந்தாமல் இருத்தல், மனஅழுத்தம் எனச் சொல்லப்படும் மன அழுத்தத்தினால் தலைவலித்தல், கண்பார்வை குறைந்தால் ஏற்படும் தலைவலியெனப்ப ல தலைவலிகள் உள்ளன.
தலைமுறை ஆனது கணினியில் அதிகப்படியாக வேலை செய்கின்றனர் இதனால் கண் வறட்சி அடைந்து கண் எரிச்சல் உண்டாகும் சிலருக்கு தலைவலி கழுத்து வலி இடுப்பு வலியென அவதிக்கு உள்ளாவார்கள் இது போன்ற வலிகள் இருப்பவர்கள் மங்குஸ்தான் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.
கல்லீரல்
நம் உடலில் உள்ள உறுப்புகளைப் பெரிய உறுப்பு என்று சொல்லப்படுவது கல்லீரல் கல்லிடல் 24 மணி நேரமும் வேலை செய்யும் இது ரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றக் கல்லீரல் செயல்படுகிறது.
மங்குஸ்தான் பழம் கல்லீரல் சேரப்படும் போதைப் பொருட்களின் நச்சுத்தன்மையை சுத்திகரிப்பு செய்வதில் பெரிய பங்காற்றுகிறது.
குடிக்கு அடிமையானவர்கள் மற்றும் பல போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு முதலில் பாதிக்கப்படுவது கல்லீரல் அத்தகைய கல்லீரலில் சேரப்படும் போதைப் பொருட்களின் நச்சுக்களை சுத்திகரிப்பு செய்வதில் சிறந்து செயல்படுகிறது இந்த மங்குஸ்தான் பழம்.