முகப்பு / Hair Spa Remedy / உங்கள் முடி உதிர்வதால் கவலையா? நீண்ட, அடர்த்தியான முடியை பெற விரும்புகிறீர்களா? |natural beauty tips for hair growth in tamil
Hair Spa Remedy

உங்கள் முடி உதிர்வதால் கவலையா? நீண்ட, அடர்த்தியான முடியை பெற விரும்புகிறீர்களா? |natural beauty tips for hair growth in tamil

G
செய்தி ஆசிரியர்
Go2Tamil
06 Aug 2026, 08:30
1 பார்வைகள்
பகிர் :
உங்கள் முடி உதிர்வதால் கவலையா? நீண்ட, அடர்த்தியான முடியை பெற விரும்புகிறீர்களா? |natural beauty tips for hair growth in tamil

நம் தலைமுடியானது வருடத்திற்கு ஆறு அங்குலம் வரை வளருமாம். இதைக் கேட்டால் நம்ப முடியவில்லை. ஆனால் இது நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மை. இதை ஏன் நம்ப முடியவில்லை என்றால் வருடத்திற்கு ஆறுங்குளம் வளர்ந்தால் இந்நேரம் நம் முடி எவ்வளவு அடர்த்தியாகும் எவ்வளவு நீளமாகவும் இருக்கும் என்பதை நாம் நினைத்துப் பார்ப்போம். ஆனால் அவ்வாறு காட்சியளிக்கவில்லை. அதற்கு காரணம் முடி வளர்வதை விட இரண்டு பங்கு அதிகமாக கொட்டுகிறது என்பதுதான் உண்மை.

முடி கொட்டுவதை தடுத்தாலே போதும், வருடத்திற்கு ஆறு அங்குலம் முடி வளரும் என்னும் செய்தி உண்மை என்பதை நீங்கள் உணரலாம்.

நமது தலைமுடியானது பார்ப்பதற்கு அடர்த்தியாகவும் நீளமாகவும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசை. முக்கியமாக பெண்களுக்கு அது ஒரு பெரிய சவாலாக இருக்கும். நமக்கு இருக்கும் அன்றாட பிரச்சினைகளில் மிகவும் முக்கியமாக நாம் மன அழுத்தத்திற்கு ஆளாக காரணமாக இருப்பது இந்த முடி உதிர்வு தான்.நீளமான அடர்த்தியான முடியை பெற இயற்கையான வழிமுறைகளை தற்போது காணலாம். 

முடி கொட்டுவது வேகமாக நடக்கும் ஒரு விஷயம். இன்று கொட்டும் அளவைவிட நாளை ஒரு மடங்கு அதிகமாகவே  கொட்டும். ஆனால் முடியின் வளர்ச்சி என்பது அப்படி அல்ல. முடி வளர்ச்சி அடைய சில மாதங்கள் ஆகலாம் சில வருடங்களாகலாம். சிலருக்கு இயற்கை  முறையை சில நாட்கள் பின்பற்றினாலே முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் மாறியதே காண முடியும். சிலருக்கு பல நாட்கள் அல்லது பல  மாதங்களாக பல இயற்கை முறைகளை பின்பற்றி இருந்தும் முடியில் எந்த மாற்றமும் இருக்காது.  ஆனால் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் கழித்து முடியில் பெரும் மாற்றத்தை காணலாம்.இப்படி இரு வேறு  மாற்றங்களாக நடக்க காரணம் ஒன்று, உணவு பழக்க வழக்கங்கள் இரண்டாவது அவர்கள் செய்யும் வேலை. அதாவது சிலர் அவர் செய்யும் வேலையானது உடலுக்கு சூடு விளைவிக்கும் சூடு ஏற்படுத்தும் ஒரு பணியாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக சிலர் ஏதாவது கெமிக்கல் கம்பெனியிலோ அல்லது ஏதேனும் உலோகம் தயாரிக்கும் ஒரு ஃபேக்டரியிலோ வேலை பார்க்கலாம். தற்போது உலகம் நவீன மயமாக்கப்பட்டதால் அதிகமாக அனைவரும் கணினி மற்றும் தொலைபேசியில் நீண்ட நேரம் வேலை பார்க்கின்றன. இப்படி கணினியோ அல்லது தொலைபேசியில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது என்பது உடலுக்கு ஒரு சூட்டை உற்பத்தி செய்யும் வேலை ஆகும். இது போன்ற வேலை பார்ப்பவர்களுக்கு எளிதில் முடியாதது .மூன்றாவது காரணம் முடியை சரியாக பராமரிக்காமல் விடுவது. சிலர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருப்பவர்களாக இருப்பார்கள். வீட்டில் தானே இருக்கிறோம் என்று தனது முடியை சரியாக பராமரிக்காமல் அப்படியே விட்டுவிடுவார்கள். இப்படி செய்யும் பொழுதெல்லாம் முடிக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல் சரியான கவனிப்பு இல்லாமல் முடியாதது கொட்டும். இது போன்ற வேலைப்பளு மற்றும் சுற்றுச்சூழல் உணவு பழக்க வழக்கங்கள் என வித்தியாசங்கள் இருப்பதால் முடி வளர்ச்சி  அடைவதற்கான காலம் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபட்டதாக அமையும். 

