முகப்பு / Hair Spa Remedy / இந்த மூன்று டிப்ஸ் போதும்,முடி உதிர்தல் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்! | 3 best hair mask for hair fall doing at home explained in tamil
Hair Spa Remedy

இந்த மூன்று டிப்ஸ் போதும்,முடி உதிர்தல் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்! | 3 best hair mask for hair fall doing at home explained in tamil

G
செய்தி ஆசிரியர்
Go2Tamil
05 Aug 2026, 02:00
3 பார்வைகள்
பகிர் :
இந்த மூன்று டிப்ஸ் போதும்,முடி உதிர்தல் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்! | 3 best hair mask for hair fall doing at home explained in tamil

best hair mask for hair fall doing at home explained in tamil:உங்கள் வீட்டில் நாள்தோறும் இருக்கும் காய்கறிகளை கொண்டு ஹேர் மாஸ்க் போட்டு வந்தால் போதும், முடி உதிரும் தொல்லை இனி உங்களுக்கு இல்லை! முடி உதிர்வது பெண்களுக்கு மிகப்பெரிய ஒரு பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.அதே பெண்கள் நாள்தோறும் சமைக்க பயன்படுத்தும் காய்கறிகளில் முடி கொட்டுவதற்கான தீர்வு உள்ளது என்பது தெரியாமல் போய்விட்டது. எந்தெந்த காய்கறிகளை

எப்படி பயன்படுத்தினால் முடி உதிரும் பிரச்சனையிலிருந்து விடுபடலாம் என்பதை காணலாம்..

=> benefits of hair spa in Tamil பற்றி தெரிந்துக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

முடி கொட்டுவதை நிறுத்தும் தீர்வு வெங்காயத்தில் உள்ளது.  இது பலருக்கு தெரியும். ஆனாலும் வெங்காயத்தின் வாசனை  பிடிக்காததால் அதை தலைக்கு பயன்படுத்த விரும்பமாட்டார்கள். முடி கொட்டுவதை நிறுத்தவும் வெங்காயத்தின் வாடையை போக்கவும் தீர்வு இருக்கிறது. அதிக அளவு சல்பர் சத்தை  கொண்டது வெங்காயம். சின்ன வெங்காயத்தை  உங்கள் முடிக்கு  ஏற்ப அளவுக்கு எடுத்துக் கொள்ளவும்.

Best hair mask for hair fall at home

 அதை தோலுடன் மிக்சியில் அரைத்து ஒரு துணியில் அதன் சாரை பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

 வெங்காயத்தின் வாடை போக அதில் சிறிதளவு பன்னீர் சேர்த்துக் கொள்ளலாம். 

அரைத்த வெங்காய ஜூஸ் உடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து, சிறிதளவு பன்னீரும் சேர்த்து நன்றாக கலந்து, முடி வேர்களிலும் முடியிலும் படுமாறு நன்றாக வட்ட வடிவில் தேய்த்து  ஐந்து முதல் பத்து நிமிடம் வரை நன்றாக மசாஜ் செய்யவும்.  அதிகபட்சம் ஒரு மணி நேரம் வரை  நன்றாக தலையில் ஊற வைக்கவும்.

பின்னர், சாதாரண நேரில் தலையை அலசவும். வெங்காயத்தில் இருக்கும் சல்பர் சத்து, முடி உதிர்வதையும், முடி நுணுங்கி உடைதலையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

ஒன்று அல்லது இரண்டு உருளைக்கிழங்கை உங்கள் முடிக்கு ஏற்ற அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு ஜூஸாக்கி, அந்த ஜூஸுடன் முட்டையின் மஞ்சள் கரு, தேன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி, அதை முடியிலும் ஸ்கால்ப்பிலும், நன்றாக தடவி ஐந்து நிமிடம் வட்ட வடிவில் மசாஜ் செய்யவும்.

Best hair mask for hair fall at home

அரை மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும் பின்பு தலையை குளிர்ந்த நீரில் அலசவும். வாரம் ஒரு முறை இதுபோல செய்யும். 

உருளைக்கிழங்கில் அதிக அளவு  புரதம் உள்ளது. இந்த உருளைக்கிழங்கு ஹேர் மாஸ்க் செய்வதினால் முடியின் வேர்கள் நன்றாக வலுப்படுத்த உதவுகிறது.

கருவேப்பிலை ஒரு நல்ல ஆன்ட்டி ஆக்சிடென்ட்  ஏஜென்ட்ஆக செயல்படுகிறது. கருவேப்பிலையை பச்சையாக சாப்பிடுவது உடலுக்கும் நல்லது, முடிக்கும் நல்லது. கருவேப்பிலை முடி  வளர பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் முடியை கருகருவென மற்றும் தன்மை கொண்டது கருவேப்பிலை.

Best hair mask for hair fall at home - curry leaves hair pack

 முடித்து ஏற்ற அளவு கருவேப்பிலையே எடுத்து 10 அல்லது 15 நிமிடம் தண்ணீரில் நன்றாக ஊற வைக்கவும். பின்பு அதை ஊறவைத்த தண்ணீர் உடன் சேர்த்து அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் அப்படியே விடவும். இந்த தலையை  அலசிவிட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக செய்ய வேண்டும். இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால்   முடியின் வளர்ச்சியை விரைவில் காணலாம். 

முடியை வலுவாக வைக்க விட்டமின் ஏ தேவை. கேரட்டில் விட்டமின் ஏ அதிக அளவில் உள்ளதால், இதை சாப்பிட்டாலும் நல்லது, முடிக்கு அப்ளை செய்வதும் நல்லது. ஒன்று அல்லது இரண்டு கேரட்டை நன்றாக வேக வைத்து, வேகவைத்த அந்த தண்ணீருடன் சேர்த்து நன்றாக அரைத்து அல்லது மசித்து அந்த பேஸ்ட்டை தலையில் அப்ளை செய்யவும். அரை மணி நேரம் கழித்து நன்றாக குளிர்ந்த நேரில் அழைக்கவும். இரண்டு முறை இதுபோல செய்வதினால் முடி வலுவாக மாறும்.

கட்டுரையைப் பகிர்க:
G

Go2Tamil

செய்தி ஆசிரியர் மற்றும் கட்டுரையாளர். சமூக, அரசியல் மற்றும் சினிமா நிகழ்வுகளை துல்லியமாகவும் விரைவாகவும் வாசகர்களுக்கு வழங்குவதில் வல்லவர்.

Get Notifications / செய்திகளைப் பெறுக

You can unsubscribe from notifications anytime.