வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாத மாதம் தங்களது வங்கிக் கணக்கில் உதவித்தொகை என அறிவித்துள்ளது தமிழக அரசு. இதற்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் வேண்டும், யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதை காணலாம்.
உதவித்தொகை விவரம்:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு | மாதம் ரூ 200/- |
பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களுக்கு | மாதம் ரூ 300/- |
+2 வகுப்பில் தேர்ச்சி / ITI, DIPLOMA | மாதம் ரூ 400/- |
இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு | மாதம் ரூ 600/- |
யார் யார் விண்ணப்பிக்கலாம். யார் யார் விண்ணப்பிக்க இயலாது விதிமுறைகள் என்ன ?
- நீங்கள் விண்ணப்பிக்கும் முந்தைய காலாண்டின் முடிவில் ஐந்தாண்டுகளுக்கு குறையாமல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்கு காத்திருக்க வேண்டும்.
- விண்ணப்பிப்போரின் குடும்ப ஆண்டு வருமானம் 72,000 மேல இருக்கக் கூடாது.
- விண்ணப்பிப்போர் 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் 45 வயது பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது .
எந்தெந்த பட்டப்படிப்பிற்கு உதவித்தொகை கிடையாது?
பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற பட்டப் படிப்புகளுக்கு கிடையாது.
மேலும் பல விவரங்களுக்கு கீழே உள்ள லிங்குகளை கிளிக் செய்து பார்க்கவும்.
அதிகாரப்பூர்வமான இணையதளம் – CLICK HERE
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் – CLICK HERE
மாற்றுத்திறனாளிகளுக்கான விண்ணப்ப படிவம் – CLICK HERE