கெமிக்கல் நிறைந்த ஷாம்புவை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு இயற்கையான கண்டிஷனர் பயன்படுத்தலாம். இயற்கை முறையில் டூ இன் ஒன் மற்றும் ஒன் கண்டிஷனர்கள் உள்ளன. அதாவது வாசனை நிறைந்ததாகவும், ஷாம்பு போல இயற்கை முறையில் நுரை வருவதாகவும், கண்டிஷனர் போல ஒரு பளபளப்பை தருவதாகவும் அமையும். இவை மூன்றும் ஒரே இயற்கை பொருளிலிருந்து கிடைப்பதுதான் த்ரீ இன் ஒன் என்பார்கள். இதற்கு எடுத்துக்காட்டு வெந்தயம்.

வெந்தயம் ஒரு சிறந்த 3 இன் 1 இயற்கை பொருளாகும். வெந்தயத்தை தண்ணீரிலோ அல்லது சோறு வடித்த கஞ்சிலோ  எட்டு மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும். ஊறவைத்த வெந்தயத்தை மறுநாள் அல்லது எட்டு மணி நேரம் கழித்து  நன்றாக மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்து தலையில் அப்ளை செய்து  45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை அப்படியே ஊற வைக்கவும். பிறகு தண்ணீரைக் கொண்டு நன்றாக தேய்த்து அலசினால் ஷாம்பு போல முறையாக வரும். மேலும் தண்ணீரை கொண்டு நன்றாக அலசிய பிறகு தலையை துவட்டி காய வைத்து பார்த்தால் முடியாதது கண்டிஷனர் பயன்படுத்தியது போல பளபளப்புடன் காட்சியளிக்கும், நறுமணமாகவும் இருக்கும். 

அதிக அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் கொண்ட ஒமேகா 3 கொழுப்பு உணவு பொருட்களை எடுத்துக் கொள்ளலாம். உச்சந்தலை மற்றும் உடலில் உள்ள செல்களை ஆரோக்கியமாக வைக்கும் தன்மையைக் கொண்டது ஒமேகா 3 கொழுப்புகள். 

நெத்திலி,  ஹெர்ரி, சால்மன் போன்ற மீன்களில் அதிக ஒமேகாற்றி கொழுப்புகள் உள்ளன. மேலும் முடிக்கத் தேவையான புரதமும் இந்த மீன்களில் அதிகம் உள்ளது. அதனால் வாரத்திற்கு இரண்டு முறை தவறாமல் இதுபோன்ற மீன்களை எடுத்துக் கொள்ளுங்கள். 

அழகான நீண்ட மற்றும் அடர்த்தியான முடியை பெற புரோட்டின் மற்றும் ஒமேகாத்தி மிகவும் முக்கியமானவை. முடி வளர பெரும் பங்கு வகிக்கிறது புரதமும் ஒமேகா திரியும். 

மசாஜ் செய்ய பல எண்ணைகள் பயன்படுத்தலாம். அதாவது தேங்காய் எண்ணெய் விளக்கெண்ணெய் ஆலிவ் எண்ணெய், என பல  எண்ணெய் வகைகள் பயன்படுத்தலாம். 

நிறைய பேக்குகள் செய்து மசாஜ் செய்து கொள்ளலாம். அப்படி எதுவும் இல்லை என்றால், நாம் அன்றாட பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் கொண்டு ஸ்கேல்ப்பில் மசாஜ் செய்யலாம். எண்ணையை வெதுவெதுப்பாக எடுத்துக் கொண்டு விரல்களில் தடவி தலையின் ஸ்கால்ப்பு பகுதிகளில் நன்றாக தேய்த்து வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். இப்படி செய்வதனால் உச்சந்தலையில் ரத்த ஓட்டம் நன்றாக கிடைத்து முடி வளர உதவுகிறது. 

இந்த ஹேர் ஆயில் மசாஜ்க்கு பாதாம் எண்ணெய்  மற்றும் லாவண்டர் எண்ணெய் அதிக பலனை கொடுக்கும். லாவண்டர் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வந்தால் முடி பளபளப்பாக காட்சியளிக்கும். 

புதினா ஒரு குளிர்ச்சி மிகுந்த கீரை வகையாகும். தினா எண்ணெய் தலைக்கு பயன்படுத்துவதால் தலையும் உடலும் குளிர்ச்சி அடையும். 

இரண்டு ஸ்பூன் புதினா எண்ணெயுடன் இரண்டு ஸ்பூன் ஆலிவ் ஆயிலையும் கலந்து இரவு தலையில் பிலே செய்து மசாஜ் செய்து அப்படியே உறங்கவும். காலை சாதாரண நேரில் தலையை அலசவும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்து வந்தால் உடல் சூடு தணிந்து தலையும் குளிர்ச்சி அடையும் அதனால் முடி வளர உதவும்.

எலுமிச்சை சாறு சிறிதளவு எடுத்துக்கொண்டு அதற்கு சமமான அளவு தேனும் எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து தலையில் அப்ளை செய்து வரவும். இதுபோல செய்வதனால் முடி பலபலப்பாக தோற்றமளிக்கும்.

கட்டுரையைப் பகிர்க:
G

Go2Tamil

செய்தி ஆசிரியர் மற்றும் கட்டுரையாளர். சமூக, அரசியல் மற்றும் சினிமா நிகழ்வுகளை துல்லியமாகவும் விரைவாகவும் வாசகர்களுக்கு வழங்குவதில் வல்லவர்.

Get Notifications / செய்திகளைப் பெறுக

You can unsubscribe from notifications anytime.