முகப்பு / சினிமா / Bigg Boss சீசன் 8 : இதோ! Bigg boss சீசன் 8 பட்டத்தை வென்றார் முத்துக்குமரன் !
சினிமா

Bigg Boss சீசன் 8 : இதோ! Bigg boss சீசன் 8 பட்டத்தை வென்றார் முத்துக்குமரன் !

A
செய்தி ஆசிரியர்
Admin User
18 Jan 2025, 14:33
6 பார்வைகள்
பகிர் :
Bigg Boss சீசன் 8 : இதோ! Bigg boss சீசன் 8 பட்டத்தை வென்றார் முத்துக்குமரன் !

கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மிகவும் பிரமாண்டமாக தொங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி,100 நாட்களை வெற்றிகரமாக கடந்து தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.18 போட்டியாளர்களுடன் தொங்கிய இந்நிகழ்ச்சி, இடையில் wildcard கண்டெஸ்டண்ட் 6 பேரை உள்ளிறக்கி, 24 போட்டியாளர்களுடன் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தது.தற்பொழுது இறுதி நிலையில் யார் இந்த டைட்டில் வின்னர் பட்டத்தை வெல்வார் என்பது பல ரசிகர்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 7

சீன்களாக பிகஃபாஸ்ஸிற்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.அதே போல் இந்த சீசன்னும் ரசிகர்களுக்கு பெரும் எதிர்[மார்புடன் அமைந்தது.அதிலும் குறிப்பாக இந்த சீசன் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கியது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.பல விமர்சனங்களை கொண்ட இந்த நிகழ்ச்சி தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளது.

பணப்பெட்டி : வழக்கமாக கடந்த 7 சீன்களில் பணப்பெட்டி என்று வைப்பார்கள். அதனை எடுப்பவர்கள், பணத்துடன்  அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவார்கள்.இது வழக்கமான ஒன்று.ஆனால் இம்முறை இந்த 8வது சீசனில் பல மாற்றத்தை கொண்டுள்ளது.பணப்பெட்டியை மெயின் டோருக்கு வெளியில் சற்று தூரம் தள்ளி வைத்து அந்த தூரத்திற்கு ஏற்ப நேரத்தை நிர்ணயித்து வைத்தார்கள்.அதன்படி பண பெட்டியை கொடுத்த நேரத்திற்குள் எடுத்துக்கொண்டு மீண்டும் வீட்டிற்குள் வருபவர்கள்,தாங்கள் எடுத்த பணத்துடன் மீண்டும் போட்டியை தொடரலாம் என்றும், ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் பணப்பெட்டியை எடுக்க செல்லலாம் என்றும் வீதியில் கொடுக்கப்பட்டு இருந்தது.

அதன்படி முதலில் முத்துக்குமரன் பணப்பெட்டியை எடுக்க சென்று வெற்றிகரமாக வீட்டிற்குள் வந்தார்.பிறகு அவரை தொடர்ந்து, ரயன் ,விஷால் மற்றும் பவித்ரா ஆகியோர் வெற்றிகரமாக பணத்துடன் வீட்டிற்குள் வந்தனர். இவர்களில் சௌந்தர்யா மட்டும் பணப்பெட்டியை எடுக்காமல் பாதியில் வீட்டிற்குள் ஓடிவந்தார்.

எதிர்பாராத ஜாக்குலின் எவிக்சன்: பணப்பெட்டியை எடுக்கும் டாஸ்கில் , பெட்டியை எடுக்க ஜாக்குலினுக்கு கொடுக்கப்பட்ட தூரம் 80 மீட்டர், நேரம் 35 செகண்ட். தொடக்கத்துலயே பதட்டத்துடன் இருந்த ஜாக்குலின் கடைசியில் பயத்துடனே பணப்பெட்டியை எடுக்க சென்றார்.பணப்பெட்டியை எடுக்க ஓடிய ஜாக்குலின் கொடுக்கப்பட்ட 35 செகண்டுகளுக்குள் வீட்டிற்குள் வரவில்லை. அவர் வீட்டிற்குள் வந்த பிறகு வீடியோவை பார்த்ததில், இரண்டு செகண்ட் தாமதமாக வீட்டிற்குள் வந்ததால் யாரும் எதிர்பார்க்காத விதமாக ஜாக்குலின் வெளியேற்றப்பட்டார்.

டாப் 5 கண்டெஸ்டண்ட் : முன்னதாக 6 போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தயாராக இருந்த  நிலையில் ,பணப்பெட்டி டாஸ்கில் ஜாக்குலின் வெளியேறியதால் தற்பொழுது 5 போட்டியாளர்கள் மட்டுமே இறுதி போட்டிக்கு சென்றார்கள்.முத்துக்குமரன் , சௌந்தர்யா , பவித்ரா , ரயன் மற்றும் விஷால் ஆகிய ஐந்து பெரும் இறுதி போட்டியில் களத்தில் உள்ளனர்.

டைட்டில் வின்னர் முத்துக்குமரன் : biggboss சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக பேச்சாளர் முத்துக்குமரன் வெற்றிபெற்றுள்ளார். மக்களின் மனதை கவர்ந்து, மக்களால் அதிக வாக்குகளை பெற்று தற்பொழுது டைட்டில் வின்னராக முத்துக்குமரன் வெற்றிபெற்றுள்ளார்.பலரும் ஆரம்பத்திலேயே முத்துக்குமரன் வெற்றியாளர் என்று சமூக வலைத்தளங்களில் பரப்பிய இச்செய்தி தற்பொழுது உண்மையாகி உள்ளது என்பது முத்துகுமாரனின் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்து உள்ளது.

Bigg Boss சீசன் 8 : இதோ! Bigg boss சீசன் 8 பட்டத்தை வென்றார் முத்துக்குமரன் !

பரிசு தொகை ஐம்பது லட்சம் இல்லை. வெறும் நாற்பது லட்சம் மட்டுமே? 

Biggboss சீசன் 8 நிகழ்ச்சியில் வெற்றி பெறுவோருக்கு ஐம்பது லட்சம் பரிசு என்று அறிவித்து இருந்தனர்.அனால் வெற்றி பெற்ற முத்துகுமாரனுக்கு வெறும் நாற்பது லட்சத்து ஐம்பதாயிரம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

ஏனென்றால் பணப்பெட்டி டாஸ்கில் வைக்கப்பட்ட பணம், இந்த டைட்டில் வின்னர் பணத்திலிருந்து வைக்கப்பட்டு கழிக்கப்பட்டதால்,முழு தொகையான ஐம்பது லட்சம் முத்துகுமரனுக்கு கொடுக்கப்படவில்லை. முதலில் பணப்பெட்டி டாஸ்கில் 50,000 பணத்தை எடுத்த முத்துகுமரனும், பிறகு அவரை தொடர்ந்து, ரயன் எடுத்த இரண்டு லச்சம், பவித்ரா இரண்டு லச்சம் , விஷால் ஐந்து லட்சம், ஆகியன கழிக்கப்பட்டு கடைசியில் நாற்பது லட்சத்தி ஐம்பதாயிரம் முத்துகுமாரனுக்கு பரிசாக கொடுக்கப்பட்டது.

கட்டுரையைப் பகிர்க:
A

Admin User

செய்தி ஆசிரியர் மற்றும் கட்டுரையாளர். சமூக, அரசியல் மற்றும் சினிமா நிகழ்வுகளை துல்லியமாகவும் விரைவாகவும் வாசகர்களுக்கு வழங்குவதில் வல்லவர்.