முகப்பு / Hair Spa Remedy / Best Banana Hair Mask For Frizzy Hair under 3 minutes | சுருக்கமான முடியை கட்டுப்படுத்துவதற்கான மிகச்சிறந்த தீர்வு
Hair Spa Remedy

Best Banana Hair Mask For Frizzy Hair under 3 minutes | சுருக்கமான முடியை கட்டுப்படுத்துவதற்கான மிகச்சிறந்த தீர்வு

G
செய்தி ஆசிரியர்
Go2Tamil
07 Aug 2026, 08:30
12 பார்வைகள்
பகிர் :
Best Banana Hair Mask For Frizzy Hair under 3 minutes  | சுருக்கமான முடியை கட்டுப்படுத்துவதற்கான மிகச்சிறந்த தீர்வு

முகம் பளபளப்பாக மற்றும் அழகாக காட்சியளிக்க மாஸ்க் வகைகள் பல பயன்படுத்துகிறோம். அதுபோல நம் தலைமுடி பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்க பல வகையில் மாஸ்குகள் உள்ளன. சுருக்கமாகவும் வறண்டு காணப்படும் முடியை யாரும் விரும்ப மாட்டார்கள். அனைவருக்கும் தங்கள் முடி பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.இப்படி பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான முடியை பெறுவதற்கு பல இயற்கை மாஸ்குகள் உள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிமுறைகளை முழுமையாக படித்து

அவற்றை ட்ரை செய்து பாருங்கள். பிறகு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!

தலைமுடி வளர்ச்சியாக காணப்பட முக்கிய காரணம் முடிக்க தேவையான ஊட்டச்சத்து கிடைக்காதது. எப்படி வறண்ட முடியை பளபளப்பாக ஊட்டச்சத்து மிகுந்த முறையாக மாற்றும் தன்மை கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தை பயன்படுத்துவதன் மூலம் அதன் பயனை உடனே தெரிந்து கொள்ளலாம். முகம் பளபளப்பாக இருக்க வாழைப்பழ தோலை அல்லது பழத்தை முகத்தில் தேய்ப்பார்கள். அதுவே மிக பரப்பளப்பாக காட்சியளிக்கும். இதுவே வாழைப்பழத்தை வறண்ட தலைமுடியில் தேய்த்து குளித்தால் முடி பளபளப்பாக ஊட்டச்சத்துடன் இருப்பதை உடனடியாக உணரலாம். வாழைப்பழத்தை  எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்பதனை கீழே தெளிவாக பார்க்கலாம் வாங்க.

வாழைப்பழத்தை தலைமுடிக்கு அப்ளை செய்வது ஒரு சிறந்த செயலாகும். இது பல நன்மைகளை தரும். இதன் பலனை தெரிந்து கொள்ள பலமுறை பயன்படுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரு முறை பயன்படுத்தினாலே முடியில் ஏற்படும் மாற்றத்தை தெளிவாக காணலாம். பிறகு தினமும் பயன்படுத்த வேண்டாமா? என்றால், பயன்படுத்தலாம். தினமும் வாழைப்பழத்தை தலையில் ஹேர் மாஸ்க்காக அப்ளை செய்து வந்தால் தலைமுடி பொலிவாகவும் மென்மையாகவும் காணப்படும். நீண்ட நாள் வரை  தெளிவாகவும் மென்மையாகவும் இருக்க வேண்டும் என்றால் வாரத்திற்கு நான்கு முறை பயன்படுத்தி வந்தால் அதன் ரிசல்ட் வெகு நாட்கள் காட்சியளிக்கும். ஆக மொத்தத்தில் வாழைப்பழம் ஒரு நல்ல இயற்கையான கண்டிஷனர் என்றே சொல்லலாம்.

மேலே கொடுக்கப்பட்டுள்ளது போல வாழைப்பழம் ஒரு நல்ல  கண்டிஷனராக பயன்படுகிறது. வாழைப்பழத்தை நாம் தலைமுடிக்கு அப்ளை செய்து வருவதால் தலையில் ஏற்படும் பொடுகு அரிப்பு ஏதேனும் அலர்ஜி பிரச்சனை இது போன்ற  பிரச்சனைகள் குறைவதை கண்கூடாக பார்க்கலாம். 

