நீரின்றி அமையாது உலகு திருக்குறள் பொருள் | Neerindri Amayathu Ulagu Kural Porul

By Krishna Priya

Published on:

Follow Us
நீரின்றி அமையாது உலகு திருக்குறள் பொருள் | Neerindri Amayathu Ulagu Kural Porul

“நீரின்றி அமையாது” என்பது திருக்குறளின் ஒரு குறள். இது, உலகியல் வாழ்வு, ஒழுங்கு மற்றும் நீரின் முக்கியத்துவம் ஆகியவற்றைத் தொடர்புபடுத்துகிறது.

நீரின்றி அமையாது திருக்குறள் 

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு. 

குரல் 20

திருவள்ளுவர் நீரின்றி அமையாது என திருக்குறளில் எழுதியுள்ளார்.

நீர் இல்லாமல் உலகம் அமையாது, அதாவது நீரே இல்லாமல் எதுவும் இருக்க முடியாது. நீர் இல்லாமல் எந்த உயிரும் வாழ முடியாது, எந்த செயலும் நடக்க முடியாது. 


நல்ல ஒழுக்கம் இல்லாமல் வாழ்க்கையில் முன்னேற முடியாது. ஒழுக்கம் என்பது, நல்ல பழக்கவழக்கங்கள், சரியான நடத்தை, நியாயமான செயல்கள் ஆகியவற்றைக் குறிக்கிறது. 


நீரின்றி உலகம் அமையாது என்பது அனைவரும் அறிவார்கள். அது போல ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தையும் அனைவரும் உணர வேண்டும்.

மு.வ விளக்க உரை:

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.

எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழ முடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.

உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்

நீர் இல்லாமல் எத்தகையோருக்கும் உலக வாழ்க்கை அமையாது என்றால், மழை இல்லாமல் ஒழுக்கமும் நிலைபெறாது.

யார் யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது எனின் – எத்துணை உயர்ந்தவர்க்கும் நீரின்று உலக வாழ்வு நடவாதாயின்; ஒழுக்கு வான் இன்று அமையாது – அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் மழையின்றி நிகழாது. உலகமெல்லாம் ஒரு குடைக்கீழ் ஆளும் ஒப்புயர்வற்ற வேந்தனாயினும், மழையின்றி வாழும் வழியில்லை யென்பதாம்

.

நீரில்லாமல் உலகத்தில் ஒரு காரியமும் நடக்காது; நீங்கள் எதை வெட்டி நீரை எடுக்க முயன்றாலும் அது நடக்காது. யார் யார் எப்படி எப்படி முயன்றாலும், மன மழையில்லாவிட்டால் கிடைக்காது.

நீரின்றி அமையாது உலகு திருக்குறள் பொருள் | Neerindri Amayathu Ulagu Kural Porul
  1. நீரின் சிறப்புகள்
  2. நீரின் பயன்பாடுகள்
  3. நீர் மாசடைதல்
  4. நீர் பாதுகாப்பு
  5. முடிவுரை

முன்னுரை

பூமியில் இருக்கும் திரவங்களில் உயிரினங்களுக்கு மிக அத்தியாவசியமானது இருப்பது நீர் ஆகும்.

நீரின் முக்கியத்துவத்தினை அறிந்த  திருவள்ளுவர் தனது திருக்குறளிலே, “நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வானின்றி அமையாது ஒழுக்கு.” என்று கூறுகிறார்.

.எல்லா தொழில்களுக்கும் அடிப்படையாகக் கொண்டது நீர்தான். இந்த உலகில் ஆதாரமாக காணப்படுவதும் நீர் அந்த நீரினை இந்த கட்டுரையில் ஒரு சிறு குறிப்பு காண்போம்.

இந்த பூமியானது 71 சதவீதம் நீரினால் சூழப்பட்ட நீலக்கோளாக  காணப்படுகிறது. புவியில் காணப்படும் மொத்த நிலப்பரப்பு 29 சதவீதம் ஆகும்.

  • இந்த 71% நீர்ப்பரப்பு 97.50 சதவீதம் கடல் நீராகும். 
  • மீதமுள்ள 2.5சதவீதமே நன்னீராகும்.
  • இவற்றில் மூன்றில் ஒரு பங்கு பனிக்கட்டிகளாகவும் காணப்படுகின்றது.

