முகப்பு / Blog / திருவாரூர் மாவட்டத்திற்கு மீண்டும் புதிய மாவட்ட ஆட்சியர் நியமனம்! யார் அந்த புதிய கலெக்டர்?
Blog

திருவாரூர் மாவட்டத்திற்கு மீண்டும் புதிய மாவட்ட ஆட்சியர் நியமனம்! யார் அந்த புதிய கலெக்டர்?

A
செய்தி ஆசிரியர்
Admin User
03 Feb 2025, 08:28
5 பார்வைகள்
பகிர் :
திருவாரூர் மாவட்டத்திற்கு மீண்டும் புதிய மாவட்ட ஆட்சியர் நியமனம்! யார் அந்த புதிய கலெக்டர்?

கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் புதிய  மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டனர். திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், திருவாரூர், திண்டுக்கல், திருவள்ளூர், திருப்பத்தூர் போன்ற ஒன்பது மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார் சாரு ஸ்ரீ ஐஏஎஸ் அவர்கள்.திருவாரூர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த சாரு ஸ்ரீ ஐஏஎஸ்,அவர்கள் தற்போது

மாற்றப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாகசிவ சவுந்திரவள்ளி ஐஏஎஸ் அவர்கள் புதிய மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

thiruvarur-new-collector-mohanachandran-2025
thiruvarur-new-collector-mohanachandran-2025

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி புதிதாக நியமிக்கப்பட்ட சிவ சவுந்தரவல்லி ஐஏஎஸ் அவர்களுக்கு பதிலாக மீண்டும் புதிதாக மற்றொரு ஐஏஎஸ் அவர்கள் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவசௌந்தரவல்லி ஐஏஎஸ் அவர்களுக்கு பதிலாக மோகனசந்திரன் அவர்கள் புதிய மாவட்ட ஆட்சியராக  நியமிக்கப்பட்டுள்ளார். 

கட்டுரையைப் பகிர்க:
A

Admin User

செய்தி ஆசிரியர் மற்றும் கட்டுரையாளர். சமூக, அரசியல் மற்றும் சினிமா நிகழ்வுகளை துல்லியமாகவும் விரைவாகவும் வாசகர்களுக்கு வழங்குவதில் வல்லவர்.