முகப்பு / Hair Spa Remedy / உங்கள் முடி உதிர்வதால் கவலையாக இருக்கிறதா? | fast hair growth tips in tamil home remedies
Hair Spa Remedy

உங்கள் முடி உதிர்வதால் கவலையாக இருக்கிறதா? | fast hair growth tips in tamil home remedies

G
செய்தி ஆசிரியர்
Go2Tamil
07 Aug 2026, 02:00
2 பார்வைகள்
பகிர் :
உங்கள் முடி உதிர்வதால் கவலையாக இருக்கிறதா? | fast hair growth tips in tamil home remedies

இழந்த முடியை மீண்டும் பெறுவதற்காக அனைத்து வகையான ஷாம்பு வகைகளையும் பயன்படுத்தியவர்களிடம் சென்று முடி உதிர்வு குறைந்ததா என்று கேட்டால் இல்லை என்று தான் கூறுவார்கள். மருத்துவரிடம் சென்ற முடி உதிர்வுக்கான ஆலோசனை பெற்று வந்தவர்களிடமும் சென்று முடி உதிர்தல் குறைந்துள்ளதா என்று கேட்டால் அவர்கள் கூறும் பதிலும் இல்லை என்று தான். காரணம் முடி உதிர்தலுக்கு பல காரணங்கள் உள்ளன ஷாம்பூவை மாற்றுவதாலோ அல்லது டாக்டர்களை மாற்றி ஆலோசனை

கேட்பதோ இதற்கு தீர்வு அல்ல நம் அன்றாட உணவு பழக்கம் பழக்கங்களை மாற்றி அமைப்பதும் அன்றாட வாழ்க்கை முறையை மாற்றியமைப்பதுமே முக்கிய காரணம்.

 விரைவாக கொட்டும் முடி விரைவாக வளர்வதில்லை. கொட்டிய முடி மீண்டும் வளர்வதற்கு சில நாட்கள் ஆனால் பரவாயில்லை ஆனால் பல வருடங்களானால்? சற்று யோசித்துப் பாருங்கள். இழந்த முடியை விரைவாக மீண்டும் பெறுவதற்கு சில இயற்கையான வீட்டு முறை வைத்தியங்கள் உள்ளன. இவற்றை பின்பற்றுவதால் இழந்த முடி விரைவாக பெறலாம். இரண்டு மடங்கு அதிகமாகவும் பெறலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ்களை பின்பற்றினால் போதும் இழந்த முடியை வேகமாக பெறலாம்.

தலையில் உள்ள முடி வளர முக்கியமாக செய்ய வேண்டியது  தலையின் ரத்த ஓட்டத்தை  வேகப்படுத்துவது. இதன் மூலம்  முடி வேகமாக வளர தூண்டப்படுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த ஹேர் மசாஜ் செய்வது நல்லது. 

 சிறிதளவு எலுமிச்சை சாறுடன் டீ ட்ரீ  ஆயில் அல்லது  புதினா எண்ணெய் கலந்து. கைவிரல்களால் எடுத்து தலையின் ஸ்கேன் பகுதிகளில் நன்றாக மசாஜ் செய்யவும்.விரல்களால் நன்றாக வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை இவ்வாறு செய்துவிட்டு. பிறகு அப்படியே ஒரு 25 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரை விட்டு விடவும். பின்பு சாதாரண நேரில் தலையை அலசவும். கெமிக்கல் நிறைந்த ஷாம்புக்களை தவிர்க்க முடியவில்லை என்றாலும் குறைத்துக் கொள்ள முயற்சிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் வேகமாக கிடைக்கிறது. முடி வளர்ச்சி பெற தூண்டப்படுகிறது. 

முடியின் நுனிப்பகுதியில் ஒரு முடி  இரண்டாக பிளவு பட்டிருக்கும்.இவ்வாறு பிளந்து உடைந்துள்ள முடி மேலே உள்ள முடி மேலும் வளர விடாது. முடியின் வளர்ச்சியை தடுக்கவே இந்த பிளவுபட்ட முடி உண்டாகும். அதனால் பிளவுபட்ட முடியை வெட்டுவது நல்லது.

 மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருமுறையாவது முடியின் நுனியில் உள்ள பிளவு பட்ட முடியை வெட்டி விடுங்கள். இப்படி வெட்டி விடுவதனால் இருக்கின்ற முடி மேலும் அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர்வதற்கு வழி வகுக்கிறது. இந்தப் பிளவு பட்ட முடியை வெட்டுவதால் ஆரோக்கியமான முடி வளர துண்டப்படுகிறது. 

