தை அமாவாசை என்றால் என்ன?-யாருக்கெல்லாம் தானம், தர்ப்பணம் கொடுக்கலாம்?. தை அமாவாசை அன்று செல்ல வேண்டிய கோவில்கள்…

By Go2Tamil

Published on:

Follow Us
thai-amavasai-tharpanam

அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் வணக்கம் நம் வாசகர்கள் அனைவருக்கும் இன்று ஒரு நல்ல சிறப்பான தெளிவுரை ஒன்று நாம் இங்கே கொடுக்க உள்ளோம் அதாவது வருடங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்புகள் உண்டு அந்த வகையில் இந்த சிறப்பு விசேஷமான இந்த தை மாதம் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம் அதாவது நம் முன்னோர்கள் ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒவ்வொரு காரணமும் வைத்து நம்மை வழிநடத்திச் சென்றுள்ளனர் அந்த வகையில் இந்த தை அமாவாசையானது யாருக்கெல்லாம் தானம் தர்ப்பணம் கொடுக்கலாம் என்பதையும் இதனை யார் யாரு கொண்டாடலாம் என்றும் இப்பொழுது நாம் ஒன்றன்பின் ஒன்றாக காண்போம் மேலும் நம் தமிழ் வாசகர்கள் அனைத்தும் அனைவருக்கும் இந்த தை அமாவாசையானது மிகவும் பிரசித்தி பெற்று தங்களது முன்னோர்களின் ஆசிர்வாதம் பெற கோ டு தமிழின் மூலம் வாழ்த்துகிறோம்.

இந்த ஆண்டு தை அமாவாசை, இந்த ஜனவரி மதம் 29ஆம் தேதி, புதன்கிழமை வருகிறது. ஆனால் நேற்று ஜனவரி 28ஆம் தேதி அன்று இரவு 8.10 மணிக்கு தொடங்கி இன்று ஜனவரி 29ஆம் தேதி இரவு 7.21 முடிவடைகிறது.

thai-amavasai-tharpanam

அமாவாசை என்றால் என்ன? இந்த கேள்விக்கு இப்பொழுது பதில் காணலாம் பொதுவாக பூமியின் சுழற்சியானது 15 நாட்களுக்கு ஒரு முறை மாறும். அவ்வாறு பதினைந்து நாட்களுக்கு பூமியின் ஒருபுறம் வெளிச்சமும் மறுபுறம் இருட்டும் நிகழும் இந்த 15 நாட்களில் திசையெல்லாம் பரவி இருக்கும் அந்த இருட்டு திசையானது தான் அம்மாவாசை என்று அழைக்கப்படும் காரணம் என்னவென்றால் சூரிய கதிர் பூமியின் ஒரு பகுதியில் படும் பொழுது அந்தப் பகுதி பிரகாசமாக இருக்கும் அதற்கு எதிர்ப்புறம் இருக்கும் பகுதி இருட்டாக அமையும் இப்படி இருட்டாக அமைந்த அமைவதற்கு கிட்டத்தட்ட 15 நாட்கள் நிகழும் பிறகு சூரிய கதிரானது நிலவின் மீது படும்போது அது 15 நாட்களுக்கு சிறிது சிறிதாக அதன் வெளிச்சம் அதிகரிக்கும் அவ்வாறு அடுத்த 15வது நாள் வெளிச்சம் முழுமையாக ஒரு பகுதியில் வந்து சேரும் அதை தான் பௌர்ணமி என்று அழைப்பார்கள் 15 நாள் இருட்டானது அமாவாசையும் மேலும் 15 நாள் வெளிச்சமாக இருப்பதை பௌர்ணமி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர் அதைத்தான் நாம் இன்றும் கடைபிடித்து வருகிறோம்

