அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான கூந்தலைப் பெற ஹேர் ஸ்பா செய்யுங்கள்! இதனால் நன்மைகள் பல! | Benifits of hair spa in tamil | thalatech
Benifits of hair spa in tamil:முடி வளர்ச்சிக்கான சிகிச்சைகள் முக்கியமான ஒன்று ஹேர் ஸ்பா. தற்போதைய காலகட்டத்தில் முடி உதிர்தல், பொடுகு, பொலிவிழந்த முடி, வறண்ட மற்றும் பிளவுபட்ட முடி போன்ற பல முடி சம்பந்தமான பிரச்சனைகளை நாள்தோறும் எதிர்கொள்கின்றனர். ஹேர் ஸ்பா செய்வதன் மூலம் உச்சந்தலை நன்கு ரிலாக்ஸ் செய்யப்பட்டு இரத்த ஓட்டத்தை சீரான நிலையில் வைக்க உதவுகிறது. வீட்டில் இருந்தபடியே இயற்கை முறைப்படி பல
வழிகளில் ஹாட்ஸ்பாட் செய்து கொள்ளலாம்.
ஹேர் ஸ்பா செய்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்:
எந்த வகையான முடித்தோற்றத்தை கொண்டவர்களும் ஹேர் ஸ்பா செய்து கொள்ளலாம்.பொதுவாக ஹேஸ்பா செய்வதனால் முடி நல்ல நீர் ஏற்றத்தைக் கொண்டிருக்கும். பலவகையான ஹேர் ஸ்பாக்கள் உள்ளன. அழகு நிலையங்களுக்குச் சென்று உங்களின் முடி வகையை காண்பித்து நிபுணர்களிடமிருந்து உங்களுக்கேற்ற ஹேர் ஸ்பாவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
ஹேர் ஸ்பா செய்வதன் மூலம் முடிக்கான ரத்த ஓட்டம் வேகமாக கிடைக்கிறது.
போதுமான ரத்த ஓட்டம் உச்சந்தலைக்கு கிடைக்காததால், முடிக்கு தேவையான நியூட்ரிஷியன் போதுமான அளவு கிடைக்காது. இதனால் முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்ட முடி பொலிவான தோற்றத்தை இழக்கிறது. மசாஜ் செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் வேகமாக கிடைத்து இது போன்ற பிரச்சனைகளை தடுக்க வழி வகுக்கிறது.

முடியின் வேர்களை பலப்படுத்துகிறது :
முடியின் வேர்பகுதி மற்றும் முடியின் நுனி ஆகிய இரண்டும் ஈரப்பதத்துடன் இருப்பது அவசியம். ஈரப்பதம் குறைய குறைய முடி நுனியில் பிளந்து உதிர ஆரம்பிக்கிறது. இதனால் முடி பலவீனம் ஆகி ஊட்டச்சத்தை இழந்து அதிக முடி உதிர்வை உண்டாக்குகிறது.ஹேர் ஸ்பா செய்வதன் மூலம் முடி ஈரப்பதம் ஏற்படுத்திக் கொள்கிறது. இதனால் முடி உதிர்வும் குறைகிறது.
உதிர்ந்த முடியை மீட்க ஹேர் ஸ்பா உதவுகிறது:
உதிர்ந்த முடியை மீட்க சேதம் அடைந்த முடியை சரி செய்ய ஹேர் ஸ்பா ஒரு சிறந்த தீர்வாகும். முடி இழந்த ஈரப்பதத்தை மீட்டு முடியை ஹைட்ரேட் செய்ய ஹேர் ஸ்பா உதவுகிறது.
பொடுகை நீக்குகிறது:
முடி உதிர்வதற்கு முக்கிய காரணங்களில் முதல் காரணமாக பார்க்கப்படுவது பொடுகு. ஹார்மோன் மாற்றங்கள் காலநிலை மற்றும் மன அழுத்தம் போன்ற உடல் ரீதியான மற்றும் மனரீதியான பிரச்சனைகளை பொடுகுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. ஹேர் ஸ்பா செய்வதனால் பொடுகு பிரச்சனையிலிருந்து வெளிவரலாம். இது மன அழுத்தத்தையும் குறைக்கிறது.
மென்மையான முடியை பெற உதவுகிறது:
ஹேர் ஸ்பா செய்வதன் மூலம் முடியின் வேர்கள் வலுப்பெறுகிறது. இதனால் உச்சந்தலையில் சுரக்கக்கூடிய அதிகப்படியான எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. வலுவிழந்த முடியை மீட்க மற்றும் பொலிவான மென்மையான முடியை பெற இந்த ஹேர் ஸ்பா உதவுகிறது.
முடியில் உள்ள மாசு மற்றும் அடுக்கு நீக்குகிறது :
முடியின் வேர்களில் தங்கக்கூடிய அழுக்குகள் மற்றும் மாசுகளை நீக்க ஹேர்ஸ்பா உதவுகிறது. இந்த மாசுக்கள் முடி உதிர்வுக்கு பெரிய பங்காற்றுகிறது. இதனால் முடியின் வேர்கள் பலவீனமடைந்து முடி உதிர்வை அதிகப்படுத்துகிறது. உங்கள் முடிக்கு ஏற்ற ஸ்பாக்களை தேர்வு செய்வதன் மூலம் இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

மென்மையான மற்றும் மிருதுவான கூந்தலை பெற ஹேர் ஸ்பா செய்து கொள்வது மிக அவசியம். உதிர்ந்த முடியை பெறவும், இருக்கின்ற முடி அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் வளர ஹேர் ஸ்பா உதவுகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்கி முடிக்கு ஈரப்பதத்தை ஏற்றி முடியை ஹைட்ரேட் செய்ய வழிவகுக்கிறது. எந்த வகையான கூந்தலை கொண்டவர்களாக இருந்தாலும் ஹேர் ஸ்பா செய்து கொண்டால் முடிக்கு மட்டுமின்றி மனரீதியாகவும் பல நன்மைகள் உண்டு.