சித்த மருத்துவம் இந்தியாவில் பழமையான மருத்துவம் ஆகும் இது சிவனிடமிருந்து தோன்றியதாகக் கூறப்படும். சிவன் முதலில் பார்வதிக்கு கற்றுக் கொடுத்தார் பார்வதி நந்திக்கு கற்றுக் கொடுத்தார் நந்தி ஒன்பது தேவதைகளுக்குக் கற்றுக் கொடுத்தார் இவ்வாறு சித்த மருத்துவம் கடவுளிடமிருந்து வந்தது.
சித்த மருத்துவத்தில் “உணவே மருந்து” என்ற நோக்கில் உணவை மருந்தாக எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று கூறுவர்அந்த வகையில் சித்தர்களால் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு மூலிகை தான் பிரண்டை.
பிரண்டையை உட்கொள்ளும்பொழுது உடலுக்கு அளவற்ற நன்மைகள் ஏற்படுகின்றன.
இதனை இ ந்திரனின் வஜ்ராயுதத்தைப் போன்று உடலை வலிமையாக்கும் வல்லமை பிரண்டைக்கு உண்டு என்பதால்,”வஜ்ஜிரவல்லி” என்றும் அழைப்பர்
இது வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளிட்ட வைட்டமின்களின் சக்திவாய்ந்த மூலமாகும், அத்துடன் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு போன்ற தாதுக்களும் உள்ளன. கூடுதலாக, பிரண்டையில் ஃபிளாவனாய்டுகள், ட்ரைடர்பெனாய்டுகள் மற்றும் கரோட்டினாய்டுகள் போன்ற பல்வேறு உயிரியல் ரீதியாகச் செயல்படும் சேர்மங்கள் உள்ளன, அவை அதன் சிகிச்சை பண்புகளுக்குப் பங்களிக்கின்றன.
நுதலும், தோளும், திதலை அல்குலும்,
வண்ணமும், வனப்பும், வரியும் வாட
வருந்துவள், இவள்’எனத் திருந்துபு நோக்கி,
‘வரைவுநன்று’ என்னாது அகலினும், அவர்-வறிது,
“ஆறுசெல் மாக்கள் அறுத்த பிரண்டை”,
என்ற அகநானூறு பாடலில் பிரண்டை பற்றிய வரிகள் குறிப்பிட்டுள்ளது
பிரண்டையின் வகைகள்
- ஓலைப் பிரண்டை
- உருட் பிரண்டை
- இனிப்புப் பிரண்டை
- புளிப்புப் பிரண்டை
- முப்பிரண்டை

பயன்கள்
எலும்பை வலிமையாக்கும் பிரண்டை
எலும்பு தேய்மானம், எலும்பு முறிவு ,எலும்பு வலி என்று எலும்பு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் பிரண்டை ஒரு சிறந்த மருந்தாகும்.
கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு போன்ற போன்ற தாதுக்களக் கொண்டிருப்பதினால் இது எலும்பு சம்பந்தப்பட்ட அனைத்து வித பிரச்சனைகளுக்கும் ஒரு நிரந்தர தீர்வாக அமைகிறது.
பிரண்டையை நன்றாகச் சுத்தம் செய்து கொண்டு ஒரு வானலில் சிறிதளவு நல்லெண்ணெய் இஞ்சி பூண்டு கடலைப்பருப்பு உளுந்து பிரண்டை சிறிதளவு புளி அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் பின் துருவிய தேங்காய் சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்துப் பின்பு தாளிப்பு போட்டு இறக்கினால் பிரண்டை துவையல் தயார்.
இதனை வாரத்திற்கு நான்கு முறை உட்கொண்டு வர எல்லாவிதமான எலும்பு பிரச்சனையும் சரியாகும்.
சுறுசுறுப்பை தூண்டும்
ஞாபக சக்தி என்றாலே வல்லாரை கீரை என்று ஞாபகம் வரும் அதுபோல தான் சுறுசுறுப்பு என்றால் பிரண்டையை சொல்வர்.
பிரண்டையில் உள்ள வைட்டமின் சி வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கிரியேட்டின் உடலுக்குப் புத்துணர்ச்சியும் உற்சாகத்தையும் சுறுசுறுப்புத் தன்மையும் கொடுக்கிறது.
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்
பிரண்டையில் வைட்டமின் சி வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கிரியேட்டின் மட்டுமல்லாமல் கார்ச் சத்து அதிகம் நிறைந்த ஒன்றாகும்.
