இனி வீட்டிலிருந்தபடியே ஹேர் ஸ்பா செய்யலாம்! பார்லர் செலவு மிச்சம்! | hair spa at home without going parlour get home remedies in tamil | thalatech
hair spa at home without going parlour get home remedies in tamil: தலை முடியில் ஏற்படும் பொடுகு பிரச்சனை, முடி உதிர்தல், முடியின் நுனியில் ஏற்படும் பிளவுகள், முடி நுணுங்கி கொட்டுதல், முடி வளர தாமதமாகுதல், போன்ற பல பிரச்சனைகளுக்கு ஹேர் ஸ்பா மூலம் பல தீர்வுகள் உள்ளது. ஹேர் ஸ்பா செய்வதன் மூலம் முடி புத்துணர்வு பெற்று வலுவான முடியை பெறவும், மென்மையான
மற்றும் பளபளப்பான முடியை பெறவும் உதவுகிறது.
அழகு நிலையங்களுக்குச் சென்று ஹேர் ஸ்பா செய்வதால் பல நன்மைகள் உண்டு. ஆனால், அதைவிட அதிகமான செலவுகளும் ஏற்படும். இதற்காகத்தான் நாம் இயற்கை முறையில் வீட்டில் இருந்தபடியே ஹேர் ஸ்பா செய்து கொல்வதின் மூலம், செலவையும் குறைக்க முடிகிறது. மேலும் வேறு ஏதாவது பக்க விளைவுகள் வருமோ என்று பயப்பட வேண்டாம். இதனை hair spa at home without going parlour get home remedies in tamil என்ற தலைப்பில் பார்க்கலாம்.
வீட்டில் இருந்தபடியே, எப்படி இயற்கை முறையில் ஹேர் ஸ்பா செய்து கொள்வது? என்பதை பற்றி இப்போது பார்க்கலாம். இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள நல்ல பயிற்சி பெற்ற, தகுதியைப் பெற்ற, அழகு கலை நிபுணர்களிடம் சென்று உங்களின் முடி வகையை பற்றி தெரிந்து கொண்டு, அவற்றில் உள்ள பிரச்சனையை எடுத்துக் கூறி, பின்பு அதற்கேற்ற சரியான ஹேர் ஸ்பாவை தேர்ந்தெடுத்து, செய்து கொள்ளலாம். வீட்டில் இருந்தபடியே எப்படி ஹேர் ஸ்பா செய்யலாம் என்பதை ஸ்டெப் பை ஸ்டெப் இங்கு பார்க்கலாம்.
STEP 1: ஹேர் ஸ்பா செய்வதற்கு முன்பு உங்கள் முடிக்கு ஏற்ற ஷாம்புவை பயன்படுத்தி நன்றாக முடியை அலசிக் கொள்ளவும். உங்களுக்கு அதிக அளவில் பொடுகு இருந்தால் அதற்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பியூரிபையிங் ஷாம்புவை பயன்படுத்தி வாஷ் செய்து கொள்ளவும் பொடுகு தொல்லை இல்லாதவர்கள் டீடாக்ஸ் ஷாம்புவை பயன்படுத்தி நன்றாக வாஷ் செய்து கொள்ளவும்.
STEP 2: ஷாம்பூ பயன்படுத்தி குளித்த பிறகு உங்கள் முடிக்கு தேவையான கிரீம்களை அப்ளை செய்து கொள்ளவும். உங்கள் முடி லேசானதாகவோ அல்லது கனமானதாகவும் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து அழகுகளையும் நிபுணர்களிடம் கேட்டறிந்து முடியின் தன்மைக்கேற்ற கிரீம்களை தேர்வு செய்து கொள்ளவும். பார்லரில் கிடைக்கும் ஹேர் ஸ்பா கிரீம்கள் சில ஆன்லைனிலும் கிடைக்கிறது. அவற்றை பயன்படுத்தி ஹேர் ஸ்பா செய்து கொள்ளலாம்.

இயற்கை முறையில் எப்படி ஹேர் ஸ்பா செய்யலாம்:
ஹேர் ஸ்பா 1: தேங்காய்ப்பால் கிரீம்
படி 1 : முடியை நன்றாக சீவி, சிக்கல்கள் இல்லாமல் வாரி எடுத்துக் கொள்ளவும்.
