உங்கள் குழந்தையின் அடர்த்தியான, பளபளப்பான கூந்தலை நீங்கள் கனவு காண்கிறீர்களா? | baby hair growth tips in tamil
சில குழந்தைகள் பிறக்கும்பொழுது நல்ல ஆரோக்கியமான அடர்த்தியான முடியுடன் பிறப்பார்கள். சில குழந்தைகளுக்கு பிறக்கும் பொழுது, சற்று அடர்த்தி குறைவாக இருக்கும். மேலும் சில குழந்தைகளுக்கு பிறக்கும் பொழுது முடி மிகவும் மெல்லிசாக இருக்கும். இப்படி பிறக்கும் குழந்தைகளுக்கு, முடியின் வளர்ச்சி வேறுபட்டு காணப்படுவதற்கு, பல காரணங்கள் உள்ளன. சில குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து சரியான பராமரிப்பு இருக்காது. சிறு வயதில் குழந்தைகளுக்கு இது போன்று சரியான ஊட்டச்சத்தையும் சரியான
பராமரிப்பையும் கொடுக்காத காரணத்தினால் அவர்கள் வளர்ந்து பல வருடங்கள் எடுத்துக்காட்டாக 15,16 வருடங்கள் ஆகியும், முடியும் வளர்ச்சி இன்றி காணப்படுவார்கள். சில குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து ,பராமரிப்பு இல்லாமலே முடி நீளமானதாகவும், அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் இருக்கும். இவ்வாறு வேறுபடுவதற்கு காரணம் குழந்தைகளின் பரம்பரை மற்றும் ஜீன்களும் ஒரு காரணம் தான்.
குழந்தைகள், சிறுவயது உடையவர்களாக இருக்கும் வரை, அவர்களின் முடியின் வளர்ச்சியோ அல்லது முடி உதிர்வோ பெற்றவர்களுக்கு, ஒரு பெரும் விஷயமாக தெரியாது. ஆனால் அதே பிள்ளைகள், ஒரு பள்ளி பருவத்திலோ அல்லது கல்லூரி பருவத்திலோ அல்லது வேலைக்கு செல்லும் பொது தான் அது பெரிய ஒரு மன அழுத்தமாக பார்க்கப்படுகிறது. இது போன்ற பிரச்சனைகள் இருந்து விடுபட்டு இழந்த முடியை மீண்டும் பெறுவதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றை கீழே உள்ள பகுதிகளில் விரிவாக பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மிகுந்த உணவு :
குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு எவ்வாறு ஊட்டச்சத்து மிக முக்கியமோ அதுபோல முடியும் வளர்ச்சிக்கும் ஊட்டச்சத்து மிகவும் முக்கியம். சிறு வயது இருக்கும் பொழுதிலிருந்து அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை கொடுத்து வந்திருந்தால் அவர்கள் வளர வளர முடியும் வளரும்.
குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி நிறைந்த உணவுகள் முடியின் வளர்ச்சியை தூண்டுவதற்கு உதவுகிறது. இதுபோன்ற வைட்டமின் நிறைந்த உணவுகள் நம் அன்றாட வாழ்வில் கிடைக்கக்கூடியவை.
- கேரட்
- தானியங்கள்
- சர்க்கரைவள்ளிக் கிழங்கு
- பப்பாளி
போன்ற உணவுகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ளது. இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் அவர்களின் உணவில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும். இதன் மூலம் பல ஊட்டச்சத்துக்கள், அவர்களுக்கு முழுமையாக கிடைக்கிறது. இந்த ஊட்டச்சத்து, முடிக்கு சென்றடைவதனால், முடியின் வளர்ச்சியை தூண்டுகிறது. மேலும் வலுப்படுத்துகிறது.
எண்ணெய் மசாஜ் செய்தல்:
தினமும் காலை குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் கலந்து மசாஜ் செய்து விடுங்கள். எண்ணெய்யை ஒரு அகலமான கிண்ணத்தில் ஊற்றி விரல் நுனியால் தொட்டு குழந்தையின் தலை முடி வேர்ப்பகுதியில் நுனிப்பகுதி வரை நன்றாக தேய்த்து விட்டு, பிறகு விரல்களை மெதுவாக அழுத்தம் கொண்டு தலையின் ஸ்கேல்பு பகுதிகளில் மசாஜ் செய்து விடவும்.
முடிந்தவரை தினமும் காலை இது போன்ற தேங்காய் எண்ணெய் பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் அல்லது விளக்கெண்ணெய் போன்ற எண்ணைகளில் மசாஜ் செய்தால் சென்றடையும் ரத்தோட்டம் வேகமாக பரவி முடியும் வளர்ச்சியை தூண்டுகிறது. இப்படி செய்வதன் மூலம் குழந்தைகளும் அந்த நாள் முழுக்க உற்சாகமாக காணப்படுவார்கள். இந்த மசாஜ் ஆனது முடி வளர்வதோடு குழந்தைகளை சுறுசுறுப்பாக வைக்கவும் உதவுகிறது.
குழந்தைகளுக்கான கண்டிஷனர் பயன்படுத்தல் :
வளரும் குழந்தைகளுக்கு கண்டிஷனர் பயன்படுத்தலாமா என்று கேட்டால், கண்டிப்பாக பயன்படுத்தலாம். அதாவது கெமிக்கல் நிறைந்த கண்டிஷனர்களை பயன்படுத்தாமல். இயற்கை கண்டிஷனர்களை பயன்படுத்தலாம். தயிர், செம்பருத்தி, முட்டை, பாசிப்பயிறு இவற்றில் ஏதேனும் ஒன்றை அரைத்து குழந்தைகளுக்கு முடியும் மேற்பகுதி வரை நன்றாக தேய்த்து ஒரு நல்ல கண்டிஷனராக பயன்படுத்தலாம். இதன் மூலம் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.
