முகப்பு / Hair Spa Remedy / hair growth tips in tamil home remedies | வீட்டில் செய்யக்கூடிய சிறந்த இயற்கை குறிப்புகள்
Hair Spa Remedy

hair growth tips in tamil home remedies | வீட்டில் செய்யக்கூடிய சிறந்த இயற்கை குறிப்புகள்

G
செய்தி ஆசிரியர்
Go2Tamil
05 Aug 2026, 08:30
2 பார்வைகள்
பகிர் :
hair growth tips in tamil home remedies | வீட்டில் செய்யக்கூடிய சிறந்த இயற்கை குறிப்புகள்

முடி உதிர்வு என்பது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆண்கள் பெண்கள் எனப் பாகுபாடுயின்றி அனைவருக்கும் ஏற்படக்கூடியது.இது இதனால் தான் ஏற்படும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை, சரியான தூக்கமின்மை, ஆரோக்கியமான உணவு உட்கொள்ளாமல் இருத்தல் அதிகப்படியான ரசாயனங்கள் கலந்த ஷாம்புவை உபயோகித்தல் எனப் பல காரணங்களினால் முடி உதிர்வு ஏற்படுகிறது.

இவ்வாறு ஏற்படக்கூடிய முடிவுகளை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

நம்

வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிய முறையில் வைத்தியம் பார்க்கலாம் அவ்வகையில் முடிந்து மக்களை வைத்து எளிமையாகவும் ஆரோக்கியமாகவும் நம் இழந்த முடியைப் பெறலாம் இதனால் நமக்குப் பக்க விளைவு எதுவும் ஏற்படாது. அதுமட்டுமில்லாமல் நாமே பார்த்துப் பார்த்து செய்வதினால் இது முழுக்க முழுக்க ஆரோக்கியமானது ஆகும்.

நாம் வாரத்திற்கு இருமுறை எனத் தலைக்கு நல்லெண்ணெய் வைத்துக் குளிக்க வேண்டும் ஆண்கள் என்றால் சனிக்கிழமையும் பெண்கள் என்றால் செவ்வாய் வெள்ளிகளையும் தலைக்கு எண்ணெய் வைத்துக் குளிக்க வேண்டும்.

தலைக்கு எண்ணெய் வைத்துக் குளிப்பதன் மூலம் நம் உடம்பில் உள்ள உஷ்ணம் நீங்கி உடல் புணர்ச்சி பெறும் இதனால் முடி உதிர்வு கட்டுப்படும்.

பண்டைய கால தமிழர் முறையில் வாரம் இருமுறை எண்ணெய் வைத்துக் குளிப்பது வழக்கமாகும் இது வளர்ந்து வந்த நவீன காலகட்டங்களில்

சோம்பேறித்தனம் பட்டுத் தலையில் எண்ணெய் வைத்துக் குளிப்பதை பெரும்பாலான தவிர்த்து விட்டனர். ஆனால் தலைக்கு எண்ணெய் வைத்துக் குளிப்பது தலை முடி உதிர்வை தடுப்பதில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது.

hair growth tips in tamil home remedies
hair growth tips in tamil home remedies in tamil

வீட்டில் உள்ள விளக்கெண்ணெய் மற்றும் வெந்தயத்தை வைத்து முடி உதிர்வதை தவிர்க்கலாம் ஒரு வானலில் மூன்று கரண்டி விளக்கெண்ணெய் நன்றாகச் சூடு செய்ய வேண்டும் அதில் இரண்டு மேஜை கரண்டி வெந்தயத்தை போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி அதைத் தலையில் ஊற வைத்துச் சீயக்காய் அல்லது ஷாம்பு போட்டுத் தலை குளித்தால் முடி உதிர்வை தவிர்க்கலாம்

உடம்புக்கு குளிர்ச்சியாக இருப்பவர்கள் விளக்கெண்ணெய் ஒன்றியத்தைப் பயன்படுத்துவதே தவிர்க்கவும் ஏனென்றால் இது அவர்களுக்குப் பக்க விளைவு ஏற்படுத்தும்.

hair growth tips in tamil home remedies

  முடி உதிர்வதை தவிர்ப்பதற்கு ஹேர் மசாஜ் மிகவும் அவசியமானது ஆகும். தலையில் உள்ள முடியை வளர முக்கியமாகச் செய்ய வேண்டியது தலையின் ரத்த ஓட்டத்தை வேகப்படுத்துவது ஆகும்.

