இயற்பெயர் | சித்தார்த்த கௌதமர் |
மருவிய பெயர் | புத்தர் |
பிறந்த ஆண்டு | கி.மு.563 |
பெற்றோர் | சுத்தோதனா கௌதமா மற்றும் மகாமாயா |
பிறந்த இடம் | லும்பினி [நேபாளம்] |
புத்தரின் பிறப்பு : putharin iyar peyar in tamil
தற்போது இந்தியாவின் ஆண்டை நாடாக உள்ள நேபாளத்தில் “லும்பினி” எனும் நகரில் கபிலவஸ்து பேரரசரான சுத்தோதனா கௌதமா என்ற அரசருக்கும், மகாமாயா என்ற தம்பதிக்கும் கி.மு. 563 ஆம் ஆண்டு மகனாக பிறந்தார் என்ற புத்தரை பற்றிய ஆராய்ச்சி குறிப்புகள் அவரை பற்றி தெரிவிக்கின்றன. புத்தருக்கு அவர்களின் பெற்றோர் இட்ட பெயர் சித்தார்த்தர் .
அரச குடும்பத்தில் சித்தார்த்தர் பிறந்தமையால் அவருடைய பிறப்பு விழாவினை கொண்டாட அவர்களது பெற்றோர்கள் முடிவு செய்து ஒரு பெரிய விழாவினை ஏற்பாடு செய்தனர். அதில் பல அரசர்கள் மற்றும் சான்றோர்கள் மேலும் ஞானிகள் போன்றோர் கலந்து கொண்டனர் . அச்சமயம் ஒரு ஞானி சித்தார்தரை தனது கரங்களில் ஏந்திய போது கண்டிப்பாக இவன் பிற்காலத்தில் ஒரு மகானாக உருவெடுப்பான் என்று கூறினார்
இவர் பிறந்து ஏழாவது நாள் இவரது அன்னை இறந்ததால் இவர் குழந்தை பருவத்திலிருந்து இவரது சிற்றன்னையால் வளர்க்கப்பட்டார். சித்தார்த்தர் போதிமரத்தின் அடியில் ஞானம் பெற்றதிலிருந்து அவரை புத்தர் என்று சீடர்கள் அழைத்தனர்.

இளம்வயது மற்றும் திருமணவாழ்க்கை : putharin iyar peyar in tamil
புத்தரின் எதிர்கால வாழக்கையில் அவர் பெரிய மகானாக மாறிவிடுவார் என்று ஞானி ஒருவர் குறிப்பிட்டமையால் அவரது தந்தை சுத்தோதனா கௌதமா புத்தரை வெளியுலக கஷ்டம், அழுத்தம் மற்றும் உழைப்பு போன்றவைகளை அவருக்கு ஏற்படுத்தாமல் அரண்மனைக்குள்ளே சகலவிதமான வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்தார்.
இதன் காரணமாக அவர் செல்வசெழிப்போடு வளர்ந்தார் மேலும் புத்தர் துறவியாக மாறக்கூடாது என்று நினைத்த அவரது தந்தை புத்தரின் 16ஆம் வயதில் அவருக்கு யசோதரா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார். அவர்களுக்கு ராகுலா என்ற ஒரு மகனும் பிறந்தான்.
வாழ்க்கையினை பற்றி அறிய நினைத்த தருணம் : putharin iyar peyar in tamil
புத்தர் பிறந்ததிலிருந்து அவருக்கு தேவைப்பட்ட அனைத்து விடயங்களும் அவருக்கு மிக எளிதாக கிடைத்தமையால் அவர் தனது வாழ்க்கைக்கான அர்தத்தினை அறிந்து கொள்ள விரும்பினார். மேலும் ராஜ வாழ்க்கை மற்றும் இல்லற வாழ்க்கை அவருக்கு சலித்தது. எனவே அவர் தனது உதவியாளருடன் ஒருமுறை கோட்டையை விட்டு வெளியேறி சுற்றி பார்க்க சென்றார்.
அவ்வாறு அவர் வெளியே அவர் சென்று கொண்டிருக்கும் போது சில நிகழுவுகளை அவர் கவனித்தார்.
அரண்மனை விட்டு வெளியே வந்த புத்தர் கவனித்த நிகழ்வுகள்:
- ஒரு வயதான தள்ளாடும் கிழவர்
- ஒரு நோயாளி
- அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம்
- நாலாவதாக ஒரு முனிவன்
இவைகளில் முதல் மூன்று நிகழ்வுகள் மூலம் வாழ்க்கையின் துன்பத்தினை மற்றும் மக்கள் படும் துயர்களை கண்டார்.
நான்காவதாக அந்த முனிவரை கண்டதும் அவரின் அமைதியினை ரசித்தார். உலகில் ஏதும் நிரந்தரமில்லை ஆனால் அமைதி வேண்டும் என அவர் நினைத்தார்.
வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொள்ள சென்ற தருணம்: putharin iyar peyar in tamil
இந்த நிகழ்வுகளை கண்ட புத்தர் அரண்மனையினை விட்டு வெளியேறினார். ஆனால் புத்தருக்கு அப்போது துறவறம் செல்லும் எண்ணம் இல்லை அவரின் நோக்கம் வாழ்க்கையின் அர்தத்தினை புரிந்துகொள்வது மட்டுமே.
