உங்கள் முடி உதிர்வு உங்களை தொந்தரவு செய்கிறதா? | hair growth oil tips in tamil
அனைவருக்கும் நீளமான அடர்த்தியான பளபளப்பான மொழி இருக்க வேண்டும் என்ற ஆசையும் உண்டு செருக்கு அது பெரும் கனவாகவே இருக்கும். இப்படி நாம் ஆசைப்பட்ட முடியானது வளர்வதற்காக பல கெமிக்கல் ஷாம்புகளை பயன்படுத்துகிறோம் மேலும் விளம்பரங்களை பார்த்து வேதிப்பொருட்கள் நிறைந்த கலப்படம் செய்யப்பட்ட எண்ணெயை வாங்கி பயன்படுத்துகிறோம். இதுபோல கலப்பட எண்ணெயை பயன்படுத்துவதனால் முடி கொட்டுவதற்கும் மேலும் சில பக்க விளைவுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு. அதனால் எளிய முறையில்
நம் வீட்டிலேயே செய்யக்கூடிய எண்ணெய்களை எப்படி செய்ய வேண்டும் என்பதை இப்பதிவின் வழியாக காணலாம்.
வீட்டிலேயே தலைமுடிக்கான எண்ணெய் செய்யலாம்
நாம் அன்றாட பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயிலேயே சில பொருட்களை அல்லது வேறு வகையான எண்ணெய்களை கலந்து முடிக்கு ஆரோக்கியமாக தேவைப்படும் சத்துக்களை கொடுக்கக்கூடிய பொருட்களையும் சேர்த்து எண்ணெய் செய்யலாம்.நான் வீட்டிலேயே செய்யும் எண்ணையின் மூலமாக நமக்கு எந்த ஒரு பக்க விளைவும் ஏற்பட வாய்ப்பில்லை. மேலும் அந்த எண்ணை நாம் நீண்ட காலம் பயன்படுத்தலாம்.
லாவண்டர் எண்ணெயுடன் வெங்காயம்
லாவண்டர்எண்ணெய்யும் வெங்காயமும் இரண்டுமே தனித்தனியாக முடிக்கான பலனை தரும். லெவன்த் எண்ணெய்யும் வெங்காயத்தையும் சேர்த்து பயன்படுத்தினால் முடி உதிர்வை கட்டுப்படுத்தலாம். வெங்காயத்தில் உள்ள சல்பர் முடி உதிர்வை கட்டுப்படுத்தி முடியை வலுவுடன் வளர உதவுகிறது.
எண்ணெய் தயாரிக்கும் முறை:
உங்கள் தலைமுடிக்கு தேவையான சின்ன வெங்காயத்தை தோலை உரித்து அரைத்து அதன் சாரை பிரிந்து எடுத்துக் கொள்ளவும். நீங்கள் எடுத்துக் கொண்டு சாருடன் சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து இந்த கலவை உங்கள் தலையின் மேற்பகுதி நொடியின் நுனிப்ப அவளே முழுவதும் நன்றாக தேய்த்தாய் இந்த நிமிடம் அல்லது பத்து நிமிடம் மசாஜ் செய்யவும். பிறகு நீரினால் தலையை அலசவும். பயன்படுத்துவதை தவிர்க்கவும். சீயக்காய் கொண்ட தலையை அலசவும்.
