இயற்கை முறையில் உதடுகளை பிங்க் ஆக்குவது எப்படி!! இதோ சூப்பர் டிப்ஸ்

By Go2Tamil

Updated on:

Follow Us
இயற்கை முறையில் உதடுகளை பிங்க் ஆக்குவது எப்படி!! இதோ சூப்பர் டிப்ஸ்

How to get pink lips naturally?

உங்கள் உதடுகள் வறண்டதாகவும் கருமையாகவும் இருக்கிறதா.லிப்ஸ்டிக் பயன்படுத்தினாலும் அந்தக் கருமை நிறம் மறையவில்லையா? கெமிக்கல் கிரீம்களை உதடுகளில் பயன்படுத்துவதன் மூலம் அது வயிற்றுக்குள் சென்று பல வியாதிகளை மற்றும் கோளாறுகளை உண்டாக்குகிறது. எனவே  வீட்டில் நாம் அன்றாட பயன்படுத்தும் இயற்கை பொருட்களைக் கொண்டு இயற்கையான முறையில் உங்கள் உதடுகளை கருமை நிறத்திலிருந்து பிங்க் நிறமாக மாற்ற இதோ எளிய முறை உங்களுக்காக. இதை நீங்கள் வீட்டில் தினந்தோறும் செய்து பார்த்து வந்தால், உங்கள் உதடுகள் நெடு நாட்கள் வரை பிங்க் நிறமாக காட்சியளிக்கும். இவை அனைத்தும் இயற்கை முறை என்பதால் ஓரிரு நாள் மட்டுமே நாம் இந்த முறையை பின்பற்றுவதன் மூலம் விடிந்தவுடன் நமக்கு மாற்றம் தெரியாது. தொடர்ச்சியாக செய்வதன் மூலம் மட்டுமே இதன்  பலன் உங்களுக்கு கிடைக்கும். 

நம் முகத்தின் தோலை விட உதட்டின் தோல் சற்று வித்தியாசமானது. நம் உதட்டின் தோளில் செபாஸியஸ் சுரப்பிகள் மற்றும் வியர்வை சிறப்பிகள் கிடையாது. நம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான மாறுபட்ட தோள்கள் உள்ளது போல் ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட உதடுகளும் இருக்கும். சிலருக்கு இயற்கையாகவே, ஆரம்பத்தில் இருந்து உதடானது பிங்க் நிறமாகவும், சிலருக்கு ஆரம்பத்திலேயே கருமை நிறமாகவும் இருக்கும். சிலருக்கு ஆரம்பத்தில் இருந்த பிங்க் நிற விடுரானது நாட்கள் கூட கருமை நிறமாக மாறி இருக்கும். இவை அனைத்திற்கும் எளிய இயற்கை முறைகள் உள்ளது. 

Reason for black pigmentation on lips

உதடு கருமை நிறமாக மாற சில முக்கிய காரணங்கள்:

உதடு கருமையாக மாறிவிட்டது என்று உடனடியாக கெமிக்கல் கிரீம்களை பயன்படுத்துவதன் மூலம்  சில மணி நேரங்களில் உதடுகள் சிறு மாற்றத்துடன் காணப்படும். உடனே நாம் அதை தினமும் பயன்படுத்த ஆரம்பித்து விடுவோம். இது முற்றிலும் ஒரு தவறான செயல். ஏனென்றால் திடீரென்று ஏதோ ஒரு அவசரத்தில் நாம் அதை மறந்து  கிரீமை உதட்டில் அப்ளை செய்யாமல் சென்று விட்டால் என்ன ஆகும்?  நம்மை தினந்தோறும் பார்ப்பவர்கள் அன்று ஒரு நாள் வித்தியாசமாக பார்ப்பார்கள் நீங்களும் சௌகரியமாக  உணர மாட்டீர்கள். எனவே இது போன்ற தற்காலிக மாற்றத்தை எதிர்பார்க்காமல், நிரந்தர மாற்றத்திற்கு வழி தேடுங்கள்.

 முதலில் நம் உதடு ஏன் கருமையாக இருக்கிறது என்பதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள். மற்றொரு நபர் இத்தனை நாள் பிங்க் நிறத்தில் தெரிந்த நம்முடைய காலப்போக்கில் ஏன் கருமையாக மாறிக்கொண்டே வருகிறது என்று காரணத்தை தேடுங்கள். 

