வருகின்ற மே 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். ரெட்ரோ படத்தின் இசைக்கு சந்தோஷ் நாராயணன்.
மற்றும் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ், நந்திதா தாஸ், ஜார்ஜ் மரியன், ரம்யா சுரேஷ், ஷ்ரியா சரண் (நடன கேமியோ) உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளிவந்த கனிமா மற்றும் தி ஒன்று இந்த இரண்டு பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் கொடுத்துள்ளது .மேலும் பல இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் மற்றும்,
மற்ற சோசியல் மீடியாக்களில் கனிமா பாடலுக்கு, அதிகமான ரிங்க்ஸ்களை பதிவிட்டுள்ளனர் .அதன் மூலம் இந்த பாடல் உலகம் முழுவதும் ட்ரெண்டிங்கில் இருந்தது.
படத்தின் போஸ்டர்கள் மற்றும் முதல் சிங்கிள் உட்பட படக்குழு வெளியிட்ட அனைத்தும் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது, மேலும் மேலும் ஹைப்பை அதிகரித்தது.
கனிமா பாடலின் லிரிகல் வீடியோவில் சூர்யாவின் கைதி தோற்றம் சமூக ஊடகங்களில் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது, கனிமா’ பாடல் 15 நிமிட ஒற்றை-ஷாட் காட்சியில் படமாக்கப்பட்டது
ஒரு அரிய மற்றும் தொழில்நுட்ப ரீதியாக சவாலான சாதனையாகும். இந்த காட்சி அதிர்ச்சியூட்டும் காட்சி பாடலின் சாரத்தை படம்பிடிப்பது மட்டுமல்லாமல், கதைக்களத்தில் அதிரடி காட்சிகள் மற்றும் முக்கிய தருணங்களை உள்ளடக்கியது.

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கங்குவா. இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களிலும், திசா பட்டானி, கருணாஸ், கேஎஸ் ரவிக்குமார், கார்த்தி யோகி பாபு நடித்து இருந்தனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது
சூர்யாவிற்கு ஒரு தோல்விப்படமாகவும் கங்குவா அமைந்தது. இந்த தோல்வி சூர்யா ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தினாலும் அடுத்த படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என நம்பியுள்ளனர்.
இப்படம் மே 1 ஆம் தேதி திரையில் வெளியாகின்றது. ஏப்ரல் மாதம் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து சலசல வென படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்தது.
தற்போது ரெட்ரோ திரைப்படம் ஒரு சில வாரங்களில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று ஏற்கனவே இப்படத்திலிருந்து பாடல்களுமே வரவேற்பை பெற்ற நிலையில். விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற இருக்கின்றது.
அதைத்தொடர்ந்து படத்தின் ட்ரைலரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் ரெட்ரோ படத்தை பற்றி கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், இப்படம் ஆக்ஷன் படமாக மட்டுமல்லாமல் ஒரு காதல் படமாக இருக்கும் என்றார்.

இதுவரை ஆக்ஷன் படங்களாகவே எடுத்து வந்த கார்த்திக் சுப்புராஜ் முதன் முறையாக ஒரு காதல் படத்தை, சூர்யாவை வைத்து இயக்கியுள்ளார். இதனால் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது.
சமீபத்தில் ஒரு பேட்டியில் சூர்யாவின் கதாபாத்திரம் பற்றி பேசியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.இப்படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் இயல்பாக இருக்கவேண்டும் என அவர் விரும்பினார். மாஸான காட்சிகள் வேண்டாம்,
க்ளாஸாகவே அணுகலாம் என கூறினார் சூர்யா. ஒரு முன்னணி ஹீரோ இதுபோல சொல்வது எல்லாம் மிகப்பெரிய விஷயம். சூர்யா படத்திற்காக இதை செய்தார் என்றார் கார்த்திக் சுப்புராஜ்.
தமிழில் சூப்பர் ஹிட் படங்கள் ஆன 2012 ல் பீட்சா அறிமுகப் படம்
2014 ல் ஜிகர்தண்டா
2016 ல் இரவி
2021 ல் ஜகமே தந்திரம்
2022 ல் மகான் [
2023 ல் ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் சிறந்த இயக்குனருக்கான ஆனந்த விகடன் சினிமா விருது
2025ல் ரெட்ரோ அதனால் இந்தப் படம் பிளாக்பஸ்டர் ஆகும் எனவும் வெற்றிகரமான படம் ஆகும் எனவும், மற்றும் சூர்யாவிற்கு மீண்டும் ,மீண்டு வர உதவியாக இருக்கும் என்றும் ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.