முகப்பு / Hair Spa Remedy / 11 Food for hair growth and thickness | முடி வளர்ச்சிக்கும் அடர்த்திக்குமான சிறந்த உணவுகள்
Hair Spa Remedy

11 Food for hair growth and thickness | முடி வளர்ச்சிக்கும் அடர்த்திக்குமான சிறந்த உணவுகள்

G
செய்தி ஆசிரியர்
Go2Tamil
08 Aug 2026, 02:00
2 பார்வைகள்
பகிர் :
11 Food for hair growth and thickness | முடி வளர்ச்சிக்கும் அடர்த்திக்குமான சிறந்த உணவுகள்

முடி வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பது ஊட்டச்சத்து. ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் நாம் என்ன செய்தாலும் முடி உதிர்தலை தடுக்க முடியாது. ஊட்டச்சத்து குறைபாடை தடுக்கவும் முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யவும் நாம் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான செயல் நம் அன்றாட உணவு பழக்க வழக்கத்தை மாற்றி அமைப்பது. தற்போதைய நவீன காலகட்டத்தில் நம் உணவு பழக்க வழக்கம் என்பது தலைகீழாக மாறிவிட்டது அதாவது மெதுவாக நன்றாக மென்னு

சாப்பிட வேண்டிய உணவுகளை அவசர அவசரமாக செய்து சரியாக மென்னு சாப்பிடாமல் வேகமாக சாப்பிட்டு நம் அன்றாட வேலையை பார்க்க செல்கிறோம். சத்துள்ள உணவுப் பொருட்களை சமைத்து சாப்பிட நேரமில்லாத காரணத்தினால் எளிதில் கிடைக்கும் ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் ஜங்க் ஃபுட் போன்றவற்றை சாப்பிடுகிறோம். இவற்றை எப்பொழுதாவது சாப்பிட்டால் பரவாயில்லை. ஆனால் தினந்தோறும் சாப்பிட்டு வருகிறோம். இது போன்ற உணவுகள் தீங்கு விளைவிக்கிறது என்பதோடு எளிதில் செரித்து விடுவதனால் நாம் மீண்டும் அவற்றை உடனடியாக சாப்பிட ஆவல் கொள்கிறோம். இது போன்ற உணவு பழக்க வழக்கம் உடல் உள்ளுறுப்பு கோளாறுகள் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைக்கும் வழி வகுப்பதோடு தலைமுடி கொட்டுவதற்கும் இளநிலை ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொண்டாள் முடி கொட்டும் பிரச்சனையிலிருந்து விடுபடலாம் என்பதையும் எவ்வாறு இழந்த முடியை திரும்ப பெறலாம் என்பதையும் இனி விரிவாக காணலாம்.

கீரை வகைகள் உடலுக்கு மட்டுமின்றி முடிக்கும் நன்மை தரும். முடி வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கீரை வகைகளில் உண்டு. கீரைகளில் அதிக அளவு நார்ச்சத்து இயற்கையாக கொண்டுள்ளதால் கீரையை உண்பதனால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும் மேலும் முடி உதிர்தலும் குறையும். 

முடியின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவையான ஜிங்க் மற்றும் அயன் சத்துக்கள் கீரைகளில் உள்ளதால்,முடியை வலுவாக  வளர உதவுகிறது.