நம் உதடானது மெல்லிய தோலால் மூடப்பட்டிருக்கும். இயற்கையாகவே இளஞ்சிவப்பு உதடுகள் இருக்க முக்கிய காரணம், உதட்டின் மேல் பரப்பில் உள்ள நெருக்கமான இரத்த நாளங்கள்.இயற்கையாகவே இருக்கும் பிக்மண்டேஷன் மெலனின் இருப்பதை சார்ந்த ஒரு விஷயமாகும். மெலனின் உள்ளடக்கம் அதிக அளவில் இருந்தால் மட்டுமே உதடானது கருமை நிறத்தில் இருக்கும். 

சூரியனிலிருந்து வரும் கதிர்கள் நம் உதட்டில் நேரடியாக படுவதன் மூலம் உதடு கருமையாக மாறும்.

உதடுகளுக்கு நாம் போடும் லிப்ஸ்டிக் ஆனது கொடுத்துள்ள எக்ஸ்பயரி டேட்டை விட கம்மியான நாட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். எக்ஸ்பைரி தேதி முடிந்த லிப்ஸ்டிக்கை பயன்படுத்துவதனாலும் மற்றும் சரியான மாய்ஸ்ரைசர் பயன்படுத்தாததாலும் உதடு கருமையாக இருக்கும்.

 புகைப்பிடித்தல் ஒரு முக்கிய காரணம். புகைப்பிடிப்பவர்களுக்கு உதடு நாளுக்கு நாள் கருமை நிறம் அதிகமாக  கூடும்.

போதுமான நீர் குடிக்கவில்லை என்றாலும் உதடுகள் வறண்டு வெடிப்பு ஏற்பட்டு கருமையாக காட்சியளிக்கும்.

காஃபின் (caffeine)அதிகமாக எடுத்துக் கொள்வதாலும் உதடுகள் கருமை நிறமாக மாறுவதற்கு முக்கிய காரணம். 

சிலருக்கு உதடுகளை அடிக்கடி  நாக்கில் உள்ள எச்சில் மூலம் உதடுகளை ஈரமாக்கி கொள்வார்கள். இதன் மூலம் உதடு கருமை நிறம் அடைய செய்யும்.

உங்கள் உங்கள் உதடுகளை இளஞ்சிவப்பு நிறமாக மாற்ற எளிய இயற்கை வழிமுறை : 

  1. தக்காளி சர்க்கரை ஸ்க்ரப் (scrub) : ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் அல்லது இரண்டு டீஸ்பூன் வெள்ளை சர்க்கரை எடுத்துக் கொள்ளவும். பாதி அறிந்த தக்காளி பழத்தை, அந்த  சர்க்கரையில்  தொட்டு உதட்டின் மேல் மெதுவாக மசாஜ் செய்யவும். நீங்கள் எடுத்துக் கொண்ட வெள்ளை சர்க்கரை மிகவும் பொடியாகவும் இருக்கக் கூடாது மிகவும் பெரிய துண்டுகளாகவும் இருக்கக்கூடாது நம் உதடு மெல்லிய தர்மம் அதனால் அது பொறுக்கும் அளவிற்கான சர்க்கரை கூட தக்காளியை தொட்டு உதட்டின் மேல் இரண்டிலிருந்து நான்கு நிமிடங்கள் மெதுவாக ஸ்கிரப் செய்யவும். இரண்டு நாளுக்கு ஒரு முறை இதுபோல செய்தால் உதட்டின் கருமை நிறம் குறைவதை காணலாம். தினமும் செய்வதன் மூலம் மாற்றத்தை காணலாம் .
  2.  தேங்காய் எண்ணெய் சர்க்கரை ஸ்க்ரப் (scrub) : இரண்டில் இருந்து நான்கு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன்  ஒரு டீஸ்பூன் பொடித்த வெள்ளை சர்க்கரையை சேர்த்து ஒரு பேஸ்ட் போல் கலக்கவும். பிறகு அதை உதட்டின் மேல் அப்ளை செய்து நன்றாக ஸ்க்ரப் (scrub) செய்யவும். இந்த இரண்டு ஸ்கிரப் முறைகளில் ஏதேனும்  ஒன்றை,  வாரந்தோறும் செய்து வர வேண்டும். ஸ்க்ரப் (scrub)   செய்தவுடன் இடத்தின் மேல் சிறிதளவு தேங்காய் எண்ணெய் அல்லது நெய் அல்லது கற்றாழை ஜெல் தடவி கொள்ள வேண்டும்.
  3. வெள்ளரிக்காய் மசாஜ் :  அதிக நீச்சத்தைக் கொண்ட வெள்ளரிக்காயை நன்றாக மசித்து அல்லது ஓரளவு அரைத்து அதனை உதடுகளில் வைத்து நன்றாக மசாஜ் செய்யவும் இரவு தூங்குவதற்கு முன்பு இதுபோல செய்துவிட்டு பிறகு நல்ல குளிர்ந்த நீரினால் உதடுகளை கழுவவும். பிறகு வழக்கம் போல் ஒரு நல்ல மாய்ஸ்ரைசர் அல்லது இயற்கை அலோவேரா ஜெல் தெரிவித்துக் கொண்டு உறங்கவும்.
  4. பீட்ரூட் இளஞ்சிவப்பு :  பீட்ரூட் இயற்கையாகவே சிறப்பு நிறத்தை கொண்டுள்ளது.உங்கள் உதட்டுக்கு தேவையான பீட்ரூட்டை நன்றாக அரைத்து அதனை உதட்டின் மேல் தேய்த்து வட்டமாக மசாஜ் செய்யவும். பிறகு வெளியேறுப்பான நிலையில் கழுவ வேண்டும்.தினமும் இரவு இந்த பீட்ரூட் மசாஜ் செய்து வந்தால் அடுத்த வாரமே உதடு இளஞ்சிவப்பாக காணப்படும்.
  5.  மாதுளை பீட்ரூட் கேரட் : ஒரு கிண்ணத்தில் மாதுளை பீட்ரூட் கேரட் ஆகிய மூன்றின் சாறுகளையும் பிரிகிறது எடுத்துக்கொண்டு அதனை உதட்டின் மேல் அப்ளை செய்து வெகுவாக மசாஜ் செய்யவும். கேரட் பீட்ரூட் மாதுளை மூன்றிலும் இயற்கையான சிவப்பு நிறங்கள் உள்ளது இதனால் உதடு இயற்கையாகவே இளஞ்சிவப்பு நிறத்திற்கு வெகு விரைவாக மாறும்.