படி 2 : ஏதேனும் ஒரு பாத்திரத்தில், (மண் பாத்திரங்களாகவும் அல்லது பித்தளை பாத்திரங்களாகவோ இருந்தால் மேலும் நல்லது) எடுத்துக்கொண்ட பாத்திரத்தில் முழுவதுமாக நீரூற்றி, நன்றாக அதனை கொதிக்க வைக்க வேண்டும். பின் கொதித்த அந்த தண்ணீரை, அடுப்பில் இருந்து இறக்கி, பாத்திரத்தை லேசாக இருக்கும் ஒரு துணியை கொண்டு, பாத்திரத்தின் வாயை கட்டிவிட வேண்டும். பிறகு அந்த துணியின் வழியே வரும் ஆவியை தலைமுடியில் நன்றாக காட்டி ஆவி பிடிக்க வேண்டும்.
படி 3 : அரை கப் அல்லது உங்கள் முடிக்கு ஏற்ற தேங்காய்க் க்ரீம் எடுத்துக்கொண்டு பின், முடிகளை வகுந்து, முடியிலும் ஸ்கேல்ப்பிலும் படுமாறு நன்றாக தேய்த்து, 5 அல்லது 10 நிமிடம் மசாஜ் செய்யவும்.
படி 4 : ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரமாவது நன்றாக முடியில் ஊற வைக்க வேண்டும்.
படி 5 : நன்றாக ஊழிய பின் உங்கள் முடிக்கு ஏற்ற ஷாம்பூ அல்லது சீயக்காயை கொண்டு தலையை வாஷ் செய்ய வேண்டும்.
தேங்காய்ப்பால் கிரீம் ஹேர் ஸ்பாவினால் கிடைக்கும் நன்மைகள்:
தேங்காய் கிரீம் இல் அதிக அளவு கொழுப்புச் சத்து புரதச்சத்து இரும்புச்சத்து இருக்கிறது. முடிக்குத் தேவையான விட்டமின்-இ இதில் அதிக அளவில் உள்ளதால், இதனை பயன்படுத்தி ஹேர் ஸ்பா செய்து கொள்வதன் மூலம், பொடுகு தொல்லை இல்லாமலும், முடி கொட்டுவது போகப் போக குறையும்.
இது முடியை ஈரப்பதமாக்கி முடி உதிர்வை தடுத்து முடியை மென்மையாக வளர உதவுகிறது.
ஹேர் ஸ்பா 2 : ஆலிவ் ஆயில்
படி 1: முதலில் உங்கள் முடியை நன்றாக சீவி சிக்கில்லாமல் எடுத்துக் கொள்ளவும்.
படி 2:உங்கள் முடிக்கு ஏற்ப ஆலிவ் எண்ணெய் ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு அதை கை விரல்களில் தொட்டு உச்சம் தலை முதல் முடியின் கீழ்ப்பகுதி வரை வரை நன்றாக தேய்த்து வட்ட வடிவில் மசாஜ் செய்யவும்.
படி 3 : மண் பாத்திரத்திலோ அல்லது பித்தளை பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து பின் அவற்றை இறக்கி அந்த பாத்திரத்தின் வாயை ஒரு லேசான துணியினால் கட்டி அதில் இருந்து வரும் ஆவியை முடியின் ஆழம் வரை நன்றாக இறங்கும்படி ஆவி பிடிக்கவும்.
படி 4 : பிறகு ஒரு மெல்லிய துணியை குளிர்ந்த நீரில் நன்றாக நினைத்து பிழிந்து அந்த துணியை முடியில் படும்படி லேசாக சுற்றி வைக்க வேண்டும்.
படி 5 : பத்து நிமிடம் இவ்வாறு செய்துவிட்டு பின்பு உங்கள் முடிக்கேற்ற ஷாம்பு அல்லது சீயக்காய் கொண்டு முடியை நன்றாக வாஷ் செய்யவும்.
ஆலிவ் எண்ணெய் மூலம் ஹேர் ஸ்பா செய்வது நன்மைகள்:
உச்சந்தலையில் ஏற்படும் அதிகப்படியான எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும். பொடுகு அரிப்பு போன்ற பிரச்சனைகள் வராது.
முடி நன்றாக வலுவடைந்து மென்மையாகவும் அடர்த்தியாகவும் வளர உதவுகிறது.
வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இது போன்ற ஹேர் ஸ்பா செய்வதனால் முடி உதிர்தல், பொடுகு பிரச்சனை, முடி பிளவு படுதல், பலவீனமான முடி போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வாக அமைகிறது.