 கீரைகளில் அதிக அளவு அயன் சத்து உடையது முருங்கைக்கீரை. முருங்கைக் கீரையில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் முடியின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கிறது.முருங்கைக் கீரையில் உள்ள ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் முடியின் வேர்களைபலப்படுத்தி முடியை வளரவும்முடி இளநிறையாக வளர்வதை தடுத்து கருமை நிற முடி வளரவும் உதவுகிறது.முருங்கைக் கீரையில் அலர்ஜியற்ற சேர்மங்கள் இருப்பதனால் இது தலைமுடியில் ஏற்படக்கூடிய பொடுகு பிரச்சனையை தீர்க்க வழி வகுக்கிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதிக முடி கொட்டும் பிரச்சனை உடையவர்கள் இந்த பீட்ரூட்டை உணவாக எடுத்துக் கொள்ளலாம். பீட்ரூட்டில் உள்ள லைகோபீன் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. பொதுவாகவே சிவப்பு நிறங்களைக் கொண்ட காய்கறிகள் உடலுக்கு மட்டுமின்றி முடிக்கு மிக நல்லது. இளநிறை உள்ளவர்கள் இந்த பீட்ரூட்டை இயற்கை ஹேர் டை யாக பயன்படுத்தலாம். எந்த ஒரு பக்க விளைவும் கிடையாது. பீட்ரூட்டை சமைத்து சாப்பிட்டாலும் பச்சையாக சாப்பிட்டாலும் பலன் உண்டு. பீட்ரூட்டை சிறு துண்டுகளாக கட் செய்து நன்றாக அரைத்து அதன் சாரை பிழிந்து ஹேர் டை ஆக பயன்படுத்தலாம்.பீட்ரூட்டை முடியின் ஸ்கேல்பகுதிகளில் அரைத்து தேய்த்து  வருவதால் முடியின் வேர் வலுவடையும்.

Food for hair growth and thickness

கேரட்டில் பயோடின் மற்றும் வைட்டமின் பி7  உள்ளதால் இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. அதிலும் பயோட்டின் என்பது முடியின் வளர்ச்சிக்கு உதவும் ஒரு டானிக் என்றே சொல்லலாம். 

முடி வளர்ச்சிக்கு தேவையான பீட்டா  கரோட்டின்  இயற்கையாகவே அதிக அளவு கேரட்டில் உள்ளது. கேரட்டை பச்சையாக சாப்பிடுவதாலும் அல்லது வேகவைத்து சாப்பிடுவதாலும் அதில் உள்ள வைட்டமின் முழுமையாக நம் ரத்தத்தில் சென்றடைவதால் இது முடி வளர தூண்டுகிறது. 

தலைமுடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர கருவேப்பிலை பெரிதும் பங்கு வகிக்கிறது.கருவேப்பிலையை காலையில் வெறும் வயிற்றில் 5 முதல் 6 இவைகளை மென்று சாப்பிட்டால் தலைமுடி கருமையாக வளரும். கருவேப்பிலையை சாப்பிடுவது மட்டுமின்றி  அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கவும் செய்யலாம். மேலும்  வெதுவெதுப்பாக கொதிக்கும் தேங்காய் எண்ணெயில் கருவேப்பிலையை சேர்த்து லேசாக சூடேற்றி அந்த எண்ணையை தினமும் தலையில் தேய்த்து வரலாம். இதுபோல செய்வதால் முடி உதிர்தல் குறைந்து வளரும் மூடி அடர்த்தியாகும் கருமையாகவும் வளரும்.

வெள்ளரிக்காயின் தோலில் சல்பர் மற்றும் சிலிக்கான் அதிக அளவில் உள்ளது.வெள்ளரிக்காயை அரைத்து தலையில் தடவி மசாஜ் செய்து தலையை அலசலாம் வெள்ளரிக்காய் உடல் சூட்டை தணிப்பதோடு தலையின் சூட்டையும் தணிக்கிறது. இதனால் சூடு தணிந்து முடி வளர வெள்ளரிக்காய் உதவுகிறது.வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் உடலில் உள்ள சூடு குறைகிறது. வெள்ளரிக்காயின் விதையும் குளிர்ச்சியை தரும். இதனால் முடி உதிர்வது குறைகிறது.

நம் அன்றாட உணவில் தேங்காய் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் தேங்காய் முடி நரைத்தலை கட்டுப்படுத்தும் என்பது பலருக்கும் தெரியாத ஒரு உண்மை. தேங்காய் முடி வளர பயன்படும் தேங்காய் எண்ணெயும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தேங்காய் நரைமுடியை குறைக்கும் வல்லமை பெற்றது என்பது பலருக்கும் தெரியாது.

