கேரள முன்னாள் முதலமைச்சர் V.S. அச்சுதானந்தன் காலமானார்.அவருக்கு வயது 101.

By carniya

Published on:

Follow Us
vs-achuthanandan-former-kerala-cm-and-icon-of-communist-movement-passes-away

கேரள மாநிலம் முன்னாள்  முதலமைச்சரும், மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவருமான வி.எஸ் அச்சுதானந்தன் இன்று திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 101. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக எஸ்.யு.டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை கேரளாவில் முதலமைச்சராக இருந்தவர் வி எஸ் அச்சுதானந்தன் அவர்கள். சுதந்திரப் போராட்ட வீரராகவும் கேரளாவின் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஒரு இரும்பு பாலமாகவும் இருந்துள்ளார்.

1923 ஆம் ஆண்டு கேரள மாநிலம் ஆலப்புழாவில் ஒரு எளிமையான விவசாய குடும்பத்தில் பிறந்தவர் வி எஸ் அச்சுதானந்தன். தனது வாழ்க்கையில் பல தாழ்வு நிலைகளையும், கடினமான சூழ்நிலைகளையும் அனுபவித்து அதனை கடந்து வந்தவர். மிகவும் வறுமையான  சூழ்நிலையையும்,பல வகையான சோதனைகளையும் இன்னல்களையும் தனது சிறு வயதிலேயே  சந்தித்தார். சிறு வயதிலேயே தன் பெற்றோரை இழந்தவர்.

தனக்கு சொந்தமான ஒரே துணியை கோயிலின் படித்துறையில் காய வைத்து விட்டு, அந்த துணி காயும் வரை அந்தக் கோயிலின் குலத்தில் நீண்ட நேரம் மூழ்கி இருப்பதாகவும் நகைச்சுவையாக தனது வறுமையை கூறியுள்ளார். கோயிலில் கடவுளுக்கு பூஜை செய்த அரிசியை அங்குள்ள கோயில் பூசாரி பூஜை முடித்தவுடன் தனக்கு ஊட்டி விடுவதாகவும் கூறினார். பிறகு துணிகளை தைப்பதற்கு பயிற்சி எடுத்து சிறிது காலம் தையல்காரர் ஆகவும் இருந்துள்ளார். 

தனது 16 வது வயதில், காலணித்துவ ஆட்சிக்கு எதிரான மக்களின் குரலுக்கு தனது பங்களிப்பாக குரல் கொடுத்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். காலனித்துவ அரசாங்கத்திற்கு எதிரான இடதுசாரி போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்  அச்சுதானந்தன். 

2019 ஆம் ஆண்டு பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டதால், தனது பொது வாழ்வில் இருந்து சற்று விலகி இருந்தார்.

தனது 100வது பிறந்தநாளில், சிபிஐ(எம்)  தலைவர் பிரப்பன்கோடு முரளி, முன்னாள் எம்.எல்.ஏ., திரு. அச்சுதானந்தனை இடதுசாரி வரலாற்று சூழலில் வைக்க முயன்றார். “ஸ்டாலின், மாவோ, ஹோ சி மின், சே குவேரா மற்றும் அதற்கு அப்பால் வாழ்ந்த காலங்களிலும் அரசியலில் தீவிரமாக செயல்பட்ட கம்யூனிஸ்டுகளில் திரு. அச்சுதானந்தன் கடைசி நபர்” என்று அவர் கூறினார்.

திரு அச்சுதானந்தன் அவர்களுக்கு வசுமதி என்ற மனைவியும், வி வி ஆஷா என்ற மகளும், வி ஏ அருண்குமார் என்ற மகனும் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளார்கள். 

Leave a Comment