thai-amavasai-tharpanam

ஒவ்வொரு வருடத்தின் பல மாதங்களுக்கு பல வகையான சிறப்புகள் உண்டு அந்த வகையில் இந்த வருடம் 2025 தை மாதத்தில் வருகின்ற மிக சிறப்பாக விசேஷ நாட்களில் ஒன்றுதான் தை அமாவாசை இந்த தை அமாவாசை மாதத்தில் தமிழில் மாதங்களில் எல்லா நாட்களுக்கும் உள்ள அமாவாசையை விட இந்த தை அமாவாசைக்கு சிறப்பு அதிகம் இந்த அமாவாசை நாளில் நாம் நம் முதலிரவு தந்தை தாய் ஆகியோர் இழந்தவர் போன்றவர்கள் அவர்கள் நினைவு என்றும் மறவாத வகையில் அவர்களைக் கொண்டாடும் விதமாக இந்நன்னாளில் நம் முன்னோர்கள் தேர்வு செய்துள்ளனர். அப்படிப்பட்ட இந்த தை அமாவாசையில் நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்னென்ன செய்யக்கூடாது என்பதனை பற்றி இப்பொழுது நம் பார்க்கப் போகிறோம்.

தை அமாவாசையானது இந்த வருடம் 2025 இல் எப்பொழுது நிகழும் அதாவது இன்று 29-01-2025 இன்று தான் தை அமாவாசை சிறப்பாக கொண்டாடப்பட வேண்டியுள்ளது இன்று நாம் என்னென்ன செய்யப் போகிறோம் என்னென்ன செய்யக்கூடாது என்று இந்த பதிவில் பார்ப்போம் இந்த தை அமாவாசை 2025 மிகவும் சிறப்பான நாளாகும் இந்த தினத்தில் பெற்றோர்களை இழந்தோர் தாய் தந்தையரை இழந்தோர் நம் மூதாதையர் நினைவு தினம் மேலும் திதியை தவறிவிட்டவர்கள் இந்த திரியில் தர்ப்பணம் செய்யலாம்

thai-amavasai-tharpanam

இந்து சமயத்தில் நம் முன்னோர்களை நாம் திருப்தி செய்வதற்காக அவர்கள் நினைவை என்றும் மறவாமல் இருப்பதற்காக இந்த அம்மாவாசை நன்னாளில் நம் மறைந்த முன்னோர்களுக்கு தண்ணீரும் எள்ளும் கொடுத்து அவர்களை திருப்தி படுத்தப்படுகிறது இதனை பித்ரு தர்ப்பணம் என்றும் கூறுவர். அம்மாவாசை நன்னாளில் எள்ளும் தண்ணீரும் தானமாக கொடுப்பதன் மூலம் நம் தலைமுறை முன்னோர்களுக்காக செய்யப்படும் ஒரு சடங்கு சமுதாயமாகும் இந்த அமாவாசை நன்னாளில் புரோகிதர்கள் மந்திரங்களை ஒழிக்க செய்து இந்த சடங்கை நம் குடும்பத்தோடு சேர்ந்து நம் வீட்டில் அல்லது ஒரு குலத்தின் படித்துறையில் வைத்து செய்வார்கள் இந்த தர்ப்பணம் என்பது எவ்வாறு செய்ய வேண்டும் உதாரணமாக ஒரு தனி இலையில் படையல் போட்டு நம் முன்னோர்களின் படத்தை வைத்து வழிபடுவது பசுமாட்டிற்கு பச்சரிசி அகத்திக்கீரை எள் போன்றவற்றை உணவாக அளித்து வருவது போன்ற நல்ல காரியங்களை செய்ய வேண்டும் சில நபர்களுக்கு மாதம் மாதந்தோறும் தர்ப்பணம் கொடுக்க இயலாத நேரம் இருக்கும் அதனை ஈடுகட்ட ஆடி அமாவாசை தை அமாவாசை மகாலய அமாவாசை போன்ற ஏதேனும் ஒரு நன்னாளில் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்கலாம் இவ்வாறு செய்யும் பொழுது நாம் பித்துருக்கள் தோஷம் நீங்கும் மேலும் அவர்களின் ஆசையும் நமக்கு கிடைக்கும்.

