நம் பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்பு என்பது கால் அழகின் பிரச்சனை மட்டுமல்ல. நமது ஆரோக்கியத்திற்கும் அது பிரச்சினையாக அமையும்.இந்தப் பாத வெடிப்பு பல வகையான சிரமத்தை நமக்கு கொடுக்கும். முதலில் சிறியதாக உள்ள வாத வெடிப்பை நாம் சரியாக கண்டு கொள்ளாத காரணத்தினால் இது பெரிய வெடிப்பாக மாறி பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது.இந்த பாத வெடிப்பு ஆழமாக மாறுவதன் மூலம் நாம் நடக்க முடியாத அளவுக்கு வலி உண்டாகும். அது மட்டும் இன்றி ஆழமான பாத வெடிப்புகளின் இடையில் இருந்து ரத்த கசிவும் ஏற்படும். நாம் நம் சரும அழகிற்கும், கூந்தல் பராமரிப்பிற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை கால் பாதங்களுக்கு கொடுப்பதில்லை. இதனால் கால் பாதங்களில் நிறைய அழுக்குகள் மற்றும் கிருமிகள் உருவாகின்றது. இதை நாம் பெரிதும் கண்டுகொள்ளாத நிலையில் தான் பாதப்பித்த வெடிப்பு, கால் ஆணி, சொரசொரப்பான பாதம் மற்றும் வறண்ட நிலை பாதம் போன்றவை ஏற்படுகிறது.
தற்போதைய காலகட்டத்தில் அனைத்து பிரச்சனைகளுக்கும் எளிய தீர்வு கிடைத்து விடுகிறது. அதுபோல கால் பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்பை சரி செய்ய மருந்தகங்களில் நிறைய கிரீம் மற்றும் ஆயின்மென்ட் கிடைக்கிறது. இதை நாம் வாங்கி பயன்படுத்துவதன் மூலம் தற்காலிக வழி நிவாரணி மற்றும் பித்த வெடிப்பு போக செய்கிறது. ஆனால் இது நிரந்தர தீர்வு அல்ல. சில நாட்களுக்கு அளித்து மீண்டும் விட்ட வெடிப்பு வரும். தினம் தினம் நாம் இது போன்ற ஆயின்மென்ட் அல்லது கிரீம்களை வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களைக் கொண்டு சரி செய்வது எந்த பின் விளைவுகளையும் ஏற்படுத்தாது. திரும்பத் திரும்ப பாத வெடிப்பு வருகிறது என்றால் அதை எப்படி போக்குவது என்று யோசிப்பதை விட அது ஏன் வருகிறது என்ற காரணத்தை தெரிந்து கொண்டால் மீண்டும் அது வராமல் தடுக்கலாம்.
பித்த வெடிப்பு ஏற்பட காரணங்கள் :
காரணம் 1 : நீண்ட நேரம் நின்று கொண்டே இருந்து நாம் செய்யும் அன்றாட வேலைகளினால் கால் அடியில் உள்ள பாதங்களில் அழுத்தம் ஏற்படுகிறது. இந்த அழுத்தம் காரணமாக காலை பித்த வெடிப்பு உருவாகிறது.
காரணம் 2 : சிலருக்கு கால்கள் வறண்ட நிலையில் காணப்படும். அப்படி வளர்ச்சி உள்ள கால்கள் ஈரப்பதம் கிடைக்காததால் பாதம் பிளவுகளை ஏற்படுத்துகிறது.அதாவது வெயில் காலத்தில் நீண்ட நாட்கள் தண்ணீர் இல்லாமல் இருக்கும் ஆறானது (ஆறு ) ஆங்காங்கே வெடித்து பிளவு பிழவாக காணப்படும். அது போல தான் நமது சருமமும். ஈரப்பதம் இல்லாமல் இருக்கும் பாதம் பிளவு படுகிறது.
காரணம் 3 : பெண்கள் சிலர் உயரமான காலணிகளை அணிந்து கொள்வார்கள். இதனால் குதிகாலில் அழுத்தம் ஏற்பட்டு பாதம் வெடிப்பு ஏற்படுகிறது.
காரணம் 4 : சொரியாசிஸ் தைராய்டு போன்ற சில உடல் பிரச்சினைகள் இருப்பது பித்த வெடிப்பு ஏற்பட ஒரு காரணமாக அமைகிறது.
காரணம் 5 : சிலர் தங்களது கால்களுக்கு பொருந்தாத செருப்பு அல்லது ஷூக்களை பயன்படுத்துவார்கள் இதுவும் வெடிப்பு மற்றும் கால் ஆணி ஏற்பட ஒரு காரணமாக உள்ளது.
காரணம் 6 : ஈரத்தன்மை இல்லாமல் உள்ள கால் பாதம் அதிக பாதிப்புக்கு உள்ளாக கூடும்.