எண்ணெயுடன் கருவேப்பிலை
தேங்காய் எண்ணெய் மற்றும் கருவேப்பிலை ஆகிய இரண்டும் சிறந்த பலனை கொடுக்கக்கூடிய ஒன்று. இவற்றுள் கருவேப்பிலையானது முடியை கரு கரு கரு என வளர உதவுகிறது. மேலும் முடி நிறைப்பதை முன்கூட்டியே தடுக்கும் வலிமை கருவைப் பிழைக்கு உண்டு. இவ்விரண்டையும் பயன்படுத்துவதன் மூலம் அடர்த்தியான கருமை நிற கூந்தலை பெற முடியும். இவற்றை பயன்படுத்தி எவ்வாறு எண்ணெய் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
எண்ணெய் தயாரிக்கும் முறை:
உங்களுக்கு எவ்வளவு கருவேப்பிலை கிடைத்தாலும் பரவாயில்லை. அவை அனைத்தும் நிச்சயம் பயன்படும். உங்களுக்கு கிடைத்த கருவேப்பிலையை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் இரண்டு கைப்பிடி கருவேப்பிலையாவது எடுத்துக் கொள்ளுங்கள். நல்ல வெயிலில் கருவேப்பிலையை காய வைத்து கொள்ளுங்கள். பிறகு 100 மில்லி லிட்டர் தேங்காய் எண்ணெயை நன்றாக இரும்பு கடாயில் கொதிக்க வைக்கவும். கொதித்த எண்ணெயில் காயவைத்த கருவேப்பிலையை சேர்த்து அடுப்பை அனைத்திடவும். எண்ணெய் நன்றாக ஆரிய பிறகு ஒரு துணியிலோ அல்லது வடிகட்டியிலோ வடிகட்டி கிளாஸ் பாட்டிலில் அல்லது நாள்தோறும் பயன்படுத்தும் எண்ணெய் பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். தினமும் இந்த எண்ணெயை தேய்த்து வந்தால் முடி கருகருவென நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும். அதிகப்படியான கருவேப்பிலை உங்களிடம் இருந்தால். அவற்றை காய வைத்து ஒரு டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளவும். கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் செய்து கொள்ளலாம் என்று நினைத்தவர்கள் என்றால். எண்ணெய் செய்யும் பொழுது மட்டும் தேவைக்கேற்ப கருவேப்பிலையை சிறிது நேரம் வெயிலில் காய வைத்து விட்டு பிறகு கொதித்து எண்ணெயில் சேர்த்து பயன்படுத்தவும்.
தேங்காய் எண்ணெயுடன் செம்பருத்தி பூ
பொதுவாகவே செம்பருத்தி பூ முடியை அடர்த்தியாக வளர்க்க உதவுகிறது. செம்பருத்திப் பூவை நாம் அரைக்கும் சீயக்காயில் சேர்த்து அரைத்து பயன்படுத்தலாம். முடி நரைப்பதை குறைக்கும் வலிமையும் செம்பருத்திப் பூவிற்கு உண்டு. செம்பருத்தி பூவையும் தேங்காய் எண்ணெயும் எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
எண்ணெய் தயாரிக்கும் முறை:
செம்பருத்தி பூவை அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் செம்பருத்தி பூ மிருதுவாக இருப்பதால் அதிகளவு தேவைப்படும். எடுத்துக்கொண்டு செம்பருத்தி பூவை வெயிலில் நன்றாக காய வைத்து கொள்ளுங்கள். ஒரு இரும்பு கடாயில் 100 எம்எல் தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு காய வைத்து எடுத்துக்கொண்ட செம்பருத்திப்பூவே அந்த எண்ணெயுடன் சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்த பிறகு எண்ணெயை நன்றாக ஆறவிடவும். ஆறிய பிறகு ஒரு துணியால் அல்லது வடிகட்டியால் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். வடிகட்டிய எண்ணையை ஒரு கண்ணாடி பாட்டிலில் அல்லது நீங்கள் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இந்த தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவி வர வேண்டும். இந்த எண்ணைக் காண முக்கிய குறிப்பு என்னவென்றால், செம்பருத்தி பூ மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து தயாரித்த எண்ணையை நாம் ஒவ்வொரு முறை பயன்படுத்தும் பொழுதும் குறைந்த தீயில் சூடு படுத்தி பிறகு பயன்படுத்தவும். இப்படி செய்வதனால் விரைவில் அதன் பலன் தெரியும்.
பாதாம் எண்ணெயுடன் வேப்ப இலை
வேப்ப இலையில் மற்றும் வேப்பம் பூவில் இயற்கையாகவே ஆண்டி ஆக்சிடென்ட் மற்றும் கொழுப்புகள் நிறைந்துள்ளன. மேலும் வேப்ப இலையில் உள்ள கசப்புத் தன்மை தலையில் உள்ள பொடுகுகளை முற்றிலும் போக்குவதற்கு வழி வகுக்கிறது. முடியை ஆரோக்கியமாக வளர்க்க இந்த வேப்ப இலை எண்ணெய் பயன்படுகிறது.
