7 front hair growth tips in tamil | முன் முடி உதிர்வால் அவதிப்படுகிறீர்களா?
முடி உதிர்தல் என்பது ஆண் பெண் இருபாலருக்கும் உள்ள பொதுவான ஒரு பிரச்சனை.முடி உதிர்தலை தடுக்க பல வழிமுறைகளை நமது தல டெக் இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளோம். முடி உதிர்வதை தடுக்க பல ஷாம்பூக்கள் உள்ளது. ஆனால் அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்வு கட்டுக்குள் வந்ததா என்று பயன்படுத்தியவர்களிடம் கேட்டால் அதற்கு பதில் இல்லை என்று தான் கூறுவார்கள். தலையில் முடி கொட்டுவதை பெரிய பிரச்சினையாக பார்க்கப்படும் அவற்றிலும்
நெற்றியில் மேல் உள்ள முடி உதிர்ந்தால் தலை வழுக்கையாக இருப்பது போலவும் நெற்றி பெரிதாக அகண்டு இருப்பது போலவும் காட்சி அளிக்கும். அதனால் நெற்றியின் முன் உள்ள முடி உதிர்வதை பெரிய மன உளைச்சல் ஆக பார்ப்பார்கள். இந்த நெற்றி முன்முடி உதிர்தலை தடுக்க பல இயற்கை வழிமுறைகள் உள்ளன இவற்றை பின்பற்றுவதன் மூலம் தலையின் முன்முடி உதிர்தழை தடுத்து முடி வளர வைக்க முடியும்.
வீட்டில் கிடைக்கும் வெறும் நான்கு பொருட்களைக் கொண்டு முன் நெற்றியில் கொட்டும் அல்லது கொட்டிய முடியை திரும்ப பெற முடியும்.
ஹேர்பேக் 1 :
தேவையான பொருட்கள்
கருவேப்பிலை இலை அல்லது பொடி
பூண்டு
சின்ன வெங்காயம்
விளக்கெண்ணெய்
செய்முறை : உங்கள் முடிக்கு தேவையான அளவு சின்ன வெங்காயம், பூண்டு எடுத்துக் கொள்ளவும். கருவேப்பிலை பச்சையாக உள்ள இலையை எடுத்துக் கொண்டாலும் சரி அல்லது காய்ந்த கருவேப்பிலை இலையாக இருந்தாலும் சரி அல்லது கருவேப்பிலை பொடியாக இருந்தாலும் சரி இவற்றில் ஏதேனும் ஒரு கருவேப்பிலையை எடுத்துக்கொண்டு மேலே கொடுக்கப்பட்டுள்ள சின்ன வெங்காயம் பூண்டுடன் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த பேஸ்டை தனி ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொண்டு அதை ஒரு காட்டன் துணியிலோ அல்லது வடிகட்டிலோ வடிகட்டி அதன் சாரி மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளவும். இந்த சாறுடன் சிறிதளவு ஒன்று அல்லது இரண்டு டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இயற்கையான ஒரு ஹேர் பேக் நமக்கு ரெடி. இந்த ஹேர் பேக்கை தலையில் ஸ்கேட் முதல் நுனி வரை நன்றாக மசாஜ் செய்யவும் நெற்றியில் மேல் உள்ள முன்முடி கொட்டிய இடத்திலும் முன்முடி லேசாக இருக்கும் இடத்திலும் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்யவும். வாரத்திற்கு ஒருமுறை செய்தால் போதும். அல்லது மாத இரண்டு முறை செய்தால் போதும். ஏனென்றால் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு ஆகிய இரண்டும் அதிக சத்துக்களைக் கொண்டது.அதிக அளவில் பூண்டு சேர்க்கக் கூடாது.
ஹேர் ஆயில் செய்யலாம் வாங்க!
நெற்றியில் முன் பகுதியில் உள்ள முடி கொட்டி நெற்றி ஏறிக்கொண்டே போகிறதா? பார்ப்பதற்கு வழுக்கை போல் காட்சியளிக்கிறதா? இனி அந்தப் பிரச்சனை உங்களுக்கு இல்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே நாம் ஹேர் ஆயில் செய்யலாம். இந்த ஹேர் ஆயிலை தினமும் பயன்படுத்தி வந்தாள் நெற்றியின் முன் உள்ள முடி வளர்வதை கண்கூடாக பார்க்கலாம். வாருங்கள் இப்பொழுது ஹேர் ஆயில் செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
சின்ன வெங்காயம்
கருவேப்பிலை
நெல்லிக்காய்
வேப்பிலை
மருதாணி
தேங்காய் எண்ணெய்
செய்முறை :
முதலில் ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை வேப்பிலை மருதாணி இலை ஆகிய மூன்றையும் எடுத்துக் கொள்ளவும். மூன்றும் இளையாக இருந்தாலும் பரவாயில்லை பொடியாக இருந்தாலும் பரவாயில்லை. மூன்றையும் நன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு இதனுடன் சின்ன வெங்காயம் மற்றும் நெல்லிக்காய் இவை இரண்டும் முடித்து ஏற்றவாறு எடுத்துக் கொள்ளவும். அரைத்த பொடியுடன் இவற்றையும் சேர்த்து ஒரு பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்து எடுத்துக் கொண்டு இந்த பேஸ்ட்டை ஒரு துணியில் அல்லது வடிகட்டிலோ நன்றாக வடிகட்டி, அதன் சாறை தனியாக எடுத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு இரும்பு கடாய் எடுத்து அடுப்பில் வைக்கவும். கடாய் சூடாகும் முன்பே தேங்காய் எண்ணெயை அரை லிட்டர் அளவு கடாயில் ஊற்றிக் கொள்ளவும். பிறகு எண்ணெய் நன்றாக சூடானதும்,நாம் அரைத்து வடிகட்டி வைத்த சாற்றை என்னுடன் ஊற்றி கொள்ளவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து 20 முதல் 25 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். 25 நிமிடங்கள் கழித்து அடுப்பை ஆஃப் செய்துவிட்டு எண்ணையை இறக்கி வைக்கவும். கடாயில் உள்ள எண்ணெய் நன்றாக ஆற வைக்கவும். எண்ணெய் நன்றாக ஆறிய பிறகு அதை ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொண்டாலும் நல்லது.
