பொதுவாகவே பெண்கள் தங்களை அழகாக காட்டிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதற்காக பலர் அழகு நிலையங்களுக்குச் சென்று பணத்தை அள்ளிக் கொடுத்து,வேதிப்பொருட்கள் நிறைந்த கிரீம்களை வாங்கி முகங்களில் போட்டுக் கொள்கிறார்கள். அதனால் அந்த சில நிமிடம் முகம் பார்ப்பதற்கு அழகாக தோற்றமளிக்கும் ஆனால் அது நிரந்தரமான அழகு அல்ல. எனவே இயற்கையாக நம் வீட்டில் நம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய சில பொருட்களைக் கொண்டு எவ்வாறு நம் முகத்தை நீண்ட நாட்கள் இளமையாகவும், அழகாகவும்,ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம் என்பதை இப்பகுதியில் காணலாம்.இன்றைய அழகு குறிப்பு பகுதியில் நாம் காண இருப்பது, முகம் பளபளப்பாக இருக்க பல்வேறு இயற்கை முறைகள் உள்ளன.அவற்றுள் ஒன்று வெண்ணெய்.வறண்ட முகம் கொண்டவர்கள் இந்த குறிப்பினை பயன்படுத்தினால் முகம் எப்பொழுதும் ஈரப்பதத்துடனே காணப்படும். வெண்ணெயை பயன்படுத்தி பயன்படுத்தி முகத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் மாற்றுவது எப்படி என்பதை காணலாம்.
குறிப்பு 1 :
உப்பில்லா வெண்ணெயுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கிரீம் போல் அரைத்துக் கொள்ளவும். இந்த க்ரீமை முகத்தில் நன்றாக அப்ளை செய்து 20 முதல் 25 நிமிடங்கள் வரை நன்றாக காய வைக்கவும்.25 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும் அல்லது வெதுவெதுப்பான நீரில் ஒரு காட்டன் துண்டை நனைத்து துடைத்து எடுக்கவும்.இவ்வாறு மாதம் இரண்டு முறை செய்து வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.
குறிப்பு 2 :
சிறிதளவு தயிருடன் அரை ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து, நன்றாக கிரீன் பணத்திற்கு வரும் வரை கலக்கவும். பிறகு இந்த கிரீமை முகத்தில் அப்ளை செய்து 20 முதல் 25 நிமிடங்கள் நன்றாக காய வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவி விடவும். இப்படி மாதம் மூன்று முறை செய்து வந்தால் முகம் ஈரப்பதத்துடன் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் காணப்படும்.
குறிப்பு 3 :
நான்கிலிருந்து ஐந்து ஸ்பூன் பசும்பால் உடன் அரை ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். மிக்ஸ் செய்த கிரீமை முகத்தில் அப்ளை செய்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை நன்றாக காய வைக்கவும். பிறகு கையில் சிறிதளவு பசும்பால் எடுத்துக்கொண்டு அவற்றை முகத்தில் அப்ளை செய்திருக்கும் கிரீமின் மேல் நன்றாக மசாஜ் செய்யவும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்து வந்தால் முகம் இளமையான தோற்றத்துடன் பளபளப்பாகவும் காட்சியளிக்கும்.
குறிப்பு 4 :
ஒரு ஸ்பூன் உப்பில்லா வெண்ணெயுடன். ஒரு தோல் உரித்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதன் உடன் சேர்த்துக் கொள்ளவும். இரண்டையும் நன்றாக பேஸ்ட் போல் தயாரித்துக் கொள்ளவும். பிறகு இவற்றை முகத்தில் அப்ளை செய்து 20 முதல் 25 நிமிடங்கள் வரை காய விடவும். காய்ந்த பிறகு, வாழைப்பழத்தின் தோலை கொண்டு முகத்தில் உள்ள கிரீமின் மேல் நன்றாக தேய்த்து மெதுவாக மசாஜ் செய்யவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் ஒரு காட்டன் துணியைக் கொண்டு நினைத்து முகத்தில் துடைத்து எடுக்கவும். பிறகு முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகம் பளபளவென காட்சியளிக்கும்.