Just 1 secret for remove grey hair on young age | இந்த ஒரு ரகசியம் தெரிந்தால் போதும்! இனி உங்களுக்கு இளநரையே வராது!

By Go2Tamil

Published on:

Follow Us
remove-grey-hair-on-young-age

இந்த ஒரு ரகசியம் தெரிந்தால் போதும்! இனி உங்களுக்கு இளநரையே வராது!  வெறும் பத்து நிமிடத்தில் இயற்கை ஹேர் டை  செய்யலாம் வாங்க!

 இளநரை என்பது ஆண், பெண் என இருவருக்கும் மன அழுத்தத்தை தரக்கூடிய ஒரு முக்கிய பிரச்சினையாக கருதப்படுகிறது. ஒரு பக்கம் முடி அடர்த்தியாகவும் அழகாகவும் பளபளப்பாகவும் இல்லை என்பது ஒரு பிரச்சினையாக பார்க்கப்பட்டாலும்,  மறுபக்கம் இருக்கின்ற சில பல முடியும் இளநரையாக இருக்கிறது  என்பது இரண்டாவது பிரச்சினையாக உள்ளது.

 பல லட்சம் செலவழித்து இளநரையை கருமையாக மாற்றும்  நிலைமையில் இல்லை என்றாலும், பணமே செலவு செய்யாமல், எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல் வீட்டில் இருக்கும் சில பொருட்களை மட்டுமே வைத்து, இளநரையை கருகருவென கருமையாக மாற்றலாம். இந்த ரகசியம் தெரிஞ்சால், நிச்சயம் நீங்கள் இத்தனை நாள் இது தெரியாமல் இருந்து விட்டோமே என்று வருத்தப்படுவீர்கள். அவ்வளவு எளிதான மற்றும் செலவில்லாமல்  பக்க விளைவுகளும் இல்லாமல் தைரியமாக இந்த இயற்கை முறை ஹேர் டை நீங்கள் பயன்படுத்தலாம்.

கறிவேப்பிலையை நான்கு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவும். இதனை நன்றாக வெயிலில் உலர்த்தி. பின் பொடியாக மிக்சியில் அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும். இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றிலும் உண்ணலாம். அதிக நரைமுடி இல்லாதவர்கள் ஒரு டீஸ்பூன் அல்லது இரண்டு டீஸ்பூன் சாப்பிட்டு வந்தால் போதுமானது.

செம்பருத்தி இலை இரண்டு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு அதே அளவு செம்பருத்தி பூவும் எடுத்துக் கொள்ளவும். இரண்டினையும்  நிழலில் ஒரு காட்டன் துணியில் நன்றாக பரப்பி காயவைத்து காய்ந்த பின் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அந்தக் காலத்தில் சீயக்காய் பொடி அரைக்கும் பொழுது அதனுடன் கடுக்காய் பொடியும் சேர்ந்து அரைக்க மறக்க மாட்டார்கள். இந்த கடுக்காய் பொடி முடியை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வலிமையாகவும் பேணி காக்கிறது. மேலும் பொடுகு வராமலும் பெண் வராமலும் தடுக்கிறது இந்த கடுக்காய். கடுக்காய் பொடி அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

நெல்லிக்காயை ஒரு கைப்பிடி அளவு அல்லது உங்கள் முடிக்கு ஏற்றவாறு எடுத்துக் கொள்ளுங்கள் அதிகமாக எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை. எடுத்துக்கொண்ட நெல்லிக்காயின் விதையை நீக்கிவிட்டு சதை பகுதியை வெயிலில் காயவைத்து பிறகு நன்றாக காய்ந்த பின் அரைத்து பொடியாக எடுத்துக் கொள்ளவும். அல்லது நெல்லிக்காய் பொடி என்று நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அவற்றையும் பயன்படுத்தலாம்.

மருதாணி பொடி அனைத்து இடங்களிலும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு பொருள். மருதாணி இலையை காய வைத்து பொடியாக எடுத்துக் கொண்டாலும் அதிக பலன் தரும்.

