முகப்பு / Hair Spa Remedy / இழந்த முடியை மீண்டும் பெற இந்த 3 டிப்ஸை பின்பற்றினால் போதும்! | 3 Best Hair Regrowth Tips In Tamil
Hair Spa Remedy

இழந்த முடியை மீண்டும் பெற இந்த 3 டிப்ஸை பின்பற்றினால் போதும்! | 3 Best Hair Regrowth Tips In Tamil

A
செய்தி ஆசிரியர்
Admin User
21 May 2026, 01:30
8 பார்வைகள்
பகிர் :
இழந்த முடியை மீண்டும் பெற இந்த 3 டிப்ஸை பின்பற்றினால் போதும்! | 3 Best Hair Regrowth Tips In Tamil
பொருளடக்கம்

3 Best Hair Regrowth Tips: முடி உதிர்தல் என்பது ஆண் பெண் இருவருக்கும்  உள்ள  பொதுவான பிரச்சனையாகும்.செயற்கையாக செய்யப்பட்ட ரசாயனம் நிறைந்த ஷாம்பூ மற்றும் கண்டிஷன்களை பயன்படுத்துவதன் மூலம் முடி கொட்டுகிறது என்பதால்,  இன்றைய நவீன காலத்திலும், பழங்கால முறைப்படி இயற்கை சீயக்காய் அல்லது இயற்கையான பொருட்களைக் பயன்படுத்துவதால் முடி கொட்டுவது குறையும் என நினைத்து பயன்படுத்துகிறார்கள்.

அவற்றுள் சில பொருட்கள், நன்கு பயனளிக்கிறது என்பதற்கான எந்த

ஒரு அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை. அதே போல சில, இயற்கை பொருட்கள் முடி உதிர்வை தடுத்து நிறுத்தும் என அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

எந்த பொருட்களை எவ்வாறு பயன்படுத்தினால் இழந்த முடியை மீண்டும் பெறலாம் என்பதை தற்போது காணலாம்.

3 Best Hair Regrowth Tips

Best Hair Regrowth Tips

நம் உச்சந்தலையில் ரத்த ஓட்டம் சீராக இருந்தால்  முடியின் வளர்ச்சி அதிகரிக்கும். முடி கொட்டுதலும் குறையும்.ரத்த ஓட்டத்தை அதிகரிக்க மசாஜ் செய்தல் அவசியம். மசாஜ் செய்வதன் மூலம் உச்சந்தலையின் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் முடியின் வேர் பகுதிகள் வலிமை அடைகிறது. இந்த வலிமையின் மூலம் இழந்த முடி மீண்டும் வளர்ச்சி அடைய தூண்டப்படுகிறது.எந்தெந்த எண்ணெய்களை பயன்படுத்தி முடியின் வளர்ச்சியை தூண்டலாம் என்பதை தற்போது காணலாம்.

புதினா எண்ணெய்  அல்லது லெமன், டீ ட்ரீ  எண்ணெய்யை பயன்படுத்தி மசாஜ் செய்யலாம்.இந்த எண்ணெய்க்கு பதில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயும் பயன்படுத்தலாம்.முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணெய்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். தேர்ந்தெடுத்த எண்ணெய்யை லேசாக சூடுபடுத்த வேண்டும். நன்றாக கொதிக்க விடக்கூடாது. லேசாக சூடு படுத்திய எண்ணெய்யை விரல்களில் எடுத்து  தலையில் உள்ள ஸ்கேல்ப்  பகுதிகளில் 20 நிமிடங்கள் நன்றாக வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். பிறகு ஒரு அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு சாதாரண நேரில் தலையை  அலசவும். எண்ணெய்யை  தலையில் தடவும் பொழுது முடியை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து முடியின் வேர் பகுதி முதல் நுனி பகுதி வரை நன்றாக மசாஜ் செய்யவும்.

முடியின் நுனியில் சில அல்லது பல மொழிகள் பிளவு பட்டு வெடித்த நிலையில் காணப்படும். இந்த  பிளவு பட்ட முடியானது மேலிருந்து வளரக்கூடிய முடியை வளர்ச்சி அடைய வைக்காமல் தடுக்கும். அதனால் பிளவுபட்ட முடியின் நுனியை அடிக்கடி வெட்டி விடுவது மிக நல்லது. இதன் மூலம் முடியின் வளர்ச்சி தூண்டப்படுகிறது. இரண்டு  மாதங்களுக்கு ஒரு முறை முடியை சிறிது வெட்டிக் கொள்வது நல்லது. பிளவு பட்ட முடி இருக்கிறது என்றால் அதனை வாரம் இரண்டு முறை வெட்டி விடுங்கள். இது முடியின் ஆரோக்கியத்திற்கு நல்லது. 

இளைஞர்களின் இளநிரையை  எளிதில் போக்கும் இரண்டு எளிய டிப்ஸ் தெரிந்துக்கொள்ள இதோ கிளிக் செய்யுங்கள் : how to change grey hair to black hair in just 2 steps?

Hair Regrowth Tips

டிப்ஸ் 3 : தலையில் அதிகப்படியான கெமிக்கல் நிறைந்த ஷாம்பூக்களை பயன்படுத்துவதன் மூலம் இயற்கையாக நம் கூந்தலில் இருக்கக்கூடிய எண்ணெய் பசையை இழக்க வைத்து கூந்தலின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்.அதனால் வாரந்தோறும் ஷாம்பூ பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளலாம். வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே ஷாம்பு பயன்படுத்திவிட்டு மற்றே நாட்களில் கண்டிஷனர்கள் பயன்படுத்தலாம்.கண்டிஷனர் நம்  தலைமுடியில் உள்ள சேதங்களை சரி செய்து முடியை வலிமையாக்க உதவுகிறது.

முடியை இறுக்கமாக பின்னுவதோ போனிடைல் பிக்டைல்  போன்ற ஸ்டைல்களை வைப்பதால் முடி இறுகி நுணுங்கி கொட்ட வாய்ப்பு உள்ளது. இரவிலும் முடியை ஃப்ரீயாக அவிழ்த்து விடுவதோ அல்லது இறுக்கமாக பின்னி போடுவதோ செய்ய வேண்டாம். இரவு தூங்குவதற்கு முன்பு முடியை நன்றாக வாரி தளர பின்னிக்கொண்டால் நல்லது. தலை வாருவதற்கு பயன்படுத்தும் சீப்பின் பற்கள் பெரிய பற்களாக அதாவது ஒரு பல்லுக்கும் அடுத்த பல்லுக்கும் இடையில் பெரிய இடைவேளை இருப்பது போல உள்ள சீப்பை பயன்படுத்தவும். தலை குளித்து வந்த பிறகு ஈரத் தலையுடன் தலைவாரக் கூடாது. முடியின் வேர்கள் அப்பொழுது மென்மையாக இருப்பதால் முடி அதிக அளவில் கொட்டும். அதனால் ஈரத்தலையுடன் தலைவாரக் கூடாது.

கட்டுரையைப் பகிர்க:
A

Admin User

செய்தி ஆசிரியர் மற்றும் கட்டுரையாளர். சமூக, அரசியல் மற்றும் சினிமா நிகழ்வுகளை துல்லியமாகவும் விரைவாகவும் வாசகர்களுக்கு வழங்குவதில் வல்லவர்.