உங்கள் உதடுகளுக்கு ஏற்ற எண்ணெய் எது?

பாதாம் எண்ணெய் அல்லது ஆர்கன் என்னை அல்லது தேங்காய் எண்ணெய் இவை மூன்றும் உதட்டில் உள்ள வறண்ட வெடிப்புகளுக்கு ஏற்ற நல்ல தீர்வாகும்.  இம்மூன்று எண்ணைகளில்  ஏதேனும் ஒன்றை உதடுகளில் தடவி நன்றாக மசாஜ் செய்து பிறகு குளிர்ந்த நேரில் கழிவி விட்டு இரவு உறங்கவும். மேலே கொடுக்கப்பட்டுள்ள ஐந்து டிப்ஸ்களில் ஏதேனும்  ஒன்றை வழக்கமாக கொண்டு தினமும் அதனை செய்து வருவதன் மூலம் உங்கள் உதடு வறட்சி இல்லாமலும் எழுந்திருப்பு நிறத்திலும் வெகு விரைவில் மாறும்.

உங்கள் உதடுகளை இயற்கையாகவே பராமரிப்பது எப்படி?

உதடுகளை இயற்கையாகவே பராமரிப்பது என்பது மிகவும் எளிய ஒரு செயல் ஆகும். அன்றாடம் உதடுகளை ஈரப்பதமாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக எச்சில் வைக்கக் கூடாது. அது மேலும் உதடுகளை கருமை நிறமாக மாற்றும். ஏதேனும் ஒரு உதட்டுக்கான மாய்ஸ்ரைசர் அல்லது ஆலோவேரா ஜெல்லை  தொடர்ந்து பயன்படுத்துங்கள். நீங்கள் பயன்படுத்தும் லிப்ஸ்டிக் ஆனது ஆறு மாதத்திற்கு மேல் பயன்படுத்தக் கூடாது. ஒரு லிப்ஸ்டிக் பயன்படுத்த ஆரம்பித்தால் அந்த லிப்ஸ்டிக்கை மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு மேல் பயன்படுத்தாதீர்கள் அதில் எக்ஸ்பைரி டேட் முடியவில்லை என்றாலும் கூட பரவாயில்லை.லிப்ஸ்டிக் வாங்கிய பணம் வீணாகுகிறதே என்று நினைக்காதீர்கள். உங்கள் உதடு எக்ஸ்பைரி ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

Go2Tamil

We are nearly 8+ years experience in blogging. this website is fully focus on tamil news and contents. If you are need our service for web designing,digital marketing,blogging,DTP,Graphic Designing you can mail me on vigneshwarsankar@gmail.com

2 thoughts on “இயற்கை முறையில் உதடுகளை பிங்க் ஆக்குவது எப்படி!! இதோ சூப்பர் டிப்ஸ்”

Leave a Comment