உச்சந்தலையில் தேவைப்படும் நீர் சத்துக்கள் இந்த வாழைப்பழம் மூலம் நமக்கு கிடைக்கும். வாழைப்பழத்தை உச்சந்தலையில் அப்ளை செய்வதன் மூலம் முடியின் வேர்பகுதிகள் சுத்தம் செய்யப்படுகிறது. அதில் உள்ள அழுக்குகள் போக்கப்படுகிறது. இதன் மூலம் நம் உச்சந்தலைக்குத் தேவையான நீர் சத்துக்கள் கிடைக்கிறது. 

வாழைப்பழம் மாஸ்க் 1 : வாழைப்பழம் 1 மற்றும்  தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன்.

நன்கு பழுத்த வாழைப்பழத்தை மசித்து எடுத்துக் கொள்ளவும் அல்லது மிக்ஸியில் அரைத்து ஒரு ஸ்மூத்தி பதத்திற்கு எடுத்துக் கொள்ளவும். முடி அடர்த்தியாகவும் அதிகமாகவும் உள்ளவர்களால் நீங்கள் அப்படி என்றால் ஒரு வாழைப்பழம் எடுத்துக் கொள்வதை விட இரண்டு வாழைப்பழம் எடுத்துக் கொள்ளலாம். வாழைப்பழம் அளவு என்பது உங்கள் முடிக்கு ஏற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். 

அரைத்து எடுத்துக்கொண்ட வாழைப்பழ பேஸ்ட் உடன் ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து தலை முடியை பகுதிகளாக பிரித்துக் கொண்டு, ஒவ்வொரு பகுதிகளில் உள்ள முடியின் வேர் பகுதி முதல் நுனிப்பகுதி வரை நன்றாக அப்ளை செய்யவும். பிறகு விரல் நுனியால் மசாஜ் செய்யவும் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் போதுமானது. பிறகு ஒரு 20 முதல் 25 நிமிடம் வரை அப்படியே உலர விடவும். வெதுவெதுப்பான அல்லது சாதாரண நேரில் தலையை சீயக்காய் கொண்டு அலசவும். முடிந்த அளவு கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளை தவிர்ப்பது நல்லது. இந்த ஹேர் மாஸ்கை முதல் முறை செய்து பார்த்தாலே பெரிய மாற்றத்தை காணலாம். பிறகு நீங்களே அதை வாரத்திற்கு இரண்டு முறையும் மூன்று முறையோ செய்து பார்ப்பீர்கள். அந்த அளவுக்கு ஒரு நல்ல ரிசல்ட்டை தரும். 

அதிக ஹீலிங் பண்புகளை கொண்ட தேங்காய் எண்ணெயுடன் கொழுப்பு அமிலம் நிறைந்த வாழைப்பழத்தை சேர்த்து தேய்ப்பதனால் முடியின் வேர்பகுதியில் நன்கு ரத்த ஓட்டம் தூண்டப்படுகிறது இதனால் முடி பலபலப்புடனும் காட்சியளிக்கும் நன்றாகவும் வளரும். 

 கற்றாழைச் செடியிலிருந்து கற்றாழையை எடுத்துக் கொள்ளவும். கடையில் விற்கும் கற்றாழை ஜெல்லையும் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை விட இது போன்ற இயற்கையாக நாம் எடுத்து பயன்படுத்துவதால் அதன் நன்மை  வெகு விரைவில்நமக்கு தெரியும். கற்றாழையை அறுத்தவுடன் அதிலிருந்து மஞ்சள் நிற திரவம் ஒன்று வரும். அந்த  கற்றாழையை தண்ணீரில் நன்றாக கழுவி விட வேண்டும். அந்த மஞ்சள் நிற திரவம் இருக்கக் கூடாது. சிறிது நேரம் அதை அப்படியே வைத்தாலே இந்த மஞ்சள் நிற திரவம் போய்விடும். பிறகு அவற்றை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். அந்த மஞ்சள் நிற திரவத்துடன் தலையில் அப்ளை செய்யக்கூடாது ஏனென்றால் அந்த மஞ்சள் நிறத்திடுவமானது தலையின்  கேல்பு பகுதியை டேமேஜ் செய்யவும் மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். அதனால் முடிக்கு மட்டுமின்றி முகத்தில் பயன்படுத்தும் போவதும்  கற்றாழை அந்த மஞ்சள் நிற திரவம் சுத்தம் செய்த பிறகு பயன்படுத்தவும். 