பஞ்சபூதங்கள் ஐந்து நீர், நிலம், காற்று, தீ, ஆகாயம் பஞ்சபூதங்களில் ஒன்றான நீரானது திண்மம், திரவம், வாயு என மூன்று நிலைகளில் காணப்படுகிறது.

நம் முன்னோர்கள் நீரை தெய்வமாக போற்றி வாழ்ந்தனர். அத்தோடு சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு நதிகளின் கரைகளில் தான் நாகரிகங்கள் தோன்றின.

ஒரு மனிதனின் வாழ்வில் அடிப்படையான விடயங்களுள் நீரும் ஒன்றாக காணப்படுகின்றது. தாவரங்கள், பறவைகள், விலங்குகள் திறனைச் சான்று வாழ்கின்றன.

மனிதர்களின் வாழ்வில் நீர் என்பது மிக முக்கியமான ஒன்றாகும் கண்ணீரை பருவதன் மூலம் அவர்களின் உடலுக்கு தேவையான சக்தியையும் உடல் ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.

ஒவ்வொரு மனிதனும் நீரை சரியான அளவில் பருக வில்லை என்றால் அவரது உடலில் பல மாற்றங்களையும், பல நோய்களையும் ஏற்படுத்தும் என்பது உண்மையாகும். அப்படிப்பட்ட நீரை மனிதர்கள் குடிப்பதற்கு சமைப்பதற்கு, குளிப்பதற்கு போன்ற அனைத்து விதத்திலும் நீண்ணீரை பயன்படுத்துகிறார்கள்.

நேரானது மனித வாழ்வில் போக்குவரத்து தேவைகளுக்கும் மின் உற்பத்தி செய்வதற்கும் போன்ற மின் அடிப்படை தேவைகளில் இருந்து ஆடம்பர தேவைகளை மனிதனால் மிகவும் அதிகமாக பயன்படுத்தவது அந்த நீர்தான்.

இத்தகைய அமிர்தம் போன்ற நீரை மக்கள் மனிதர்கள் மிகவும் மாசாக்குவது மட்டுமல்லாமல் வீணாக்குவது போன்ற கவலைக்கிடமான பல செயல்களை செய்து வருகிறார்கள். 

இயற்கை அனர்த்தங்களான எரிமலை வெடிப்பு, நிலநடுக்கம், புயல், சூறாவளி போன்றவற்றினாலும் மனிதர்கள் குப்பைகளை நீர்நிலைகளில் கொட்டுதல், வாகன கழிவுகளை நீர் நிலைகளில் கலத்தல், கைத்தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் நச்சு பதார்த்தங்கள், கழிவுப் பொருட்கள், அமிலங்கள் என்பவற்றை நீர் நிலைகளில் கொட்டுவதன் மூலம் நீர் அதிகளவில் மாசடைகிறது.

அதுமட்டுமல்லாது ஆழ்துளைக்கிணறுகள் மூலமாக நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவதன் மூலம் நிலத்தடி நீர் வளம் அரிதாகிச் செல்கின்றது. இது தற்காலத்தில் பாரிய பிரச்சினையாக காணப்படுகிறது.

நீரின்றி எந்த உயிரினமும் வாழ இயலாது என்பதை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து நீர் வீண் விரயத்தை தவிர்த்து சிக்கனமாக பயன்படுத்த பழகுதல் வேண்டும்.

மக்களிடையே நீரின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல் வேண்டும்.

தொழிற்சாலை கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றாதவர்களின் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு நீரின் அவசியத்தன்மையினை தெளிவூட்டுதல் வேண்டும்.

மாரி காலத்தில் கிடைக்கப்பெறும் மழை நீரை சரியான முறையில் நீர்த்தேக்கங்கள் அமைத்து சேகரித்து கோடைகாலத்தில் பயன்படுத்துதல் வேண்டும்.

இவ்வாறான பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் நீரை மாசடையாமலும் வீண்விரயமாவதையும் தவிர்த்து நீர்வளத்தை பாதுகாக்க முடியும்.

நிறை தேவையற்ற முறையில் வீண்விரயம் செய்வதன் மூலம் எதிர்வரும் காலங்களில் நீருக்காக மூன்றாவது உலகப்போர் நடைபெற கூட வாய்ப்புக் காணப்படுகிறது.

எனவே பல்வேறு  நன்மைகளை மனிதருக்கு ஆற்றுகின்ற இந்த நீர் வளத்தை சரியான முறையில் பாதுகாத்து நம்முடைய எதிர்வரும் சந்ததியினருக்கு வழங்குதல் எம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.

Leave a Comment