அவுரி இலைகளை அரைத்து பொடியாக அனைத்து கடைகளிலும் கிடைக்கும். சாதாரண கடைகளிலும் கிடைக்கும் மேலும் நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள செம்பருத்தி பொடி, நெல்லிக்காய் பொடி,  கடுக்காய் பொடி, மருதாணி பொடி,  அவுரி பொடி, கருவேப்பிலை பொடி என அனைத்தையும்  அரைத்து  ஒரு பொடியாக எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்துக்கொண்ட பொடியை ஒரு இரும்பு சட்டியில் ஒரு நல்ல தரமான டீ டிகாஷனை ஊற்றி அதனுடன் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்க வையுங்கள். சிறிது நேரம் கொதித்தாலே போதும். பிறகு ஒரு எட்டு மணி நேரம் அப்படியே மூடி வைத்து விடுங்கள். இவை நன்றாக ஒரு இயற்கைடையாக நமக்கு தயாராகிவிடும். தயாரான இந்த இயற்கை ஹேர் டை முடியில் அதிகமாக வெள்ளை நிற முடி இருக்கும் பகுதிகளில் மட்டுமே தடவவும். அனைத்து இடங்களிலும் அல்லது கருமை முடி உள்ள இடங்களிலும் தடவ வேண்டாம்.. ஏனென்றால் இது முடியும் மிருகத்தன்மையை குறைத்து விட வாய்ப்புள்ளது.  அதனால் பித்தநரை என சொல்லப்படும் இந்த இளநரை உள்ள முடிகளில் மட்டும் அப்ளை செய்துவிட்டு ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். பிறகு எந்த ஒரு ஷாம்பூவும் இன்றி தலையை அலசவும்.

 சைனஸ் மற்றும் இதர குளிர் சம்பந்தமான ஏதேனும் பிரச்சனைகள் இருப்பவர்கள் என்றால் ஒரு மணி நேரம் வைத்துக் கொள்ளாமல் அரை மணி நேரம் மட்டுமே வைத்துவிட்டு பிறகு தலையை அசவும். கடுக்காய் பயன்படுத்தி உள்ளதால் இதில் இயற்கையாகவே ஷாம்பு போல நுரை தன்மை இருக்கும் அதனால் ஷாம்பு எதுவும் பயன்படுத்த வேண்டாம்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள மருதாணி அவுரி போன்ற செய்முறைகள் சிலருக்கு செய்வதற்கு சற்று கடினமாகவும் கூடுதல் நேரம் தேவைப்படும் வகையிலும் அமைந்துள்ளது. அப்படி எல்லாம் இல்லாமல் முதல் நாள் இவற்றை செய்து வைக்க மறந்து விட்டாள் என்ன செய்வது என்று கேட்பவர்களுக்கு இந்த ஒரு அருமையான ஹேர் கலர் டிப்ஸ்.

கரிய பவளம் என்பது பார்ப்பதற்கு ஒரு கருமையான கல் போல காட்சியளிக்கும்.இந்தக் கரிய பவளம் நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும் ஒரு பொருளாகும். கல் போல் கடினமாக இருக்கும்.

நெல்லிக்காய் இரண்டு எடுத்துக் கொள்ளவும். எடுத்துக் கொண்ட நெல்லிக்காயை விதையை எடுத்துவிட்டு  சதையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். 

அரைத்து எடுத்துக்கொண்ட நெல்லிக்காய் சாறு ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளவும். இந்த நெல்லிக்காய்  சாறில் கரிய பவளத்தை போட்டு  அப்படியே ஒரு தட்டு வைத்து மூடி வைக்கவும். மூன்று மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு எடுத்துப் பார்த்தால் கரிய பவளம் நெல்லிக்காய் சாறுடன் நன்றாக கரைந்து கருகருவென கருமை நிறத்தில் ஒரு டைபோல இருக்கும். இந்த டையை தலையில் அப்ளை செய்து ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விட்டு பிறகு ஷாம்பு கொண்டு தலையை அலசவும்.இதனை நேச்சுரல் டை என்று கூறுவார்கள். பலருக்கும் இப்படி ஒரு ஈஸியான வழிமுறை இருக்கிறது என்பது தெரியாது.

இந்த கரிய பவளம் இயற்கை ஒருமுறை பயன்படுத்தினால் உடனடியாக மாற்றம் கிடைக்காது. வாரம் ஒரு முறை என வாரந்தோறும் செய்து வந்தால் இரண்டு மாதத்திற்கு உள்ளாகவே முடி கருமை நிறமாக மாறும்.

 மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து இயற்கை வழிமுறைகளும் ஆண் பெண் என இரு பாலருக்கும் இருக்கும் பெரிய பிரச்சனையான இளநரை மற்றும் நிறைய போக்குவதற்கான ஒரு எளிய வழியாகும். ஆண் பெண் என இருவருமே இதனை செய்து பார்க்கலாம். 

Go2Tamil

We are nearly 8+ years experience in blogging. this website is fully focus on tamil news and contents. If you are need our service for web designing,digital marketing,blogging,DTP,Graphic Designing you can mail me on vigneshwarsankar@gmail.com

Leave a Comment