தினமும் சிறிதளவு தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ,பாதாம் எண்ணெய் என எந்த வகையான எண்ணெய் இருந்தாலும் சற்று எடுத்துத் தலையில் தடவி நன்றாக பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் ஹேர் மசாஜ் செய்து வந்தால் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க இதனால் முடி வளர்ச்சியைத் தூண்டும்.

மசாஜ் செய்வதற்காகச் சில முறைகள் உள்ளது தலையில் ஸ்கேல்ப் தான் மசாஜ் செய்ய வேண்டும் அதுவும் வட்ட வடிவில் தான் மசாஜ் செய்ய வேண்டும் பத்து முதல் 15 நிமிடங்கள் செய்யலாம்.

நகங்களை வைத்துத் தலையை அழுத்தமாகத் தைக்கவும் சொறியவோ கூடாது அது தலையில் காயங்களை ஏற்படுத்தும் அது மட்டுமல்லாமல் ஸ்கேல்பில் காயங்களை ஏற்படுத்தும் இதனால் முடி வளர்ச்சியையும் தடுக்கும் மசாஜ் செய்யும்பொழுது பார்த்துச் செய்ய வேண்டும்

பொழுது நவீன முறைகளில் ஆர் மசாஜ் செய்யும் முறைகளும் வந்துவிட்டது இதனால் நாம் இயந்திரங்கள் மூலமாகவும் ஹேர் மசாஜ் செய்து கொள்ளலாம்.

இயற்கை கண்டிஷனை பயன்படுத்தினால் முடி அழகாகவும்  ஆரோக்கியமாகவும் மற்றும் பளபளப்பாகவும் இருக்கும்

நாம் ரசாயன முறையான கண்டிஷனர்களை பயன்படுத்தும்பொழுது முடி வறட்சியாகவும் ஆரோக்கியம் இல்லாமல் இருக்கும் இதில் முடிக்கு மட்டும் பாதிப்பு இல்லை நமக்கும் தான் பாதிப்பு. இதனால் நாம் இயற்கையான கண்டிஷனரை பயன்படுத்தி முடியை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாற்றலாம்.

அனைவர் வீட்டிலும் இருக்கக்கூடிய ஒன்று கற்றாழை. கற்றாழையை நாம் கண்டிஷனராகப் பயன்படுத்தலாம் பயன்படுத்தி நம் முடி உதிர்வதை குறைக்கலாம் மற்றும் முடிவு ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வளர்க்க செய்யலாம்.

கற்றாழை ஒரு நல்ல கண்டிஷன் இயற்கையாகவே கொழகொழப்பு தன்மை கொண்டது கற்றாழை கற்றாழை ஜெல் எனத் தனியாக வாங்கி பயன்படுத்துவதை முடிந்த வரை தவிர்க்கலாம் ஏனென்றால் கற்றாழை சில மாதங்களுக்குக் கெடாமல் இருக்க சில ரசாயனங்கள் பயன்படுத்துவார்கள் அதனால் கடையில் வாங்கும் பொருட்களைத் தவிர்த்து வீட்டிலே செடி வளர்ப்பு அதிலிருந்து நாம் கற்றாழையை பயன்படுத்தலாம்.

கற்றாழையை செடியிலிருந்து பறித்து. துண்டுகளாக வெட்டி அதில் உள்ள சதைகளை எடுத்து மிக்ஸியில் நன்கு அரைத்துத் தலையில் தேய்த்து நன்கு மசால் செய்து 15 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் முடி பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும் இதை வாரத்திற்கு இரு முறை பயன்படுத்தலாம்.

குளிர்ச்சி உடம்பு கொண்டவர்கள் இது மாதத்திற்கு இரு முறை பயன்படுத்தினால் மட்டுமே போதும்.

வெந்தயமும் ஒரு இயற்கை ஆன கண்டிஷனர்.வெந்தயத்தை  இரவே  ஊறவைத்து காலையில்  நன்றாக  மிக்ஸில் அரைத்து தலைக்குத் தேய்த்துக்குளித்து வந்தால் முடி பளபளப்பாகயிருக்கும்.