இந்த எண்ணையை தினமும் தலைக்கு தேய்த்த கொள்ள வேண்டும். ஸ்பிரே பாட்டிலில் உற்றிய எண்ணெயை தலையில் ஸ்பேஸ் செய்து கொண்டாலும் நல்லது. இவ்வாறு தினமும் செய்து வந்தால் முன் நெற்றியில் கொட்டிய முடி விரைவில் மீண்டும் வளர ஆரம்பிக்கும். முடி கொட்டுதலும் நிற்கும்.
உணவு முறையை மாற்றுங்கள்!
தலையில் மட்டுமல்ல நெற்றியின் முன் உள்ள முடியும் கொட்டுவதற்கு ஒரு முக்கிய காரணம் ஊட்டச்சத்துக் குறைபாடு. நம் அன்றாட உணவு முறையை மாற்றினாலே முடி பிரச்சனை மட்டுமல்ல உடலில் ஏற்படும் பல பிரச்சனைக்கு இந்த ஒரு மாற்றம் நல்ல தீர்வை தரும். ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் ஜங்க் ஃபுட்டுக்களை தவிர்ப்பது நல்லது. உடனடியாக தவிர்க்க முடியாது என்பதுதான் உண்மை.. ஆனால் குறைத்துக் கொள்வது நிச்சயமாக முடியும்.நெற்றியில் முன்முடி வளர சில உணவு முறைகளை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவை என்னென்ன என்பது தற்பொழுது காணலாம்.
வைட்டமின்கள் நிறைந்த பலன்களை எடுத்துக் கொள்ளலாம்
பப்பாளி பழம், ஆப்பிள்.ஆரஞ்சு, நெல்லிக்காய் ஆகியவை வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி நிறைந்தது. இந்த பழங்களை தினந்தோறும் எடுத்துக்கொண்டால் மிக நல்லது.
இரும்புச்சத்து நிறைந்த கீரை வகைகளை உட்கொள்ளுங்கள்
நம் முடி வளர இரும்புச்சத்து மிக முக்கியம். அவை எளிதில் நமக்கு கிடைக்கும். அன்றாடம் நம் வாழ்நாளில் கிடைக்கக்கூடிய கீரைகளில் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் அவற்றை சாப்பிடலாம் நம்மால் முடியவில்லை. நிறைய சாப்பிடவில்லை என்றாலும் சரி தினமும் ஏதோ ஒரு வகையான கீரையை மருந்து சாப்பிடுவது போல் நினைத்துக் கொண்டாவது கண்ணை மூடி சிறிதளவு சாப்பிட வேண்டும். அவற்றுள் மிக முக்கியமான இரும்புச் சத்துக்களை கொண்ட கீரை வகைகளை காணலாம்.
முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, அகத்திக்கீரை ஆகியவை நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய கீரை வகைகள். ஆகும். இவற்றை சிறிதளவு தினமும் எடுத்துக் கொள்ளலாம். மேலும் முக்கியமானது கருவேப்பிலை. கருவேப்பிலையை பச்சையாக சாப்பிடலாம். வெறும் வயிற்றில் காலையில் கருவேப்பிலையை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது நான்கு இலைகள் சாப்பிட்டாலே போதும் வெகு விரைவில் முடி வளர்வதை காணலாம்.
புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்
முட்டை, மீன், கோழி இறைச்சி, பருப்பு வகை உணவுகள் அதாவது பாதாம் பிஸ்தா வால்நட்ஸ் முந்திரி போன்ற பருப்பு மற்றும் கொட்டை வகைகளை சாப்பிடலாம் .சோயாபீன் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகள் நிறைய உள்ளன அவற்றை தினமும் எடுத்துக் கொண்டால் நெற்றியில் முன் உள்ள முடி உதிர்வை தடுக்கலாம்.