தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் (TNPSC) ஆண்டுதோறும் குரூப் 2 தேர்வு மாநில அளவில் நடைபெற்று வருகிறது. பல்வேறு வகையான பதவிகளுக்கு தகுதியான மற்றும் திறமையான பணியாளர்களை தேர்வு செய்வதே இந்த குரூப் 2 தேர்வின் நோக்கமாகும். இதில் குரூப் 2 தேர்வின் மூலம் பல பதவிகளுக்கு மூன்று நிலைகளாக நேர்காணல் மூலமும், குரூப் 2A தேர்வின் மூலம் இரண்டு நிலைகளாக நேர்காணல் இல்லாமல் பதவிகளுக்கு பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 2025 குரூப் 2 தேர்விற்கான தேதி தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலமாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
2025TNPSC குரூப் 2 தேர்வு
கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல் மூலம் மட்டுமே குரூப் 2 மற்றும் குரூப் 2A பதவிகளுக்கு பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
1.குரூப் 2 (நேர்காணல் பதவிகள்) :
- முதற்கட்ட தேர்வு
- எழுத்துத்தேர்வு
- நேர்காணல்
2.குரூப் 2A (நேர்காணல் அல்லாத பதவிகள்):
- முதற்கட்ட தேர்வு
- எழுத்துத் தேர்வு
2025 குரூப் 2 முதற்கட்ட தேர்வு நடைபெறும் தேதி:
2025 ஆம் ஆண்டிற்கான TNPSC குரூப் 2 மற்றும் 2A தேடலில் முதற்கட்ட தேர்வு (preliminary exam) வருகின்ற செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி நடக்க இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குரூப் 2 2025 தேர்விற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
வருகின்ற செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி நடக்கவுள்ள குரூப் 2 மற்றும் 2 தேர்விற்கான முதற்கட்ட தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பங்களின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.அரசுப் பணியில் சேர விரும்புபவர்கள் இன்று முதல் (July 15) தங்களின் விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
தேர்வு | TNPSC குரூப் 2 & 2A |
காலியிடங்கள் | 645 |
முதல் தேதி | 15-07-2025 |
கடைசி தேதி | 13-08-2025 |
சம்பளம் | ரூ. 37200 – 117600 |
மொழி | தமிழ் , ஆங்கிலம் |
அதிகாரபூர்வமான இணையதளம் | CLICK HERE |
அதிகாரபூர்வமான அறிவிப்பு(English) | CLICK HERE |
அதிகாரபூர்வமான அறிவிப்பு(Tamil) | CLICK HERE |
விண்ணப்பிக்க | CLICK HERE |