கார்சத்து நம் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரித்து நம் உடலுக்கு நோய்களை வராமல் தடுக்கின்றனர்
பற்களை உறுதிப்படுத்தும் பிரண்டை
உடலில் ஏற்படும் சத்து குறைபாட்டால் பற்களில் சொத்தை ஏற்படுவது, பற்களில் வேறுவிழுப்பது ஈறுகளில் ரத்தம் வழிகள் போன்ற பிரச்சனைகளுக்குப் பிரண்டை ஒரு அற்புதமான மருந்தாகும் ஏனென்றால்
கால்சியம் அதிகமாக நிறைந்துள்ளதால் பிரண்டைப் பற்களுக்கு ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
பிரண்டை உணவில் அதிகமாக உட்கொள்ளும்பொழுது பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையை வராமல் தடுக்க முடியும் என்று ஆய்வு கூறுகிறது.
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்பு மற்றும் கால் வலிகளுக்குச் சிறந்த மருந்தாகப் பிரண்டை பயன்படுகிறது.
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக இடுப்பு மற்றும் கால் வலிக்கு சிறந்த மருந்தாகப் பிரண்டை பயன்படுகிறது.
மூன்று மாதங்கள் பிரண்டையை தொடர்ந்து உணவில் எடுத்துவர மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக இடுப்பு வலி மட்டும் கால் வலிகள் நீங்கும் மற்றும் எலும்பு பலப்படும்.
பிரண்டை கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் பிரண்டை பொடியாகக் கிடைக்கும் அதனை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
மூலம்
ஆசனவாயில் உள்ள சதையிலும் ஆசன வாய்க்குள்ளும் ஏற்படக்கூடிய கட்டிகள் தான் மூலம் என்பர்.
மூலம் காரணமாகப் பாதிக்கப்படுவோர் பிரண்டையை நெய்யில் வதக்கிச் சாப்பிட்டு வர மூலம் மிக விரைவில் குணமாகத் தொடங்கும்.`

சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் என்று சொல்லப்படும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிரண்டை ஒரு சிறந்த இயற்கை உணவாகப் பயன்படுகிறது இதில் நிறைந்து இருக்கும் காரத்தன்மை உடலில் ஓடும் சக்கர அளவை அதிகரிக்காமல் தடுக்கிறத .
அதுமட்டுமல்லாமல் நீரிழிவு நோயாளிகள் சீக்கிரமாக உடல் பலவீனம் அடைந்து விடும் இத்தன்மையை நீக்கி உடல் பலத்தை மீட்டு தருகிறது.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்க
பிரண்டைக்கு உடலில் தங்கும் கெட்ட கொழுப்பைக் கரைக்கக்கூடிய தன்மை உடையது.
பிரண்டையை துவையல், சட்னி ,சூப், லேகியம், என்ற எந்த வகையில் உட்கொண்டுவர உடலில் தங்கியுள்ள கெட்ட கொழுப்புகள் தானாகக் கரையும்.
வாய்வு பிரச்சனை நீங்கும்
சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் போவது மற்றும் சரியான உணவு உட்கொள்ளாமல் போவது காரணமாக ஏற்படும் வாய்வு பிரச்சனைகள், பிரண்டையை வாரந்தோறும் இரண்டு அல்லது மூன்று முறை துவையல் செய்து சாப்பிடுவதன் மூலம் வாய்வுத்தொல்லை ,அஜீரணம் கோளாறுகள் நீங்கி உடல் ஆரோக்கியம்பெறும் .
குடலை சுத்தப்படுத்தும்
பிரண்டை குடலில் தங்கி உள்ள அழுக்குகள் மற்றும் நச்சுகளைச் சுத்தப்படுத்தும் ஒரு மருந்தாகச் செயல்படுகிறது.
இதில் உள்ள நார்ச்சத்து குடலை சரியான முறையில் அசைவுகளை ஏற்படுத்திக் குடலில் தங்கியுள்ள அடுக்குகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றப் பயன்படுகிறது
உடல் வலிகளை நீக்கும்
மூட்டு வலி, கைக்கால் வலி, இடுப்பு வலியன உடலில் உள்ள அனைத்து விதமான வலிகளையும் பிரண்டை நீக்குகிறது.
உடலில் ஏற்படும் வலிகள் நீங்கப் பிரண்டைத் துவையல் ஆகவோ இல்லை பிரண்டை இலை துவையலாகவோ பொடியாகவோ மூன்று வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அனைத்து வலிகளும் குணமாகும்.
பிரண்டையில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன எனவே பிரண்டையை உணவில் தினம்தோறும் பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்வை வாழுங்கள்.