காரணம் 7 : பாதங்களை சுத்தமாக பராமரிக்காத காரணத்தினால் பாத வெடிப்பு ஏற்படுகிறது.
இந்த டிப்சையும் ட்ரை பண்ணி பாருங்க : முகத்தில் இருக்கும் Blackheads உங்கள் அழகை கெடுக்கிறதா? இதோ 2 மினிட்ஸ் டிப்ஸ் உங்களுக்காக
பாத வெடிப்பை சரி செய்யும் வீட்டு முறை குறிப்புகள் :
குறிப்பு 1 : தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு செய்ய வேண்டிய குறிப்பு. உங்கள் கால் கொள்ளும் அளவிற்கு டப் ஒன்று எடுத்து அதில் கால் பாதம் மூழ்கும் அளவிற்கு வெதுவெதுப்பான அல்லது கால் கொடுக்கும் அளவிற்கு சூடான நீரை ஊற்றிக் கொள்ளவும். அந்த நீரில் ஒரு எலுமிச்சை பழத்தை முழுவதுமாக பிழிந்து சாறை கலந்து கொள்ளவும்.அதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து அந்த நீரில் உங்கள் கால்களை வைத்துக் கொள்ளவும். எலுமிச்சை சாறு அழுக்குகளை போக்கும் தன்மை உடையது.உப்பு மற்றும் மஞ்சள் தூள் கிருமிகளை கொள்ளும் நாசினியாக பயன்படுகிறது. எனவே கிருமியும் அழுக்குகளும் இல்லாத பாதம் பாத வெடிப்பிலிருந்து வெளி வருகிறது.
குறிப்பு 2 : பாதங்களில் உள்ள இறந்த, செல்களை நீக்கி விட வேண்டும். அதற்காக சொரசொரப்பாக உள்ள தரையில் கால் பாதங்களை தேய்க்க வேண்டும். இவ்வாறு தினமும் குளிக்கும் பொழுது செய்வது மிக நல்லது. ஏனென்றால் நம் குளிக்கும் பொழுது தண்ணீரில் கால் பாதம் ஆனது நன்றாக ஊறி இருக்கும். இதனால் இறந்த செல்களை எளிதில் நீக்கி விடலாம். சிலருக்கு அந்த இறந்த செல்லின் சதைப்பகுதியானது சற்று பெரிதாக ஆங்காங்கே நீட்டி இருக்கும் அவற்றை கத்திரிக்கோல் கொண்டு மெதுவாக நறுக்கி விடவும்.
குறிப்பு 3 : வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதை கால் பாதங்களில் தடவி பத்து முதல் 15 நிமிடம் நன்றாக ஊற வைத்து பிறகு அதை நேரில் கழுவி விடவும்.
இந்த டிப்சையும் ட்ரை பண்ணி பாருங்க : இயற்கை முறையில் உதடுகளை பிங்க் ஆக்குவது எப்படி!! இதோ சூப்பர் டிப்ஸ்
குறிப்பு 4 : தினமும் பாதங்களில் ஆயில் மசாஜ் செய்வதன் மூலம் பித்த வெடிப்பு குறையும். இதற்கு நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் போன்ற எண்ணைகளை நன்றாக தேய்த்து பத்து முதல் 15 நிமிடம் மசாஜ் கொடுப்பதன் மூலம் பாதம் புத்துணர்ச்சி பெற்று ரத்த ஓட்டத்தை சீராக்கி வெடிப்புகள் குறையும்.மற்றும் பாதம் வறட்சி நிலை மாறி ஈரப்பதத்துடன் காணப்படும்.
குறிப்பு 5 : பப்பாளி பழங்களை நன்றாக மசித்து அல்லது அரைத்து அந்த பேஸ்ட்டை பாதங்களில் தடவி நன்றாக ஊற வைத்து 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் பாதத்தை கழுவ வேண்டும்.
குறிப்பு 6 : வாழைப்பழம், தேன் மற்றும் தயிர் மூன்றையும் நன்றாக ஒன்று சேர்த்து மசித்து அல்லது அரைத்து அந்த பேஸ்ட்டை பாதங்களில் தடவி ஊறவைத்து பிறகு நன்றாக நீரில் தேய்த்து கழுவ வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள பாத வெடிப்பு காரணங்களில் எது உங்களுக்கு இருக்கிறது என்பதை நன்கு அறிந்து பிறகு அதற்கான குறிப்புகளை எடுத்துக்கொண்டு பயன்படுத்தி பாருங்கள். விளம்பரங்களில் வருவது போல எந்த ஒரு குறிப்பும் மறுநாளே அதன் பயனை வெளிப்படுத்தாது. இந்த குறிப்புகளை நீங்கள் தினம் செய்வதன் மூலம் மட்டுமே மாற்றத்தையும் மற்றும் அதன் பயனையும் உணர முடியும்.