எண்ணெய் தயாரிக்கும் முறை:
வேப்ப இலை அதிகமாக எளிதில் கிடைக்கும். வேப்ப இலை மற்றும் வேப்பம்பூ கிடைத்தாலும் எடுத்துக் கொள்ளலாம். வேப்ப இலை மற்றும் வேப்பம் பூவை நன்றாக வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு இரும்பு கடாயில் பாதாம் எண்ணெயை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். என்னை கொதித்த பிறகு காய வைத்து எடுத்துக்கொண்ட வேப்ப இலையை சேர்க்கவும். குறைந்த தீயில் வைத்து கொதிக்க வைக்கவும்.நன்றாக கொதித்த பிறகு எண்ணையை வடிகட்டி,ஒரு கண்ணாடி பாத்திரத்தில் அல்லது ஏதேனும் ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொண்டு பயன்படுத்தவும்.
இந்த எண்ணையை ஒரு வாரம் அப்படியே வைத்து விடவும். ஒரு வாரத்திற்குப் பிறகு எண்ணையின் நிறமானது அடர்த்தியான பச்சை நிறத்திலோ அல்லது பிரவுன் இடத்திலோ இருக்கும். இப்பொழுது இந்த எண்ணெயை நீங்கள் பயன்படுத்தலாம் என்பதற்கான ஒரு அறிகுறி தான் இந்த நிறமாற்றம். இந்த எண்ணெயை தினமும் தலையில் தேய்த்து வந்தால் பொடுகு முற்றிலும் மறைந்து முடி ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
வீட்டில் செய்யக்கூடிய சிறந்த இயற்கை குறிப்புகள்
பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்குமே தங்களின் தலைமுடி பார்ப்பதற்கு பளபளப்பாகவும் அழகாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்பது ஆசை. இப்படி நமது ஆசைக்கேற்ப முடி இருக்க வேண்டுமென்றால் அதற்கு முடி ஆரோக்கியமாக இருக்க வேண்டும். முடி ஆரோக்கியமாக இருக்க கடைகளில் விற்கும் கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ அல்லது எண்ணைகள் பயன்படுத்துவதை விட நம் வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களைக் கொண்டு ஷாம்பூவும் செய்யலாம் எண்ணெயையும் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கருவேப்பிலை மற்றும் நெல்லிக்காய்
இரண்டு அல்லது மூன்று கைப்பிடி அளவு கருவேப்பிலையை நன்றாக வெயிலில் காயவைத்து 100 எம்எல் தேங்காய் எண்ணெயை நன்றாக கொதிக்க வைத்து, அந்த தேங்காய் எண்ணெயில் காயவைத்த கருவேப்பிலையை சேர்த்து குறைந்த தீயில் நன்றாக கொதிக்க. பிறகு இதை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். மற்றொரு பக்கம் நெல்லிக்காயை கசாயம் போல் செய்து கொள்ளவும். நெல்லிக்காயை வெயிலில் காய வைத்து அது நன்றாக காய்ந்து சுருங்கிய பின் நாம் எடுத்துக் கொண்ட எண்ணையுடன் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
இந்த எண்ணையை தலைக்கு குளிப்பதற்காக பயன்படுத்தலாம். வாரம் இரண்டு முறை இந்த எண்ணையை தலையில் தேய்த்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்துவிட்டு பிறகு அப்படியே வைத்து விடவும். 20 நிமிடங்களுக்கு அளித்து தலையை குளிர்ந்த நீரில் அலசவும். இவ்வாறு செய்வதனால் முடி கருமை நிறமாகவும் வளரும் மேலும் நெல்லிக்காய் சேர்த்துள்ளதனால் தலையில் உள்ள சூடு குறைந்து குளிர்ச்சி பெற்று ரத்த ஓட்டம் வேகமாக பரவி முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
தயிர் மற்றும் வெந்தயம் பேக் செய்யலாம்
புரதம் மற்றும் இன்ஸ்ட்ருஜன் போன்ற உயிர் சத்துக்களை கொண்டது வெந்தயம். இது போன்ற உயிர்சத்துக்கள் முடியின் வேர்களை வலுப்படுத்துகிறது. வெந்தயம் சளி மற்றும் சர்க்கரை நோய் போன்ற பல நோய்களுக்கு மருந்தாக இருப்பதனால் இது முடிக்கும் ஒரு சிறந்த ஹேர் பேக்காக உள்ளது.
இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் உங்கள் முடிக்கு ஏற்ப வெந்தயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். வெந்தயம் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். குறைந்தபட்சம் எட்டு மணி நேரம் வெந்தயம் ஓட வேண்டும். இரவு உறவைத்தான் மறுநாள் காலை குளிப்பதற்கு சரியாக இருக்கும். ஊறவைத்த வெந்தயத்துடன் தயிர் சேர்த்து நன்றாக மிக்ஸியில் ஒரு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும். அரைத்து எடுத்த முடியின் வேர் பகுதி முதல் நுனிப்பகுதி வரை நன்றாக தடவி ஒரு பேக் போல் செய்யவும். பிறகு 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை நன்றாக காய வைக்கவும். பிறகு வெதுவெதுப்பான நேரில் தலையை அலசவும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்து வந்தால் முடி ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் பலரும். முடி பார்ப்பதற்கு பளபளப்பாக அழகாகவும் இருக்கும்.

கருஞ்சீரகமும் தேங்காய் எண்ணெயும்
நம் உடலில் உள்ள நார்மல் ஹார்மோன்களை கட்டுப்படுத்தக்கூடிய இயற்கை பொருட்கள் மற்றும் முடியை வலிமை உடையதாகவும் நீளமான வளர்ச்சியாகவும் மாற்றுவதற்கான திறன் கொண்டது கருஞ்சீரகம்.
தேங்காய் எண்ணெயை ஒரு இரும்பு கடாயில் ஊற்றி தேவைக்கு ஏற்ப ஊற்றி நன்றாக குறைந்த சூட்டில் சூடு படுத்தி அதனுடன் கருஞ்சீரகத்தையும் சேர்த்து வெதுவெதுப்பாக சூடு படுத்தவும். வாரம் இரண்டு முறை மட்டுமே இந்த எண்ணெயை தலையில் தேய்த்து பரிசோதித்துப் பார்க்கலாம். கருஞ்சீரகம் வேகமாக முடியின் வளர்ச்சியை உங்களுக்கு காட்டும்.
புதினா மற்றும் கருவேப்பிலை
வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி நிறைந்த புதினாவானுக்கு தலைக்கு பயன்படுத்தும் பொழுது முடி உதிர்வை கட்டுப்படுத்தும். கருவேப்பிலை முடியை கருமையாக மாற்றும். மேலும் நரை முடியை வெள்ளையாக ஆரம்ப காலத்திலேயே மாற்றக்கூடிய திறன் கொண்டது. இவை இரண்டையும் சேர்த்து பயன்படுத்தலாம்.
புதினா மற்றும் கருவேப்பிலையை நன்றாக மை போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்து எடுத்த பேஸ்ட்டை தலையில் முடியும் வேர் பகுதி முதல் நுனிப்பகுதி வரை நன்றாக தேய்த்து ஒரு பத்து நிமிடம் மசாஜ் செய்துவிட்டு அப்படியே வைக்கவும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து சாதாரண நேரில் தலையை அலசவும். ஷாம்பூ பயன்படுத்தாமல் இயற்கை ஷாம்பூகளை பயன்படுத்தலாம். அல்லது சீயக்காய் பயன்படுத்தலாம்.
தேங்காய்ப்பால் ஹேர் மாஸ்க்
தேவையான பொருட்கள்:
- தேங்காய் பால்
- பாசிப்பயிறு
- தேன்
பாசிப்பயிரை முதல் நாள் இரவே ஊற வைக்க வேண்டும்.எடுத்துக்கொண்ட பாசிப் பயிரை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். குறைந்தது 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலை வாசிப்பை ஏற்றுடன் 50ml தேங்காய் பால் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். அரைத்து எடுத்த பேஸ்டுடன் இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தலை முடியை சிறு சிறு பகுதிகளாக பிரித்துக் கொண்டு முடியின் வேர் முதல் நுனிப்பகுதி வரை நன்றாக அப்ளை செய்யவும். பகுதிகளில் நன்றாக படும்படி அப்ளை செய்யவும். அப்படியே ஒரு 45 நிமிடங்கள் வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரினால் தலையை அலசவும். கெமிக்கல் ஷாம்பூகளை இதற்கு பயன்படுத்த வேண்டாம். எந்த ஒரு ஷாம்பூவும் தேவையில்லை. ஏனென்றால் பாசிப்பயிறு ஷாம்பூ போல வேலை செய்யும். இப்படி வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரம் ஒரு முறையாவது தேங்காய் பால் ஹேர் மாஸ்க் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முடி சில்கி தோற்றத்துடனும், அழகாகவும், நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.