முகப்பு / medicinal Tips /  பிரண்டை தாவரத்தின் நன்மைகளும் அதன் பயன்பாடும்
medicinal Tips

 பிரண்டை தாவரத்தின் நன்மைகளும் அதன் பயன்பாடும்

G
செய்தி ஆசிரியர்
Go2Tamil
12 Aug 2026, 05:00
2 பார்வைகள்
பகிர் :
 பிரண்டை தாவரத்தின் நன்மைகளும் அதன் பயன்பாடும்

நமக்கு தெரியாமல் எத்தனையோ நோய் தீர்க்கும் இயற்கை மூலிகைகள் நம்மைச் சுற்றியே கிடைக்கிறது. ஆனால் நமக்கு அதனை எப்படி பயன்படுத்துவது என்று தெரியவில்லை.

   பிரண்டை தாவரத்தின் நன்மைகளையும் அதில் உள்ள சத்துக்களும் எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்

பிரண்டையை சுத்தம் செய்யும் முன்பு கைகளில் தேங்காய் எண்ணெய் கொண்டால் அரிப்பு ஏற்படாது. அதேபோன்று கையுறைகளை அணிந்து கொள்ளலாம், அதேபோன்று சமையலில் பயன்படுத்தும் போது எண்ணெய்

ஊற்று நன்றாக வதக்கி கொள்ள வேண்டும் ,அதனால் சாப்பிடும் பொழுது அரிப்பு ஏற்படாது

    முதலில் பிரண்டை நன்றாக சுத்தம் செய்து அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு பிரண்டையை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். எடுத்து அதன் பச்சை நிறம் மறைந்து இளம் மஞ்சளாக வரும்வரை வதக்கி தனியாக எடுத்துக் கொள்ளவும். பிறகு அதே கடாயில் சிறிது என்னை சேர்த்து ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு ,ஐந்து வரமிளகாய் ,பெருங்காயம் ,கருவேப்பிலை, சேர்த்து இதனுடன் 10 சின்ன வெங்காயம், இரண்டு பல் பூண்டு, சிறிய துண்டு இஞ்சி, சேர்த்து நன்றாக வதக்கி கொண்டு இதனுடன் நெல்லிக்காய் அளவு புளி, இரண்டு தேக்கரண்டி   தேங்காய் துருவல் மற்றும் தேவையான உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

   பிரண்டையும் இது சேர்த்து கலந்து கொள்ள வேண்டும் இப்பொழுது இது ஆரியவுடன் ஒரு மிக்ஸி சாருக்கு மாற்றி பதமான அரைத்துக் எடுத்துக் கொள்ளவும் இப்பொழுது சுவையான பிரண்டை துவையல் தயார்.  

     குழந்தைகள் சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள், புழுக்கள் உறிஞ்சி வாழ்வதால் நாளடைவில் குழந்தைகளுக்கு சத்து கிடைக்காமல் போய்விடும். இதனால் ரத்தசோகை உண்டாகும், எந்த குடல்  புழுக்களை போக்கும் அருமையான மருந்து இந்த பிரண்டை துவையல், அது மட்டுமல்ல இந்த துவையலை குழந்தைகளுக்கு தொடர்ந்து கொடுத்து வந்தால் எலும்புகள் உறுதியாக வளரும்.

veldtgrape-benifits-and-their-nutritional-values-explain-in-tamil

 எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்பு பகுதிகளும் நரம்பு முடிச்சுகளும் வாயுவின் சீற்றத்தால் தேவையற்ற நீர் தேங்கிவிடும் இதன் காரணமாக பலர் முதுகு வலி கழுத்து வலியால் அவதிப்படுகிறார்கள் மேலும் இந்த நீர் முதுகுத்தண்டு வழியாக இறங்கி முறுக்கிக் கொள்ளும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தலையைக் கூட அசைக்க முடியாமல் அவதிப்படுவார் இந்த பாதிப்புகளில் இருந்து விடுபட பிரண்டைத் துவையல் சாப்பிட்டு வந்தால் மிகச் சிறந்த பலனை தரும் அதே போன்று எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாக கூடும் இது உதவுகிறது.

 இது உடைந்து எலும்புகளை கூட ஒட்ட வைக்கும் தன்மையை கொண்டதால் இதனை வஜ்ரவல்லி என்று சித்தர்கள் அழைக்கப்படுகிறது.கால்சியம் சத்தை நிறைந்த மூலிகை இதுவாகும் பிரண்டை பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் 

இதில் நிறைந்துள்ள காரத்தன்மை உடலில் ஓடும் ரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரிக்காமல், தடுப்பதோடு சர்க்கரை நோயாளிகளை இழக்கும் பலத்தை ,மீண்டும் பெற உதவுகிறது.

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு முதுகு வலி இடுப்பு வலி வராமல் இருக்க பிரண்டை  சாரை எடுத்து ஆறு தேக்கரண்டி ,அளவு சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய், கலந்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனைக்கு  தீர்வு .

கட்டுரையைப் பகிர்க:
G

Go2Tamil

செய்தி ஆசிரியர் மற்றும் கட்டுரையாளர். சமூக, அரசியல் மற்றும் சினிமா நிகழ்வுகளை துல்லியமாகவும் விரைவாகவும் வாசகர்களுக்கு வழங்குவதில் வல்லவர்.

Get Notifications / செய்திகளைப் பெறுக

You can unsubscribe from notifications anytime.