மேலும் கானகம் வழியே அவர் சென்று கொண்டிருந்த பொது முனிவர்களின் தவங்களை பார்த்தவாறே சென்றார். எனவே தாமும் கடும்தவத்தினை மேற்கொண்டால் வாழ்வின் அர்த்தம் புரியும் என நினைத்த புத்தர் பல நாட்கள் உணவு உண்ணாமல் நீர் அருந்தாமல் கடுந்தவம் புரிந்தார்.
அவரின் தவத்தினை கண்ட சிலர் அவருக்கு சீடர்களாகவும் மாறினார். ஆனால் அப்போது கூட அவருக்கு விடை கிடைக்கவில்லை.
இசைக் கலைஞனால் தவத்தினை துறந்த புத்தர் :putharin iyar peyar in tamil
இவ்வாறு கடும்தவத்தினை மேற்கொண்டிருந்த புத்தர் ஒரு நாள் அவர் தவம் செய்துகொண்டிருந்த இடத்தினை கடந்து ஒரு இசை கலைஞன் சென்றான். இதனை கவனித்த புத்தர் தனது சீடனிடம் அந்த இசைக்கலைஞன் கொண்டுசென்ற யாழ் குறித்து கேட்டார்.
அதற்கு பதிலளித்த சீடன் அந்த யாழிலுள்ள நாணை இழுத்து கட்டினால் அது அறுந்து விடும். அதேபோன்று லேசாக கட்டினாலும் அதிலிருந்து இசை வராது என்று பதிலளித்தார்.
உடனே அவர் ஒரு விஷயத்தினை நன்றாக புரிந்துகொண்டார் தான் சிறுவயது முதல் சுகத்திற்கு குறைவில்லாத ராஜவாழக்கையினை அனுபவித்தேன். இப்போது அதற்கு எதிர்மாறாக உடலை வருத்தி தவவாழ்க்கையினை மேற்கொண்டுவருகிறேன்.
எனவே இந்த தவம் இருப்பதன் மூலம் நமக்கு விடை கிடைக்காது என்று உணர்ந்த புத்தர் தனது உடல் இவ்வாறு தவம் புரிந்தால் இறந்துவிடும் என்பதனை உணர்ந்தார் . எனவே இதனை உணர்ந்த அடுத்த கணம் எழுந்த அவர் அருகில் உள்ள ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது அந்த ஆற்றில் வந்த நீரின் வேகத்தினை சமாளித்து அவரால் நிற்க கூட முடியவில்லை. அந்த அளவிற்கு அவரது உடல் பலவீனம் அடைந்ததனை உணர்ந்தார்.
ஆசையே துன்பத்திற்கு காரணம் என அறிந்த இடம்:putharin iyar peyar in tamil
பலமயில்கள் நடந்து சென்று பல்வேறு இடங்களில் தியானத்தினை தொடர்ந்த்து செய்து வந்தார். அவ்வாறு அவர் பிஹார் மாநிலத்தில் உள்ள “கயை” என்னுமிடத்தில் “போதி” மரத்தின் அடியில் பலநாட்கள் தியானம் செய்தார்.
அப்போது அவர் தேடுதலுக்கான பதில் கிடைத்தது. அவ்வாறு அவர் தியானத்தில் அமர்ந்திருந்த போது முதன் முறையாக தான் மகிழ்ச்சையாக இருப்பதாக வந்தார். மேலும் தனக்கு ஞானம் கிடைத்ததையும் அவர் உணர்ந்தார். “ஆசையே துன்பத்திற்கு காரணம்” என்பதனும் அறிந்துகொண்டார்.
புத்தரால் உருவான புத்தமதம் : putharin iyar peyar in tamil
தொடர்ந்து தான் அறிந்த ஞானத்தினை மக்களுக்கு போதித்து அவர்களது வாழ்க்கையில் படும் துயர் மற்றும் கவலையினை கலைக்க நினைத்தார் . மக்களிடம் சென்று அவர்களுக்கு நல்வாழ்விற்கான தனது போதனைகளை அவர் போதித்தார்.
இவரது போதனையால் ஈர்க்கப்பட்ட மக்கள் ஒரு சமூகத்தை கூடி அதற்கு புத்தமதம் என்று பெயர் வைத்து அவரின் கொள்கைவழி வாழ்க்கை நடைமுறையினை அமைக்கவேண்டும் என்று நினைத்தனர்.
அன்று உருவானதே இந்த புத்தமதம் இன்று வரை புத்தமதத்தினை உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் பின்பற்றி வருகின்றனர்
புத்தரின் இறப்பு:
கி.மு.483ஆம் ஆண்டு தனது சீடர் ஒருவர் மூலம் விஷம் கலக்கப்பட்ட ஒரு உணவினை உண்டு அவர் இறந்தார் என்று அவரை பற்றின ஆராய்ச்சி குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. புத்தரின் சீடர்கள் அவரை சாக்கிய முனி என்று அழைத்ததாகவும் ஒரு குறிப்பு இருக்கிறது