விஜய் டிவி, சன் டிவி போன்றன பிரபலமான நிகழ்ச்சிகளில் பங்கேற்று புகழ் பெற்றவர்தான் ரோபோ சங்கர். இவர் தீவிர கமல் ரசிகரும் கூட . மேலும் பல ஊர்களுக்கு சென்று காலை நிகழ்ச்சிகளை நடத்தி தன அன்றாட வாழ்க்கையை தொடங்கினர். பின் இதை தொடர்ந்து அவருக்கு சினிமா துறையிலும் வாய்ப்புகள் கொட்டின. அதையும் அவர் சரியாக பயன்டுத்திக் கொண்டு சினிமா துறையில் தன் காலடியை பதித்தார் .
மேலும் பல பிரபல ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார் . இவர் நடித்த மாரி , இதற்குத்தான் ஆசை பட்டாய் பாலகுமாரா, விசுவாசம் போன்ற பல பிரபலமான ஹீரோக்களுடன் நடித்து அசத்தியுள்ளார்.

இதையடுத்து, கடந்த வருடம் முதலே அவருக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டது. மேலும் அவருக்கு குடிப்பழக்கம் அதிகமாக இருந்ததால் மஞ்சள் கமலை நோயால் அவதிப்பட்டு , உடல் மெலிந்த தோன்றத்தொடு காணப்பட்டார். பின் உடல் நலம் தேற்றப்பட்டு , தன் மகள் இந்திராஜா திருமணம் செய்தும் கொடுத்தார். பின் அவர்களுக்கும் குழந்தை பிறந்து, அதனையும் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு மகிழ்ந்தார் .

இந்நிலையில்தான், நேற்று (18.09.2025) உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டர். பின் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலனளிக்காமல் மரணமடைந்தார். இதனால் திரையுலக பிரபலங்கள் அவருக்கு வருத்தத்துடன் தங்களது அனுதாபம்களையும், கண்ணீர் அஞ்சலியையும் தெரிவித்துள்ளார்.