குழந்தைகளை தலைக்கு குளிப்பாட்டிய பிறகு துண்டால் அழுத்தம் கொடுத்து வேகமாக உலர வைக்கக்கூடாது. மெதுவாக துவட்ட வேண்டும். குழந்தைகளுக்கு நிச்சயம் ஹேர் ட்ரைவ் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களும் ஆண்ட்ராய்டு பயன்படுத்துவதை முடிந்த அளவுக்கு தவிர்க்கலாம் முடியாத பட்சத்திற்கு குறைத்துக் கொள்ளலாம். வேகமாக தலையை துவட்டுவதால் முடியின் வேர் பகுதிகள் எளிதில் கழன்று விடும். ஏனென்றால் முடி ஈரமாக இருக்கும் பொழுது வலுவிழந்ததாக இருக்கும். அதனால் முடியை வேகமாக அழுத்தி துவட்டும் கூடாது ஈர முடியை சீப்பால் சீவவும் கூடாது.
குழந்தையின் முடி வளர்வதற்கான டிப்ஸ் இதோ:
குழந்தைகளின் முடியை அவ்வப்போது வெட்டி விடுவது நல்லது. முடி வெட்டுவதனால் முடி குறையும் என்று நினைக்க வேண்டாம். மேலும் புதிதான முடி வளர்வதற்கு இது ஒரு வழி வகுக்கிறது.
அதிகமான முடி இருப்பதனால் அது குழந்தைகளின் கண்களில் வந்து விழும். சிறு குழந்தைகளுக்கு அவற்றை சரி செய்ய கூட தெரியாது. அதனால் முடி அவ்வப்போது வெட்டி விடுவது நல்லது. வெட்டிக் கொண்டே இருந்தால் எப்படி முடி முளைக்கும் என்று நினைக்க வேண்டாம். ஏனென்றால் சரியான இடைவேளைக்குப் பிறகு வெட்ட வேண்டும். குறிப்பிட்ட மாதங்கள் வைத்துக் கொள்ளுங்கள் எடுத்துக்காட்டாக இரண்டு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஆவது கண்டிப்பாக முடியை விட்டு விடுங்கள். இது புதிய முடியின் வளர்ச்சிக்கு ஒரு பங்காக வழிவகைக்கிறது.
தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டாம். நிச்சயம் தினமும் செய்தால் கூட இதன் மூலம் குழந்தையின் முடி வளரும். வேறு எந்த ஒரு பக்க விளைவும் இருக்காது.
குழந்தைகளின் தலையில் தூசி படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறையாவது அல்லது இரண்டு வாரம் ஒரு முறையாவது தலைக்கு குளிக்க வைக்க வேண்டும். தலைக்கு பயன்படுத்தும் நீரானது வெதுவெதுப்பு நிலையிலிருந்து மிகக் குறைவாகவே இருக்க வேண்டுமே தவிர சூடாக இருக்கக் கூடாது.

குழந்தைகளுக்கு பயன்படுத்தும் ஷாம்புவானது முடிந்தவரை இயற்கையான ஷாம்பு பயன்படுத்த வேண்டும். கெமிக்கல் நிறைந்த ஷாம்பு குழந்தைகளின் மெல்லிய ஸ்கேல்ப் பகுதியை டேமேஜ் செய்ய வாய்ப்புள்ளது.
குழந்தைகளுக்கு கற்றாழை ஜெல்லை ஒரு ஷாம்பு ஆகவோ அல்லது கண்டிஷனராகவோ கூட பயன்படுத்தலாம். இது வளர்ந்த குழந்தைகளுக்கு மட்டுமே. அதாவது கற்றாழை ஜெல்லை நன்றாக அரைத்து 15 நிமிடங்கள் குறைந்தபட்சம் நன்றாக ஊற வைத்துவிட்டு பிறகு தலையை சீயக்காய் அல்லது ஹெர்பல் ஷாம்பூ அல்லது பாசிப்பயிரைக் கொண்டு அலசிவிடுங்கள்.
முக்கிய குறிப்பு
குழந்தைகளுக்கு, பெரியவர்கள் பயன்படுத்தும் ஷாம்புவோ அல்லது கண்டிஷனரோ பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். ஹெர்பல் ஷாம்பு சீயக்காய் கற்றாழை போன்றவற்றை பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு முறை உங்களின் மருத்துவரை ஆலோசித்து விட்டு பிறகு பயன்படுத்துங்கள்.
ஏனென்றால் இயற்கை பொருளாக இருப்பினும், அவை அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒத்துக்கொள்ளாது. எனவே , இது அனைவருக்கும் பக்க விளைவுகள் இன்றி பயன் தரும் என்பது உறுதி அல்ல. குழந்தைகளின் சருமத்திற்கும், ஊட்டச்சத்துக்கும் தேவையானவற்றை தங்களின் மருத்துவர்களிடம் பகிர்ந்து, ஆலோசித்து விட்டு பிறகு பயன்படுத்தவும்.அதனால் மருத்துவர் ஆலோசித்து விட்டு பிறகு பயன்படுத்துங்கள்.