குறிப்பு : குளிர்ச்சி உடம்பு கொண்டவர்கள் வெந்தியம் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

hair growth tips in tamil home remedies
hair growth tips in tamil home remedies

வெங்காயச் சாற்றில் உள்ள பைட்டோ கெமிக்கல் சேர்மங்கள் முடி வளர்ச்சியைத் தூண்ட உதவும். இதில் உள்ள அலோபீசியா அரேட்டாவுக்கு மேற்பூச்சு சிகிச்சைகு சிறந்த மருந்துதாகயிருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

வெங்காயச் சாறு குழாய் நீரை விட அலோபீசியா அரேட்டாவைச் சமாளிக்க சிறப்பாகச் செயல்படுகிறதா என்பதை இந்த ஆய்வு சோதித்தது,

இரண்டு குழுக்கள் இருந்தன, அதில் 23 பேர் வெங்காயச் சாற்றையும் 15 பேர் குழாய் நீரையும் பயன்படுத்தினர், இரண்டு மாதங்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை அதைப் பயன்படுத்தினார்கள்.

வெங்காயச் சாறு குழுவில், 17 பேர் (73.9%) நான்கு வாரங்களுக்குப் பிறகு முடி மீண்டும் வளர்ந்தது, மேலும் 20 பேர் (86.9%) ஆறு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் முடி வளர்ந்தது, ஆண்கள் (93.7%) பெண்களைவிட (71.4%) சிறப்பாகப் பதிலளித்தனர்.

குழாய் நீர் குழுவில், எட்டு வாரங்களுக்குப் பிறகு 2 பேர் (13%) மட்டுமே முடி மீண்டும் வளர்ந்தது.

வெங்காயச் சாறு, குழாய் நீரை விட முடி மீண்டும் வளர மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

hair growth tips in tamil home remedies

வேப்பிலை செம்பருத்தி இலை செம்பருத்தி பூக்கருவேப்பிலை இவற்றை நன்றாகத் தண்ணீரில் கழுவி ஒரு மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

இந்த நன்றாக அரைத்த கலவையில் ஹேர் மாஸ்க்காகப் பயன்படுத்தி தலையில் 15 - 20 நிமிடங்கள் ஊற வைத்து தலைக்குக் குளித்து வந்தால் தலையில் உள்ள முடி வலிமை பெறும் மற்றும் அழகாகவும் நீளமாகவும் பளபளப்பாகவும் வளரும்.

வாரம் இருமுறையென மூன்று மாதங்களுக்கு இவற்றைப் பயன்படுத்தினால் முடி வலிமைப்பெற்று அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும்.  

மேலும் சில குறிப்புகள்

 தலை ஈரம் ஆக இருக்கும் பொழுது சிக்கு எடுத்தல் கூடாது

அனைவரும் செய்யக்கூடிய ஒரு முக்கியமான தவறு ஏத்த உடன் சீர்படுத்து தலையைச் சீப்பு எடுப்பது இது மிகவும் தவறானது ஏனென்றால் பிறகு நம் தலையில் சற்று பலவீனமாக இருக்கும் அப்பொழுது நம் சிப்பை பயன்படுத்தினால் அதிகப்படியான முடி உதிர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது எனவே நன்கு காயவைத்த பிறகு தலையைச் சிக்கு எடுக்க வேண்டும்.

காய வைத்தபிறகு சிக்கிய எடுத்தால் அதிகப்படியான முடி உதிர்வை தவிர்க்கலாம்.

ஈரமான முடியை ஹேர் டிரையர் கொண்டு உலர வைத்தல் கூடாது வேகமாக முடி காய வேண்டும் என்பதற்காக இப்பொழுது அனைவரும் ஏஹேர் டிரையரை பயன்படுத்துகிறார்கள் அது மிகவும் ஆபத்தானது.

ஹேர் டிரையர் பயன்படுத்துவது இப்பொழுது மிகவும் சாதாரணமாக இருக்கிறது ஆனால், இதனால் ஏற்படக்கூடிய விளைவு அதிகம் ஏனென்றால் இதில் வரும் சூடான காற்று நம் தலையில் உள்ள ஒரு வகையான எண்ணெய் தன்மையை நீக்கி முடியை வறட்ச்சியாக்கும் பின்பு இதன் காரணமாக நமக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்கும் எனவே ஹேர் டிரையரை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

கட்டுரையைப் பகிர்க:
G

Go2Tamil

செய்தி ஆசிரியர் மற்றும் கட்டுரையாளர். சமூக, அரசியல் மற்றும் சினிமா நிகழ்வுகளை துல்லியமாகவும் விரைவாகவும் வாசகர்களுக்கு வழங்குவதில் வல்லவர்.

Get Notifications / செய்திகளைப் பெறுக

You can unsubscribe from notifications anytime.