முகப்பு / medicinal Tips / தேங்காய்ப்பூவின் அற்புதமான பயன்களும் அதன் சக்திகளும்
medicinal Tips

தேங்காய்ப்பூவின் அற்புதமான பயன்களும் அதன் சக்திகளும்

G
செய்தி ஆசிரியர்
Go2Tamil
12 Aug 2026, 02:00
1 பார்வைகள்
பகிர் :
தேங்காய்ப்பூவின் அற்புதமான பயன்களும் அதன் சக்திகளும்

தேங்காய் நாம் எல்லாருக்கும் தெரிந்த ஒரு அற்புதமான உணவு. ஆனால் இந்த தேங்காய் பூ பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

 நன்கு மக்கிய தேங்காயை மண்ணில் புதைத்து வைத்து மூன்று நான்கு மாதங்கள் கழித்து பார்க்கும்போது தேங்காய் முளைவிட்டு வளர ஆரம்பித்திருக்கும். இந்த முளைவிட்ட தேங்காயின் உட்பகுதியில் இருக்கக்கூடிய கரு வளர்ச்சிதான் தேங்காய் பூ.

தேங்காய் பூவை தேங்காய் சீம்பு, தேங்காய் கரு,. கோக்கனட் ஆப்பிள், ஸ்ப்ரவுடட் கோக்கனட் என பல

பெயர்கள் உள்ளன.

 தேங்காயை விடவும் தேங்காய் பூவில் பல மடங்கு சத்துக்கள் அதிகம். அதிகப்படியான வைட்டமின் சி, வைட்டமின் பி1, பி3, பி5, பி6, பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், அயன் என ஏராளமான சத்துக்கள் நிறைந்தது இந்த தேங்காய் பூ.

அதிக சத்துக்கள் மட்டுமில்லாமல் நம் உடலில் ஏற்படக்கூடிய தீராத நோய்களையும் எளிதில் குணமாக்கும் ஆற்றல் இந்த தேங்காய் பூவுக்கு உண்டு.

 தேங்காய் பூவிலே நோய் எதிர்ப்பு மண்டலம் பலமாக இருக்கத் தேவையான வைட்டமின் சி ஒமேகா 3 ,ஒமேகா 6, கொழுப்பு அமிலம், அதிக அளவில் உள்ளது.

 இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்கிறது. மேலும் இது ஒரு வைரஸ் பூஞ்சை எதிர்ப்பு பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

 இதன் காரணமாக பல்வேறு நோய்க்கிருமிகள் இடம் இருந்தும் வியாதிகளிடமிருந்தும் பாதுகாக்க கூடியது இந்த தேங்காய் பூ.

இந்த முளைவிட்ட தேங்காய் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வேண்டுமானாலும் சாப்பிடலாம். எளிதாக ஜீரணிக்க கூடியது இதில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் செரிமானம் ,சார்ந்த தொந்தரவுகளுக்கான அஜீரணம், அசிடிட்டி ,வயிற்றுப்புண் போன்ற பிரச்சனைகளையும் குணமாக்கும்.

 இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து குடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கழிவுகளை எளிதில் வெளியேற்றும் இதன் மூலமாக மலச்சிக்கலும் நீங்கும்.

 பொதுவாக தேங்காய் இனிப்பு சத்து உண்டு என்பதினால் சர்க்கரை நோயாளிகள் அதிகம் சேர்க்கக்கூடாது என்று சொல்வார்கள் ஆனால் இந்த முளைவிட்ட தேங்காய் பூ இன்சுலினை தூண்டி ரத்தசக்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவி செய்யும்.

 இதன் மூலமாக சர்க்கரை நோயாளிகள் எந்த பயமும் இல்லாமல் இந்த தேங்காய் பூவை சாப்பிடலாம்.

coconut-flower-usage-and-their-benifits-in-tamil

       சருமத்திற்கு தேவையான ஒமேகா மூன்று ,ஒமேகா ஆறு, போன்ற நல்ல கொழுப்பு அமிலங்கள் மிகுதியாக இருக்கிறது .இதன் காரணமாக சருமம் பொலிவாக இருப்பதற்கு உதவி செய்யும். மேலும் சருமத்தில் ஏற்படக்கூடிய வெண்புள்ளிகள், பருக்கள், தேமல் ,போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க கூடியது இந்த தேங்காய் பூ.

           தேங்காயில் கலோரிகள் மற்றும் கொழுப்பு அதிகம் என்பதால்  உடல்  எடை அதிகமாக இருக்கிறவங்க ,தேங்காயை தவிர்ப்பது உண்டு. ஆனால் தேங்காய் பூவில் கலோரிகள் மிகவும் குறைவு, மாறாக உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கொழுப்பை கரைக்கும், எனவே அதிக உடல் எடை இருப்பவர்கள் எந்தவித பயமும் இல்லாமல் இந்த தேங்காய் பூவை சாப்பிட்டு வரலாம்.

கட்டுரையைப் பகிர்க:
G

Go2Tamil

செய்தி ஆசிரியர் மற்றும் கட்டுரையாளர். சமூக, அரசியல் மற்றும் சினிமா நிகழ்வுகளை துல்லியமாகவும் விரைவாகவும் வாசகர்களுக்கு வழங்குவதில் வல்லவர்.

Get Notifications / செய்திகளைப் பெறுக

You can unsubscribe from notifications anytime.