விஜய் டிவி, சன் டிவி போன்றன பிரபலமான நிகழ்ச்சிகளில் பங்கேற்று புகழ் பெற்றவர்தான் ரோபோ சங்கர். இவர் தீவிர கமல் ரசிகரும் கூட . மேலும் பல ஊர்களுக்கு சென்று காலை நிகழ்ச்சிகளை நடத்தி தன அன்றாட வாழ்க்கையை தொடங்கினர். பின் இதை தொடர்ந்து அவருக்கு சினிமா துறையிலும் வாய்ப்புகள் கொட்டின. அதையும் அவர் சரியாக பயன்டுத்திக் கொண்டு சினிமா துறையில் தன் காலடியை பதித்தார் .
இந்நிலையில்தான், நேற்று (18.09.2025) உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டர். பின் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலனளிக்காமல் மரணமடைந்தார். இதனால் திரையுலக பிரபலங்கள் அவருக்கு வருத்தத்துடன் தங்களது அனுதாபம்களையும், கண்ணீர் அஞ்சலியையும் தெரிவித்துள்ளார்.
ரோபோ சங்கர் நடித்த சில முக்கிய திரைப்படங்கள்:
விஜய் டிவி, சன் டிவி போன்றன பிரபலமான நிகழ்ச்சிகளில் பங்கேற்று புகழ் பெற்றவர்தான் ரோபோ சங்கர். மேலும் அவர் பல வெற்றி பெற்ற படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்து, அந்த கதாப்பாத்திரத்திற்கே ஏற்றார் போல் நடித்து அசத்தியிருப்பார். அப்படி அவர் நடித்த சில முக்கியமான படங்களை பார்ப்போம். இவர் மாரி 1, மாரி 2, விசுவாசம், மிஸ்டர் லோக்கல், இரும்புத்திரை, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? போன்ற பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் இவர் இரும்புத்திரை என்ற படத்தில் நடித்த கதாபாத்திரம் பிரபலமாக பேசப்பட்டது.
அதிகமான மதுப்பழக்கம்:
நடிகர் ரோபோ சங்கருக்கு அதிகமான குடிப்பழக்கம் இருந்தது. இதனால் அவருக்கு நாளடைவில் உடலில் கோளாறு ஏற்பட்டது. ஒரு வருடத்திற்கு முன்பு உடல் நிலை பாதிக்கபட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் சிகிச்சைக்கு மேற்கொண்டு வீடு திரும்பினார். அந்த சமயம் அவரது உடலானது அதிகமாக மெலிந்து காணப்பட்டது. இதனால் இவர் மீம்ஸ் கிரேட்டர்களால் செய்யப்பட்டார்.
மீண்டும் உடல்நிலை பாதிப்பு:
பின் தான் நடிக்கும் புதுப்படைத்திருக்கான பூஜையில் கலந்து கொண்டார். அப்போது ஷூட்டிங்கில் தீடிரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். பின் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். அவரின் உடல் மோசமடைந்திருப்பதாக கூறிய மருத்துவர் முதலுதவி அளித்துவிட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க சொல்ல ரோபோ சங்கர் குடும்பத்தினர் அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தினர். பின் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் தற்போது மரணம் அடைந்திருக்கிறார்.