வாழைப்பழம் மாஸ்க் 2 :கற்றாழை ஜெல்லுடன் வாழைப்பழம் சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைத்து எடுத்து இந்த பேஸ்ட்டை தலையில் மாஸ்காக தடவிக் கொள்ளவும். பிறகு ஒரு 20 முதல் 25 நிமிடம் மறைத்தலையில் அப்படியே உணர விடவும். பிறகு வெதுவெதுப்பான நேரில் தலையை நன்றாக அலசவும். வேணும் என்றால் ஹெர்பல் ஷாம்பு பயன்படுத்திக் கொள்ளலாம்.

 கற்றாழையில் உள்ள வைட்டமின் சி தலையில் ஸ்கேல்பு பகுதியை சுத்தம் செய்ய உதவுகிறது. சாதாரணமாகவே கற்றாழையை முகத்தில் தடவினால் இறந்த செல்களை அகற்றி புதிய செல்கள் வளர உதவும். அதுபோல தலையில் இருக்கும் இறந்த செல்களை அகற்றி முடி வளர இந்த கற்றாழை வாழைப்பழம் மாஸ் உதவுகிறது. 

இந்த வாழைப்பழம் முட்டை வெள்ளை கரு மாஸ்க் செய்வதற்கு முடிக்கு ஏற்றவாறு ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழங்கள் நன்கு பழுத்த பழமாக தேர்வு செய்து கொண்டால் நல்லது. இந்த வாழைப்பழத்துடன் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் பிரித்து எடுத்துக்கொண்டு சேர்த்துக் கொள்ளவும். மஞ்சள் கரு நமக்குத் தேவையில்லை. முடிந்தால்  மஞ்சள் கருவை பொறித்து சாப்பிடுங்கள். இதனுடன் சிறிதளவு கற்றாழை ஜெல்லையும் சேர்த்துக் கொள்ளவும். கற்றாழை ஜெல்லை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை மேலே உள்ள பகுதியில் படித்திருப்பீர்கள். இல்லையென்றால் மேலே போய் படித்து விட்டு மீண்டும் கீழே வரவும். இப்பொழுது இந்த வாழைப்பழத்தையும்  முட்டையின் வெள்ளை கருவும் சிறிதளவு சேர்த்த கற்றாழை ஜெல்லையும் நன்றாக மிக்ஸ் செய்து ஒரு பேஸ்ட் ஆக ரெடி செய்து கொள்ளவும்.

 கற்றாழை ஜெல்லும் முட்டையின் வெள்ளை கருவும் இரண்டும் சேர்ந்தாலே ஒரு தண்ணீர் திரவம் போல காட்சியளிக்கும். அதனுடன் வாழைப்பழம் சேர்க்கும் பொழுது நன்கு ஒரு பேஸ்ட்டாக நமக்கு கிடைக்கும். இப்பொழுது இந்த பேச்சை தலையில் தேய்த்து முடியும் வேர்பகுதி முதல் நுனிப்பகுதி வரை நன்றாக தேய்க்கவும். பிறகு ஒரு அரை மணி நேரம் கழித்து தலையை கெமிக்கல் குறைந்த ஷாம்பு ஆலோ அல்லது ஹெர்பல் ஷாம்பு  அல்லது சீயக்காய் பயன்படுத்தி தலையை அலசவும்.

 வாரம் இரண்டு முறை இதுபோல செய்து வந்தால் முடியின் நுனிப்பகுதி பிளவு படும் பிரச்சனை பலருக்கு இருக்கும். இதுபோன்ற முடி பிளவு படும் பிரச்சனை இனி உங்களுக்கு இருக்காது.  இதனால் முடி உதிர்வும் இனி இருக்காது.

கட்டுரையைப் பகிர்க:
G

Go2Tamil

செய்தி ஆசிரியர் மற்றும் கட்டுரையாளர். சமூக, அரசியல் மற்றும் சினிமா நிகழ்வுகளை துல்லியமாகவும் விரைவாகவும் வாசகர்களுக்கு வழங்குவதில் வல்லவர்.

Get Notifications / செய்திகளைப் பெறுக

You can unsubscribe from notifications anytime.