நடிகர் ஏவிஎம் ராஜனின் மனைவியும், பலம்பெரும் நடிகையுமான புஷ்பலதா தனது 87 வது வயதில் காலமானார். சென்னையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று(04.02.2025) மாலை அவரின் உயிர் பிரிந்தது. கொங்கு நாட்டு தங்கம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் புஷ்பலதா அவர்கள் .
எம்ஜிஆர், சிவாஜி போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். தனது சிரிப்பில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த புஷ்பலதா வசந்த மாளிகை ராஜபார்ட் ரங்கதுரை உட்பட நூற்றுக்கும் மேற்படி திரைப்படங்களில் நடித்துள்ளார்.குறிப்பாக தனது கணவர் ஏவிஎம் ராஜனிடம் இணைந்த நடித்த ஆண்டவன் கட்டளை படம் மிகப்பெரிய பெயரை பெற்றிருந்தது.அவர் மறைவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.