எனக்கு கதை சொல்லும் போது ஒரு ரேட்ரோ பாடல் உள்ளது என்பதையும், அதனை நான் ரீகிரேட் செய்ய வேண்டும் என்பதையும், சொல்லவில்லை மற்றும் அது 90சில் மிகப்பெரிய வெற்றிகரமான ஹிட் பாடல் ஆக உள்ளது என்பது எனக்கு தெரியாது.
அந்தப் பாடலின் நடன பயிற்சி செல்லும்போது தான், எனக்கு இப்படி ஒரு பாடல் உள்ளது என்பதும் ,அதனை நான் recreate செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும் .அதே மாதிரியான உடைகளை கொடுத்து, அதே மாதிரியான நடன பயிற்சிகளையும் கொடுத்தார்.
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கான நடன பயிற்சியின்போதுதான் அர்ஜுன் தாஸை நான் முதன்முதலாக சந்தித்தேன். ஏனெனில் அந்தப் பாடலில் எங்கள் இரண்டு பேருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்பட்டோம்.
மொத்தம் அந்தப் பாடலுக்காக மூன்று நாட்கள் நாங்கள் ஒத்திகை பார்த்தோம். முதல் நாளிலேயே நாங்கள் இரண்டு பேருமே இயல்பாக பேசிக்கொள்ள ஆரம்பித்தோம். அதன் காரணமாகத்தான் படத்தில் நாங்கள் ஆடும்போது எங்களுக்குள் நல்ல விதமாக கெமிஸ்ட்ரி அமைந்துவிட்டதாக நினைக்கிறான் என்றார் ப்ரியா.
இதற்கு முன் நான் அந்தப் பாடலின் வீடியோவை ஒருமுறைகூட பார்த்ததில்லை.அந்தப் பாடல் எவ்வளவு ஹிட்டாகியிருக்கிறது; அது பலருக்கும் எவ்வளவு பிடிக்கும் என்பது எனக்கு தெரிந்திருந்தது.
சிம்ரன் மாதிரியே ஆட வேண்டும் என்கிற பிரஷரை நான் எடுத்துக்கொள்ளவில்லை எடுத்திருந்தால் ,கண்டிப்பாக என்னால் ஒழுங்காக ஆடியிருக்க முடியாது.

நாளை ஷூட் என்றால் இன்றுதான் அந்தப் பாடலின் வீடியோவை நான் பார்த்தேன். இன்ஸ்டாகிராமில் சிம்ரன் மேடமை மென்ஷன் செய்து ஸ்டோரி போட்டிருந்தேன். அதனை கவனித்த அவர் இன்ஸ்டாகிராமில் என்னிடம், ‘அந்தப் பாடலுக்கு நன்றாக நடனமாடியிருந்தீர்கள்’ என்று என்னை வாழ்த்தினார்.
அந்தப் பாடலை நாங்கள் ரீக்ரியேட்தான் செய்தோம். சிம்ரனை நான் ரீப்ளேஸ் எல்லாம் செய்யவே இல்லை. செய்யவே முடியாது. அவர் மாதிரிலாம் என்னால் எப்போதும் ஆடவே முடியாது. சிம்ரன் என்றால் ஒரே ஒரு சிம்ரன்தான்.
மேலும் அந்தப் அந்தப் பாடலில் AK அவர்களும் தோன்றி சின்ன ஸ்டெப் ஒன்றை போட்டிருந்தார்.அவர் எல்லோரையும் சமமாக நடத்தக்கூடியவர். பழகுவதற்கு எப்படி ஈசியாக இருக்குமோ அதேபோல்தான் அவருடன் நடிப்பதற்கும் ரொம்பவே ஈசியாக இருக்கும்

பெரிய ஸ்டார் படத்தில் நடித்துவிட்டு அந்தப் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தது இதுதான் முதன்முறை. அது எனக்கு ரொம்பவே புதுமையாக இருந்தது. முக்கியமாக முதல் காட்சியில்தான் கரெக்ட்டான விமர்சனங்கள் வெளியே வரும் என்பது எனது கருத்து” என்றார்
மேலும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் நடித்தது குறித்து பேசுகையில், ‘தனுஷ் இயக்கத்தில் நடித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவர் எனக்கு நடித்தெல்லாம் காண்பிக்கவில்லை. என்னை அவர் செலக்ட் செய்யும்போதே உங்கள் ஸ்டைலில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றுதான் சொன்னார். NEEK படத்தில் நடித்ததும் அற்புதமான அனுபவம்” என்றார்.

“நான் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் எனது அம்மா சில காலம் கோவையில்தான் வளர்ந்தார். நானும் அங்குதான் கொஞ்ச காலம் படித்தேன். அப்போதெல்லாம் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வரும்போது சன் டிவிதான் ஓடிக்கொண்டிருக்கும்.
அந்த சேனலில் வரும் சீரியல்களை எனது அம்மா ஒன்றுவிடாமல் பார்த்துக்கொண்டிருப்பார். அப்போதிருந்து எனக்கும் தமிழ் ஒட்டிகொண்டது. அதன் காரணமாகத்தான் என்னால் ஓரளவுக்கு நன்றாகவே தமிழ் பேச முடிகிறது என்று நினைக்கிறேன் என்றார் .
குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதற்காக முதலில் அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸிலிருந்துதான் ஃபோன் செய்து நேரில் வந்து பார்க்கும்படி சொன்னார்கள். நானும் சென்று பார்த்தேன். அப்போது என்னிடம் படத்தின் முழு கதையையும் இயக்குநர் சொல்லவில்லை.

என்னுடைய கேரக்டர் என்ன; அதன் முக்கியத்துவம் என்ன என்பது பற்றி மட்டும்தான் எனக்கு சொல்லப்பட்டது. பொதுவாக ஹீரோயின் வேடம் இல்லாமல் இந்த மாதிரியான கேரக்டர்களை ஏற்கும் நடிகைகளிடம் முழு கதையும் சொல்லப்படமாட்டாது என்பது எனக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான். அதனால் அதனை நான் எதிர்பார்த்துதான் சென்றிருந்தேன். எனது கேரக்டர் பிடித்திருந்தது நடிப்பதற்கு ஒத்துக்கொண்டேன் என்றார் பிரியா .