இன்று சென்னையில் 24 காரட் தூய தங்கத்தின் விலை ரூ.94.020-க்கும், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 86,185-க்கும் விற்பனையாகி வருகிறது. அதேபோல வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.94,300-க்கும் விற்பனையாகத் தொடங்கியுள்ளது.
இன்று ரூ.94,000 தொட்ட தங்கம் விலை.. நகைப் பிரியர்களுக்கு ஷாக்கான நியூஸ்தான்!
கடந்த பத்து நாட்களில் சென்னை தங்கம் விலை நிலவரம் ஒரு கிராம்.
தேதி | 22 கேரட் | 24 கேரட் |
ஏப்ரல் 12 2025 | 8770 | 9567 |
ஏப்ரல் 11 2025 | 8745 | 9540 |
ஏப்ரல் 10 2025 | 8560 | 9044 |
ஏப்ரல் 9 2025 | 8290 | 8973 |
ஏப்ரல் 8 2025 | 8225 | 9038 |
ஏப்ரல் 7 2025 | 8310 | 9066 |
ஏப்ரல் 6 2025 | 8310 | 9066 |
ஏப்ரல் 5 2025 | 8400 | 9164 |
ஏப்ரல் 4 2025 | 8560 | 9338 |
டிரம்பின் முன்னுக்குபின் முரணான வர்த்தக கட்டணங்கள் பற்றிய அறிவிப்புகளால் உலக பங்குச் சந்தைகள், கமாடிட்டி மார்கெட் எல்லாம் சரிந்துள்ளன.
இந்நிலையில் தங்கத்தின் தேவை அதிகரித்ததால்,தங்கம் விலை மளமளவென உயரத் தொடங்கியுள்ளது. இனி சென்னை, மும்பை, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா, டெல்லி மாநிலங்களில் தங்கம் மற்றும் விலை நிலவரம் பற்றி காணலாம்.
நிதி சிக்கல்கள் அல்லது நிதிச் சூழல் மோசமாக உள்ள காலங்களில், தங்கம் நம்பகமான மற்றும் உறுதியான சொத்தாக கருதப்படுகிறது.
மக்கள் பங்குகளில் முதலீடு செய்வதை விட்டு, தங்கத்தில் முதலீடு செய்ய திரும்புகிறார்கள்,” என்று அவர் குறிப்பிடுகிறார்.
“அதுதான் உண்மையில் தங்கத்தின் விலைகளை உயர்த்துகிறது.”
நிதிச் சந்தையில் உலகளாவிய நிச்சயமற்ற சூழல் உள்ளபோது, காலம் காலமாக மக்கள் ‘விரும்பி வாங்கும்’ முக்கிய உலோகமாக தங்கம் உள்ளது.

2020 ஆம் ஆண்டில், கோவிட்-19 பெருந்தொற்று பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன் விளைவாக தங்கத்தின் விலை திடீரென அதிகரித்தது.
பண்டைய எகிப்தில் துட்டன்காமனின் தங்க முகமூடி முதல் இந்தியாவின் பத்மநாபசுவாமி கோவிலின் தங்க சிம்மாசனம் வரை, வரலாற்று ரீதியாக மத மற்றும் அடையாள முக்கியத்துவம் வாய்ந்ததாக தங்கம் விளங்குகிறது.
தங்கள் செல்வத்தை பாதுகாப்பாகச் சேமிக்கும் நம்பகமான வழியாக, பலரும் தங்கத்தை கருதுவதில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை.
உலக நிதிச் சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களால், வீட்டில் உள்ள தங்க நகைகள் மற்றும் பொருட்களின் மதிப்பு பெரும்பாலும் பாதிக்கப்படுவதில்லை.
ஆனால் பெரியளவில் முதலீடு செய்யும்போது, முக்கிய நிதி நிறுவனங்கள் எடுக்கும் முடிவுகள் அதில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
சமீபத்தில் தங்கத்தின் விலை அதிகரித்ததை குறித்துப் பேசிய போது, “பல நாடுகளின் மத்திய வங்கிகள் பெருமளவில் தங்கத்தை வாங்கியிருக்கக்கூடும் என்பதே காரணமாகத் தோன்றுகிறது” .
பங்குச் சந்தையில் நிச்சயமற்ற சூழல் நிலவும்போது, பங்குகளில் முதலீடு செய்யாமல், தங்களது பொருளாதார இருப்பை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய வங்கிகள் பெரும்பாலும் தங்கத்தை மொத்தமாக வாங்குகின்றன.
அப்போது தங்கத்தில் முதலீடு செய்வது சில நேரங்களில் ஆபத்தானதாக இருக்கலாம்.
“தங்கத்தின் விலை மேலும் உயரும் என எண்ணி முதலீடு செய்வது இன்னும் ஆபத்தானதாகவே உள்ளது. ஏனெனில் பங்குச் சந்தைகள் சீரடைந்து, அரசாங்கங்கள் தெளிவாக செயல்படத் தொடங்கினால், மக்கள் மீண்டும் தங்கத்தில் முதலீடு செய்வதை விட்டு விலகத் தொடங்குவார்கள்”.