முகப்பு / Hair Spa Remedy / முடி கொட்டுவதை நிறுத்த இந்த மூன்று வீட்டு முறை  வைத்தியமே போதும்! | how to control hair fall using these 3 homemade tips?
Hair Spa Remedy

முடி கொட்டுவதை நிறுத்த இந்த மூன்று வீட்டு முறை  வைத்தியமே போதும்! | how to control hair fall using these 3 homemade tips?

A
செய்தி ஆசிரியர்
Admin User
21 May 2026, 03:07
17 பார்வைகள்
பகிர் :
முடி கொட்டுவதை நிறுத்த இந்த மூன்று வீட்டு முறை  வைத்தியமே போதும்! | how to control hair fall using these 3 homemade tips?
பொருளடக்கம்

how to control hair fall: முடி கொட்டுவதை நிறுத்துவதற்கு என்னென்ன செய்யலாம் என்பதை யோசிப்பதற்கு முன்பு ஏன் இவ்வளவு முடி கொட்டுகிறது என்ற காரணத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். முடி கொட்டுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், பெரும்பாலும் அதிக அளவில் காணப்படும் காரணங்கள் மூன்று.

ஒன்று நாம் உண்ணும் உணவு முறை, இரண்டாவது வேலை காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணமாக வரும் மன அழுத்தம், மூன்றாவது

மாசுக்கள் அல்லது அன்றாடம் தலைமுடிக்குப் பயன்படுத்தும் கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ அல்லது எண்ணெய் போன்ற அழகு சாதன பொருட்கள். முடி கொட்டுவதை நிறுத்த வீட்டில் மற்றும் அருகிலேயே கிடைக்கும் அன்றாட பொருளைக் கொண்டு எவ்வாறு சரி செய்யலாம் என்பதை தற்போது காணலாம். முடி அடர்த்தியாக வளர இதை படிங்க =>which treatment is best for hair?

how to control hair fall?

how to control hair fall using these 3 tips?- hibiscuss pack

 செம்பருத்தி செடியின் பூ மற்றும் நிலை ஆகிய இரண்டும் தலைமுடி பிரச்சனைக்கு ஒரு தீர்வாக உள்ளது. செம்பருத்தி பூ மற்றும் இடையே உங்கள் முடிக்கு தேவையான அளவு எடுத்துக்கொண்டு இரண்டையும் நன்றாக மிக்ஸியில் அரைத்து இந்த பேஸ்டுடன் இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து தலையில்  தேய்த்து 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை நன்றாக ஊற விடவும். பின்னர் குளிர்ந்த அல்லது சாதாரண நேரில் நன்றாக தலையை தேய்த்து அலசி விட வேண்டும். ஷாம்பு எதுவும் தேவையில்லை செம்பருத்தி பூ மற்றும் இலை முறைத்தன்மையை கொடுக்கும்.

how to control hair fall using these 3 tips? fenugreek pack

தலை குளிப்பதற்கு முதல் நாள் இரவே முடிக்கு ஏற்ற அளவு வெந்தயத்தை தண்ணீரில் மூழ்கும்படி ஊற வைக்கவும். காலையில் நன்றாக ஊறிய வெந்தயத்துடன் செம்பருத்தி பூ செம்பருத்தி இலையும் சேர்த்துக் கொள்ளலாம் நன்றாக அரைத்து தலையில் அப்ளை செய்து ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விடவும்.  வெந்தயம் குளிர்ச்சி  என்பவர்கள், வெந்தயத்துடன் இரண்டல்லது 3 மிளகுகளை சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.பின்னர் சாதாரண நேரில் தலையை அலசி விடவும்.  வெந்தயத்தை நன்றாக தேய்த்து   குளித்தாலே நுரை வரும். அதனால்  இதன்பிறகு ஷாம்பூ எதுவும் போடத் தேவையில்லை. கண்டிஷனரும் தேவையில்லை. முடி பார்ப்பதற்கு பளபளவென  காட்சி அளிக்கும்.

how to control hair fall using these 3 tips? - Amla pack

நெல்லிக்காவின் விதையை எடுத்து விட்டு சதைப்பகுதியை சிறு துண்டுகளாக வெட்டி அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு  இரண்டு அல்லது மூன்று சொட்டுக்கள் சேர்த்துக்கொண்டு நல்ல பேஸ்ட் ஆக தயாரித்து தலையில் அப்ளை செய்து  25 நிமிடம்  முதல் 30 நிமிடங்களுக்குள் ஊறவைத்து வெதுவெதுப்பான நேரில் தலையை அலசி விடவும். நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை பழம் இரண்டுமே மிகவும் குளிர்ச்சியானது என்பதால் அரை மணி நேரத்திற்கு மேலாக தலையில் வைத்துக் கொள்ள வேண்டாம். 

நெல்லிக்காயில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் விட்டமின் சி உள்ளதால் ஆரம்ப நிலையிலேயே முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவுகிறது.

கட்டுரையைப் பகிர்க:
A

Admin User

செய்தி ஆசிரியர் மற்றும் கட்டுரையாளர். சமூக, அரசியல் மற்றும் சினிமா நிகழ்வுகளை துல்லியமாகவும் விரைவாகவும் வாசகர்களுக்கு வழங்குவதில் வல்லவர்.