முகப்பு / Blog / யாவும் ஊரே யாவரும் கேளிர்| Yaadhum Oore Yaavarum Kelir Padiyavar meaning in tamil |
Blog

யாவும் ஊரே யாவரும் கேளிர்| Yaadhum Oore Yaavarum Kelir Padiyavar meaning in tamil |

A
செய்தி ஆசிரியர்
Admin User
25 Apr 2025, 08:42
2 பார்வைகள்
பகிர் :
யாவும் ஊரே யாவரும் கேளிர்| Yaadhum Oore Yaavarum Kelir Padiyavar meaning in tamil  |

கணியன் பூங்குன்றன் சங்க காலப் புலவர்களுள்  ஒருவர் .இவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள மகிழ பாலன் பட்டியில் பிறந்தார் புகழ்பெற்ற வரிகள் “யாவும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பாடல் அமெரிக்காவின் டர்ஹாம் சிம்பொனி உள்ளிட்ட பல பன்னாட்டு இசைக்கலைஞர் கலைஞர்களால் பாடப்பட்டு இசை அமைப்பாளர்களால் வெளியிடப்பட்டது.

சங்க இலக்கியம் தமிழில்கி.மு. 500ல்

இருந்து கி.பி. 200 வரையில் எழுதப்பட்ட இலக்கியங்கள் ஆகும். 473 புலவர்களின் 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன

 அதில் ஒருவர் கணியன் பூங்குன்றனார்.இவர் கணித்து பலன் கூறுவதில் வல்லவர் என்பதால் கணியன் என்றும், 

கணியன் – என்றால் கணிப்பவன் (சோதிடம் அல்லது ஆரூடம் மூலமாகக் கணிப்பது), கணக்கறிஞன் என்று பொருள். கணியர் என்பவர்கள் வானியலிலும் அதன் அடிப்படையிலெழுந்த சோதிடத்திலும் வல்லவர்கள். இவர்கள் அறிவர், அறிவன், கணி, கணியன் என்றும் அழைக்கப்பட்டனர்.

கணியன் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மகிபாலன்பட்டி என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தார். புறநானூறு , நற்றிணை ஆகிய இரு கவிதைகளை இயற்றினார் . நிச்சயமற்ற; அநேகமாக கிமு 6 ஆம் நூற்றாண்டு.

இவரின் புறநானூற்றுப் பாடல் பழங்காலத் தமிழர்களின் பண்பாட்டை விளக்குகிறது.

  1. கேளிர் = உறவினர்.
  2.   நோதல் = வருந்துதல்;
  3.  தணிதல் = குறைதல்
  4.  முனிவு = கோபம், வெறுப்பு
  5.   தலைஇ = பெய்து; 
  6. ஆனாது = அமையாது.
  7.  இரங்கல் = ஒலித்தல்; 
  8. பொருதல் = அலைமோதல்;
  9.  மல்லல் = மிகுதி, வளமை.
  10.   புணை = தெப்பம்.
  11.  திறம் = கூறுபாடு; 
  12. திறவோர் = பகுத்தறிவாளர். 
  13. காட்சி = அறிவு
  14. மாட்சி = பெருமை.

யாதும் ஊரே  யாவரும் கேளிர்((Yaadhum Oore Yaavarum Kelir)

  • யாதும் ஊரே,யாவரும் கேளிர்;

எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், எல்லோரும் எங்கள் உறவுகள் தான்;

  • தீதும், நன்றும், பிறர் தர வாரா;

தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை;

  • நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;

துன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான்.

  • சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்

செத்துப் போவது ஒன்றும் புதியது இல்லை.

  • இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்

வாழ்க்கை இனியது என்று சொல்லி மகிழ்ச்சிப் படுவதும் தவறு.

  • இன்னாது என்றலும் இலமே! மின்னொடு

மாறி, வாழ்க்கையில் இருந்து விலகி ஏற்கும் துறவு கொடியது என்று சொல்லுவதும் தவறு;

  • வானம் தண் துளி தலைஇ ஆனாது,

-வானம், மின்னல் வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய,

  • கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று

கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு இறங்கி, பெருகி வரும் ஆற்று நீரில் சிக்கி,

  • நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்

-அதன் தடத்திலே போகும் புனையைப் [மிதவை (அ) சிறு படகு] போல, அரிய உயிரியக்கம் ஆனது

  • முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

முன்னர் இட்ட முறைவழியே போகத் தான் செய்யும் (நியதி வழிப் படும்) என்று வாழ்க்கையின் திறம் அறிந்தவர்கள் சொல்லுவார்கள்.

  • காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்

அந்த காட்சியில் நாங்கள் தெளிந்தோம் ஆகையால், [இந்தப் பேருண்மையைக் கண்டு அனுபவத்தால் தெளிவு பெற்றோம் ஆகையால்]

  • பெரியோரை வியத்தலும் இலமே!

பெரியவர்களைக் கண்டு வியத்தலும் தவறு; அறிவிலோ செல்வத்திலோ பிறப்பிலோ நம்மை விடவும் மேலானவரைக் கண்டு போற்றித் துதித்தலும் செய்யோம்.

  • சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

சிறியவர்களை இகழ்தல் அதனிலும் தவறு. [நம்மை விடவும் கீழானவரைக் கண்டு சிறுமையாய் நடத்துதலை எண்ணவும் மாட்டோம்.

பாடலின் வரிகள் வரிகளின்  பொருள் 
நோதல்துன்பம்
தணிதலும் துன்பம் தொலைதல்
சாதலும் புதுசு இல்ல
வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே
இன்னாததுகசப்பு -ன்னு கசப்பதும் இல்லை
தண்துளி குளிர்ந்த துளி 
புணை  தெப்பம், மிதவை, மூங்கில்
முனிவு வெறுப்பு, கோபம் 

திணை: 

பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுதல்.

துறை: 

பொருண்மொழிக் காஞ்சி. உயிருக்கு உறுதியளிக்கும் இம்மை மறுமைக் கடன்களை எடுத்துக் கூறுதல்.

Yaadhum Oore Yaavarum Kelir Padiyavar meaning in tamil

இத்தகைய சிறப்பு பெற்ற பாடலைப் பாடிய அந்தப் புலவருக்கு நீண்ட காலமாக நினைவகம் அமைக்க பலரும் கோரினர். தற்போது தமிழக அரசின்தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ரூ 10.33 லட்சம் மதிப்பில் நினைவுத்துாண் உள்ளது .

கட்டுரையைப் பகிர்க:
A

Admin User

செய்தி ஆசிரியர் மற்றும் கட்டுரையாளர். சமூக, அரசியல் மற்றும் சினிமா நிகழ்வுகளை துல்லியமாகவும் விரைவாகவும் வாசகர்களுக்கு வழங்குவதில் வல்லவர்.