தினமும் அல்லது வாரம் தோறும் ஷாம்பூ பயன்படுத்துவதால் முடி வறட்ச்சியாக தோற்றமளிக்கும்.  கேல்ப் பகுதிகளில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது. வறண்ட முடி ஒரு நல்ல தோற்றத்தை கொடுக்காது. அதுமட்டுமில்லாமல் கெமிக்கல் ஷாம்புக்கல் மற்றும் கண்டிஷனர்கள் முடி கொட்டுவதற்கு ஒரு காரணமாக அமைகிறது. அதனால் இயற்கை கண்டிஷனை பயன்படுத்துங்கள். இயற்கையான கண்டிஷனர்கள் என்ன இருக்கின்றது என பலருக்கு தெரியாது. ஆனால் பல இயற்கை கண்டிஷனார்கள் இருக்கிறது என்பதுதான் உண்மை. 

கற்றாழை ஒரு நல்ல கண்டிஷனர். இயற்கையாகவே கொளகொளப்பு தன்மையை கொண்டது கற்றாழை. கற்றாழை ஜெல் என தனியாக வாங்கி பயன்படுத்துவதை விட, கற்றாழை செடி ஒன்று வைத்து அதன் கற்றாழையை அவ்வப்போது வெட்டி பயன்படுத்தி கொண்டால் மாற்றம் வெகு விரைவில் தெரியும். 

வெந்தயம் ஒரு இயற்கை கண்டிஷனர்தான். வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் காலை நன்றாக பேஸ்ட் ஆக அரைத்து அதனை தலையில் தடவி அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் நன்றாக தலையை உலர விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் தலையை அலசி வந்தால், வெந்தயத்தின் வாசனை பக்கத்தில் உள்ளவர்களையே ஈர்க்கும். மேலும் வெந்தயம் ஒரு சிறந்த  நறுமணம் நிறைந்த  இயற்கை ஷாம்பு ஆகவும் மற்றும் இயற்கையான கண்டிஷனராகவும் பயன்படுகிறது.

முடிக்கு முக்கியமானது கெரட்டின். முட்டையின் வெள்ளை கருவை பயன்படுத்துவதன் மூலம் இந்த கேரட்டின் நமக்கு கிடைக்கிறது. முட்டையில் புரதம் உள்ளதால் இது முடியும் வளர்ச்சிக்கு உதவுகிறது. 

ஒரு பவுலில் முட்டையின் மஞ்சள் கருவை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த முட்டையை நன்றாக அடிக்க வேண்டும். முறையாக கிரீமாக காட்சியளிக்கும் வரை நன்றாக முட்டையை அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த க்ரீம் உடன் சிறிதளவு தயிர் சேர்த்துக் கொண்டு நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். ஈரமான தலைமுடியில் இந்த முட்டை பேக்கினை அப்ளை செய்து ஐந்து நிமிடம் மசாஜ் செய்துவிட்டு பிறகு சாதாரண நேரில் தலையை அலசவும். தயிர் சேர்த்துக் கொண்டதால் முட்டையின் வாடை இருக்காது. இது போன்ற மாஸ்கை மாதம் ஒருமுறை தவறாமல் செய்து வந்தால் முடி வேகமாக வளரும்.