அக்காலத்திலிருந்து தற்பொழுதே காலகட்டம் வரை வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து ஷாம்புவிற்கு பதிலாக பயன்படுத்தி வருகின்றனர். வெந்தயம் தலையில் தேய்த்து குளிப்பதால் என்ன பயன் தருமோ அதே பயன் வெந்தயத்தை சாப்பிட்டாலும் கிடைக்கும். வெந்தயம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும் என்பது தெரியும். ஆனால் அதே வெந்தயம்  சாப்பிட்டால் முடி உதிர்தல் குறையும் மேலும் முடி வளர உதவும் என்பது பலருக்கும் தெரியாது.வெந்தயம் உடம்பில் ஏற்படும் வாதத்தை சரி செய்கிறது. வெந்தயம் உட்கொள்வதனால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என்பது போல முடி வளர்ச்சிக்கு உதவுகிறது என்பதும் எலும்புகளுக்கு நல்லது என்பது உண்மை. உடல் எடை குறைக்கவும் வெந்தயம் சாப்பிடலாம்.

பாதாம் உட்கொள்வதனால் முடிக்க தேவையான வைட்டமின் ஈ, ஒமேகா 3 முடிக்க தேவையான பயோடின் கிடைக்கிறது. பாதாம் உடலில் உள்ள வாதத்தை சீராக அமைப்பதால்  நம் தலைமுடி  வறட்சி அடையாமல் ஈரப்பதத்துடன் இருக்க உதவுகிறது. தினமும் இரண்டு அல்லது மூன்று பாதாம்களை காலையில் உட்கொண்டால் உடல் எடையும் குறையும் மேலும் சத்துக்களும் கிடைக்கும் முக்கியமாக முடி உதிர்தல் குறையும்.

நெல்லிக்காய் ஒரு சிறந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் என்பது அனைவருக்கும் தெரியும். இது முடியின் வளர்ச்சியை தூண்ட செய்கிறது. முடி நரைப்பதை ஆரம்பத்திலேயே தவிர்க்க நெல்லிக்காய் பெரும் பங்கு வகிக்கிறது. தலையில் ஏற்படும் பொடுகு மற்றும் ஏதேனும் வளர்ச்சி பிரச்சனை இருந்தால் நெல்லிக்காய் அதற்கு ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. 

கற்றாழை நன்றாக தண்ணீரில் கழுவி சிறிது நேரம் வைத்து விட்டு பிறகு மீண்டும் கழுவி சிறு துண்டுகளாக கட் செய்து அவற்றை அரைத்து சாப்பிடுவதால் இளநீரை சரியாகும். கற்றாழையை தலையில் தேய்த்து குளிப்பதனால் முடி பளபளப்பாக காட்சியளிக்கும் நல்ல வளர்ச்சியும் கொடுக்கும்.  கற்றாழை கசப்பின் ராஜாவாகத்தான் இருக்கும், இருப்பினும் அவற்றை பொறுத்துக் கொண்டு சிறிதளவு மட்டும் உட்கொண்டால் இளநீரை ஆரம்பத்திலேயே எளிதில் கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம்.

 பாசிப்பயறு நன்றாக ஊற வைத்து அரைத்து  தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி நன்றாக வளரும். முடி பார்ப்பதற்கு பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் காணப்படும். மேலும்  முடிவளர்ச்சி பெற  பாசிப்பயிறு உதவுகிறது.பாசிப்பயிறு அதிக புரதம் கொண்டது.  பாசிப்பயிரிலிருந்துஎடுக்கப்படும் பால் அதிக புரதம் கொண்டதாக உள்ளது இதனையும் தலையில் தேய்த்து வரலாம் உட்கொண்டாலும் நல்லது. பாசிப்பயிறு ஊறவைத்து முளைகட்டிய  பின் அவற்றை உட்கொண்டால் அவற்றில் உள்ள புரதங்கள் முழுமையாக நமது உடலுக்குள் சேர்கிறது. இதன் மூலம் முடியும் வளர்ச்சி அடைகிறது. 

கட்டுரையைப் பகிர்க:
G

Go2Tamil

செய்தி ஆசிரியர் மற்றும் கட்டுரையாளர். சமூக, அரசியல் மற்றும் சினிமா நிகழ்வுகளை துல்லியமாகவும் விரைவாகவும் வாசகர்களுக்கு வழங்குவதில் வல்லவர்.

Get Notifications / செய்திகளைப் பெறுக

You can unsubscribe from notifications anytime.