thai-amavasai-tharpanam

இந்த தை அமாவாசை அன்று, நாம் என்னென்ன செய்ய வேண்டும்? என்று இப்பொழுது பார்க்கலாம். அதிகாலையில் எழுந்து தலை குளித்துவிட்டு, தர்ப்பணங்களுக்கு தேவையான பூஜை சாமான்களை வாங்கிக் கொண்டு, ஏதேனும் ஒரு குளத்தின் அருகில் உள்ள படித்துறைக்கு சென்று, ஒரு புரோகிதர் மூலம் தர்ப்பணம் கொடுக்கலாம். இந்த தர்ப்பணத்தில் புரோகிதர்கள் மந்திரத்தை சொல்லி, மூன்று பிண்டங்களை வைத்து நம் முன்னோர்களை நினைத்து, அதில் எள்ளு, தண்ணீர் விட்டு, அவர்களை நினைத்து வழிபட சொல்வார்கள். மேலும் அந்த பிண்டங்களை குளத்தில் கரைத்து விட்டு, நம் முன்னோர்களை,மனதில் நினைத்து வணங்கி அந்த தர்ப்பணத்தை செய்து முடிக்க வேண்டும். மேலும் பசுமாட்டு தானம், அதாவது கோ புண்ணியதானம் என்று சொல்லுவர். அதாவது பசுமாட்டிற்கு அகத்திக்கீரை வைப்பது ,உணவளிப்பது, பச்சரிசி தானமாக கொடுப்பது, போன்றவற்றை இந்த தை அமாவாசை என்று செய்ய வேண்டும். ஒரு பிறகு வீட்டிற்கு வந்து ஒரு நுனி இலையில் நீர் தெளித்து தூய்மை செய்து விட்டு நம் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை வைத்து படையலாக வைக்கலாம். இவ்வாறு இந்த தை அமாவாசை அன்று நாம் செய்யும் காரியம் நமது முன்னோர்களை சென்றடைந்து நமக்கு அவர்களின் ஆசையும் வழங்கி ஒரு சிறப்பாக நாளாக முடிகிறது.

நம் அனைவருக்கும் இந்த அமாவாசை என்று என்னென்ன செய்யலாம் என்று தெரியும் அதில் ஒன்றுதான் தர்ப்பணம் செய்வது இந்த அமாவாசை நன்னாளில் நம் முன்னோர்களின் நினைத்து தர்ப்பணம் செய்வது சிறப்பு வாய்ந்தது என்று மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. பித்ரு தர்ப்பணம் என்பது, நம் முன்னோர்கள் ஆன பித்ருக்களை திருப்தி சேவித்தல் என்று பொருள். அதன் காரணமாக, இந்த அம்மாவாசை நாளில் எள்ளும், தண்ணீரும் கொடுப்பதன் மூலம், அவர்கள் திருப்தி படுவார்கள் என்று நம் முன்னோர்கள் நம்பி இதனை தலைமுறை, தலைமுறையாக கடைப்பிடித்து வருகின்றனர். இந்த பித்ரு தர்ப்பணம் ஆனது மூன்று தலைமுறையினருக்கு செய்யப்படுகிறது.

thai-amavasai-tharpanam

இந்த அம்மாவாசை அன்று தர்ப்பணம் முடிக்கும் வரை வீட்டில் எந்த விட எந்தவித தெய்வ வழிபாடும் செய்யக்கூடாது அந்த தெய்வ வழிபாட்டை ஒத்தி வைக்க வேண்டும் நம் முன்னோர்களுக்கான தர்ப்பணம் பூஜைகள் முடிந்த பிறகு தான் நம் தினசரி பூஜைகளை செய்ய வேண்டும் மேலும் அவர்களின் நலன் கருதி மாமிசம் சாப்பிடாமல் இருப்பது கூடுதல் பலன் அளிக்கும் இந்த அமாவாசை அன்று வழிப்படும் தர்ப்பணம் என்று என்ன செய்தாலும் கிழக்கு திசை நோக்கி செய்யக்கூடாது வேறு எந்த திசையிலும் வேணாம் நீங்கள் செய்து கொள்ளலாம் கிழக்கை தவிர மற்ற திசையில் மட்டுமே நம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் மேலும் நம் விருப்பமான இஷ்ட தெய்வங்களையும் வழிபடலாம். குலதெய்வங்களையும் வழிபடலாம். ஆகையால் எந்த கோவிலுக்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

thai-amavasai-tharpanam

Go2Tamil

We are nearly 8+ years experience in blogging. this website is fully focus on tamil news and contents. If you are need our service for web designing,digital marketing,blogging,DTP,Graphic Designing you can mail me on vigneshwarsankar@gmail.com

Leave a Comment