ஒரு இரும்பு கடாயில் 2 டீஸ்பூன் வெந்தயம் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் ஐம்பது எம் எல் அல்லது 25 எம்எல் விளக்கெண்ணெயும் மற்றும் தேங்காய் எண்ணெயும் எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணையை வெந்தயத்துடன் சேர்த்து அடுப்பில் நன்றாக கொதிக்க வைக்கவும். மிதமான தீயில் உனது குறைந்த தீயில் வைத்து கொதிக்க வைக்கவும். வெந்தயம் பொன்னிறமாகும் வரை கொதிக்க வைத்துவிட்டு. பிறகு எண்ணெயை தனியாக எடுத்து ஆற வைக்கவும்.  கை பொறுக்கும் அளவு சூடு வந்த பிறகு ஒரு வெதுவெதுப்பான நிலையில் அந்த எண்ணெய் இருக்கும்பொழுது விரல் நுனியில் தொட்டு தலையின் ஸ்கேல்பு முடியின் வேர் பகுதி முடியின் நுனிப்பகுதி வரை நன்றாக தேய்த்து மசாஜ் செய்யவும். எண்ணெயை கொதிக்க வைத்தபிறகு எண்ணெய் ஆனது அதன் பிசுபிசுப்பு தன்மையை இழந்து விடும். அதனால் கொல கொலப்பு தன்மை இருக்காது. 20 அல்லது 25 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். பிறகு சாதாரண நேரில் முடியை நன்றாக அலசவும் சீயக்காய் அல்லது ஹெர்பல் ஷாம்பூ பயன்படுத்தி  அலசவும். இவ்வாறு செய்வதன் மூலம் முடியின் இரத்த ஓட்டம் சீராக கிடைக்கும். முடி வளர ஒரு தூண்டுதலும் கிடைக்கும். முடியும் வேகமாக வளரும். 

தலை குளித்துவிட்டு வந்த பிறகு ஈரமான முடியை சீப்பை கொண்டு சீவ வேண்டாம். முடி ஈரமாக இருக்கும் பொழுது வலிமையற்றதாக இருக்கும். இதனால் சீப்பை கொண்டு சீவும் பொழுது முடி சீப்பின் பற்களோடு கழன்று வந்துவிடும்.

 ஈரமான முடியை ஹேர் டிரையர் கொண்டு உலர வைக்கக்கூடாது. வேகமாக முடி காய் வேண்டும் என்பதற்காக இன்றைய காலகட்டத்தில் ஹேர் டிரைவர் பயன்படுத்துவது ஒரு சாதாரண விஷயமாக உள்ளது. ஆனால் முடி உதிர்தலுக்கு இந்த ஹேர் டிரையர் ஒரு முக்கிய காரணம். ஹேர் டிரையர் இல் இருந்து வரும் செயற்கையான வெப்பம் முடியை வலுவிழக்கச் செய்யும். முடிந்தவரை ஹேர் டிரையர் பயன்படுத்துவதை குறைத்துக்கொண்டு. வீட்டில் இருக்கும் பொழுது முடியை சாதாரண  வெயிலிலோ அல்லது வீட்டின் வெப்பநிலையிலையோ காய வைக்க வேண்டும்.

 முடி ஈரமாக இருக்கும் பொழுது எண்ணெய் தேய்க்க கூடாது. அதாவது லேசாக ஈரம் இருந்தால் கூட தலையில் எண்ணெய் வைக்கக் கூடாது. சிலர் குளித்துவிட்டு தலையை துவட்டி விட்டு லேசாக ஈரம் இருந்தால் பரவாயில்லை என்று தேங்காய் எண்ணெய் தேய்ப்பார்கள். அவ்வாறு தேய்க்கக்கூடாது. வீரத்தில் எண்ணெய் தேய்த்தால் பூஞ்சைகள் உருவாக வாய்ப்புள்ளது. அதாவது பங்கஸ் உருவாக வாய்ப்புள்ளது. இந்த பங்கு முடி உதிர்வை மேலும் அதிகப்படுத்தும்.

 ஷாம்பு பயன்படுத்துபவர்களா நீங்கள்? அப்படி என்றால் இது உங்களுக்கான ஒரு முக்கியமான டிப்ஸ். ஷாம்புவை நேரடியாக முடியில் பயன்படுத்தக் கூடாது. நாம் எடுத்துக் கொண்ட ஷாம்பூவின் அளவைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக தண்ணீர் சேர்த்து நன்றாக தண்ணீரில் ஷாம்பூ கரையும் படி செய்துவிட்டு பிறகு அந்தத் தண்ணீரை தலையில் தேய்த்து அலச வேண்டும். நேரடியாக ஷாம்புவை முடியில் பயன்படுத்துவதால் அது பல பிரச்சனைகளையும் பின் விளைவுகளையும் கொடுக்கும்.

கட்டுரையைப் பகிர்க:
G

Go2Tamil

செய்தி ஆசிரியர் மற்றும் கட்டுரையாளர். சமூக, அரசியல் மற்றும் சினிமா நிகழ்வுகளை துல்லியமாகவும் விரைவாகவும் வாசகர்களுக்கு வழங்குவதில் வல்லவர்.

Get Notifications / செய்திகளைப் பெறுக

You can unsubscribe from notifications anytime.