முகத்தில் வரும் பிளாக் ஹெட்ஸ் என்று சொல்லப்படும் கரும்புள்ளிகள் ஆனது முகத்தின் அழகையே கெடுத்து விடும். இந்த கரும்புள்ளிகளும் ஒரு வகையான முகப்பரு தான் என்று சொல்லப்படுகிறது.இந்த கரும்புள்ளிகள் ஆனது முகத்தில் உள்ள மூக்குப்பகுதியை சுற்றி அதிகமாக இருக்கும்.மூக்குப்பகுதியில் மட்டுமல்லாமல் கீழ்தாடை, கண்ணம், கழுத்து, முதுகு ,கை பகுதி, கால் பகுதி, தோள்கள் என பல்வேறு பகுதிகளில் காணப்படும். கரும்புள்ளிகள் தை நாம் அறிந்தால் உடனே அதை எப்படி போக்க வேண்டும் என்று யோசிப்பதற்கு முன்பு அது ஏன் வந்தது என்பதை யோசிக்க வேண்டும். ஏன் வந்தது என்ற காரணத்தை அறிந்து கொண்டால் மீண்டும் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
கரும்புள்ளிகள் (Blackheads) வர சில முக்கிய காரணங்கள் :
கரும்புள்ளிகள் வர முக்கியமான காரணங்களில் முதலாவது ஹார்மோன் மாற்றங்கள் ஆகும். கரும்புள்ளிகள் என்பது எந்த வயது எங்களுக்கும் அல்லது ஆண்களுக்கும் வரலாம். எனினும் முக்கியமான காலம் பருவமடையும் காலம் தான்.அதிகமான ஆல்பம் மட்டும் கரும்புள்ளிகள் அதிகமாக வரும் . ஹார்மோன் மாற்றம் என்பது சர்மா உற்பத்தி அதிகரிக்கிறது அதனால் சருமத்தில் உள்ள துளைகள் அடைக்கப்பட்ட இடத்தில் கரும்புள்ளிகள் உருவாக வழிவகுக்கிறது.
காரணம் 1 : அதிகப்படியான தோல் செல்கள் உற்பத்தி
காரணம் 2 : அழகு பொருட்கள் மற்றும் ஒப்பனை பொருட்கள் தோல்களுக்குள் உள்ள துளைகளை அடைத்துக் கொள்வது அல்லது தடுப்பது.
காரணம் 3 : சுகாதாரமற்ற தோல் பராமரிப்பு
காரணம் 4 : வறண்ட சருமத்தை கொண்டவர்களை விட எண்ணெய் சருமம் கொண்டவர்கள் தான் இது போன்ற கரும்புள்ளிகளால் பாதிக்கப்படுகிறார்கள்.
காரணம் 5 : எண்ணெய் தன்மை கொண்ட சருமத்தை கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்கள் அதிகம் தாக்கும். அதனால் எண்ணெய் தன்மை அதிகம் கொண்ட கிரீம்களை பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கரும்புள்ளிகள் நீங்க எளிய வீட்டு முறை (Home Remedies ) டிப்ஸ் :
டிப்ஸ் 1 : முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் பொடியாக்கிய வெள்ளை சர்க்கரை ( powdered white sugar ) எடுத்துக்கொண்டு அதனுடன் செய்த அளவு காபி தூள் (coffee powder ) சேர்த்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்துஒரு பேஸ்ட் போல் ரெடி செய்து அந்த பேஸ்ட்டை பிளாக்கெட்ஸ் இருக்கும் இடத்திற்கு மேல் அப்ளை செய்யவும். இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவவும்.
பிறகு ஒரு கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் முல்தானி மிட்டி சேர்த்து, அதனுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து அந்த பேஸ்ட்டை பிளாக்கெட்ஸ் இருக்கும் இடத்தில் அப்ளை செய்யவும். இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கழித்து காய்ந்துள்ள அந்த கிரீமை நன்றாக கிரப்பர் போல் பயன்படுத்தி ஸ்கிரப் செய்யவும். பிறகு குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இதுபோல் வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் விரைவில் கரும்புள்ளிகள் நீங்கும்.
டிப்ஸ் 2 : ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரை எடுத்துக்கொண்டு அந்த நீராவியில் முகத்தை காட்டுங்கள். அல்லது ஒரு நல்ல காட்டன் துணியை சுடு தண்ணீரில் நனைத்து பிழிந்து அந்தத் துணியால் முகத்தை நன்றாக துடைத்து எடுக்கவும். பிறகு ஒரு ஹேர் பின் எடுத்துக்கொண்டு அதன் பின்புறத்தில் உள்ள வளைவுகளைக் கொண்டு கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் வைத்து மெதுவாக தேய்த்து எடுக்கவும்.
டிப்ஸ் 3 : ஒரு சிறிய துண்டு தக்காளியை நன்றாக ஜூஸாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு பேஸ்ட் ஆக ரெடி செய்து கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் அப்ளை செய்து வரவும்.
2 thoughts on “முகத்தில் இருக்கும் Blackheads உங்கள் அழகை கெடுக்கிறதா? இதோ 2 மினிட்ஸ் டிப்ஸ் உங்களுக்காக ”