மிடில் கிளாஸ் ஹை கிளாஸா? கலகலப்பு , எமோஷன், பரபரப்பு என மூன்றையும் முடிந்தளவு கச்சிதமாக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம்,

By Yamini

Updated on:

Follow Us
middleclaas-muishkanth-vijaylakshmi-movie-review-tamil-2025
middleclaas-muishkanth-vijaylakshmi-movie-review-tamil-2025

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் கார்ல் மார்க்ஸ் (முனீஸ் காந்த்), தன் மனைவி அன்பரசி (விஜயலட்சுமி), மகள், மகன் ஆகியோருடன் சென்னையில் வசித்து வருகிறார்.

முனிஷ்காந்த், விஜயலட்சுமி அன்றாட வாழ்க்கையையே மாசம் 15 ஆயிரம் சம்பளத்தில் வாழ்ந்து வருபவர்கள். எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறிவிட வேண்டும் என்று போராடி பல வேலைகள் பார்த்து வருகின்றனர். அந்த சமயத்தில் விஜயலட்சுமி தம்பி திருமணம் வர, எப்படியாவது நிறைய மொய் செய்ய வேண்டும் என்று சொல்ல முனிஷ்காந்த் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்.

சொந்த கிராமத்தில் விவசாய நிலம் வாங்கி, செட்டில் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் கார்ல் மார்க்ஸ், தன் சொற்ப வருமானத்தாலும், குடும்பச் செலவு, பிள்ளைகளின் கல்வி போன்ற செலவுகளாலும் திண்டாடுகிறார். இந்நிலையில், மறைந்த தந்தை சிவபுண்ணியத்தால் (வேல ராமமூர்த்தி) தற்போது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய ஜாக்பாட் அடிக்கிறது. முனிஷ்காந்த் அப்பா ஒரு சேட்டுக்கு சென்னையில் இருக்கும் கடை ஒன்றை இலவசமாக கொடுக்கிறார், கிட்டத்தட்ட பல வருடம் கழித்து அந்த சேட்டு தன் முதலாளி மகன் முனிஷ்காந்த் என்பதால் ஒரு கோடிக்கு செக் போட்டு கொடுக்கிறார். ஆனால், கொடுத்த செக்கை வாங்கிக்கொண்டு முனிஷ்காந்த் வரும் வழியில் ஒரு விபத்தில் அந்த செக்-யை தொகைக்க அதன்பின் என்ன ஆனது என்ற எமோஷ்னல் போராட்டமே இந்த மிடில் க்ளாஸ். 

வடிவேலு முருகனின் கவுன்ட்டர்கள் பிரச்னைகளுக்கு இடையே காமெடிகளைத் தூவுகின்றன. மொபைல் போனும் கையுமாகப் பேசிக்கொண்டேயிருக்கும் காளி வெங்கட்டை இன்னுமே அழுத்தமாகப் பயன்படுத்தியிருக்கலாம். காமெடி, எமோஷன், பரபரப்பு என மூன்றையும் முடிந்தளவு கச்சிதமாக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம், படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் இறுதி காட்சிகளைத் தொகுத்த விதம் சிறப்பு. மிடில் கிளாஸ் வாழ்க்கைக்கு எதார்த்தத்தைக் கூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுதர்சன் ஸ்ரீனிவாசன்.

விஜய் லட்சுமியின் ஓவர் ஆக்டிங்  காமெடி ஏரியாவில் கைகொடுத்திருந்தாலும், சில  தருணங்களில் சிறிது தொந்தரவையே தந்திருக்கிறது. தொடக்கத்தில் மிடில் கிளாஸின் பொருளாதார பிரச்னைகளைப் பேசிவிட்டு, அவற்றுக்கான சரியான காரணத்தை அடையாளப்படுத்தி, தீர்வை முன்வைக்காமல் சொந்த குடும்பத்தையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது அபத்தம்.

இரண்டாம் பாதியைச் சுவாரஸ்யமாக்க, துப்பறியும் கிளைக் கதையைக் கையிலெடுக்கும் திரைக்கதை, அதை இஷ்டத்திற்கு நீட்டி முழக்கியிருக்கிறது. துப்பறிதல், மனோதத்துவ சோதனை போன்றவை ஐடியாக்களாகக் கவனிக்க வைத்தாலும், அதை மேலோட்டமாக அணுகி, வாய்ப்பைத் தவறவிட்டிருக்கிறது திரைக்கதை.

இறுதிக்காட்சி வரை அடுக்கப்படும் ஹெவி டோஸ் எமோஷன் காட்சிகள் எவ்விதத் தாக்கத்தையும் தராமல் அயற்சியையே தருகின்றன.

middleclaas-muishkanth-vijaylakshmi-movie-review-tamil-2025

பிரணவ் முனிராஜ் இசையில் ‘தேன்கூடே’ பாடல் தித்திக்க, ஏனைய பாடல்கள் திரையோட்டத்தோடு வந்து போகின்றன.

கோடாங்கி அவர்களின் ஒவ்வொரு கவுண்டருக்கும் விசில் பறக்கிறது, படத்தின் முதல் பாதி விஜயலட்சுமி தம்பி திருமணத்திற்கு பண ஏற்பாடு செய்வது, அதனால் வரும் மோதல் சண்டை என அனைத்தையுமே கலகலப்பாகவே கொண்டு சென்றுள்ளனர்.

விஜயலட்சுமியின் எம்.எல்.எம் பிசினஸ், புடவை வியாபாரம், முனீஸ் காந்த் குடும்பம் எடுக்கும் யூடியூப் சேனல் அவதாரங்கள் போன்றவை கலகலப்பூட்டினாலும், அவை ஓவர் டோஸ் ஆவதும், அவ்வகையான காட்சிகள் ரிப்பீட் அடிப்பதும் எதார்த்தத்தைக் குலைக்கின்றன. மிடில் கிளாஸின் பிரச்னைகளை நித்தம் சமாளித்துக்கொண்டிருக்கும் விஜயலட்சுமி கதாபாத்திரத்திற்கு வில்லன் பெயின்ட் அடித்தது அபத்தம்.செக் தொலைந்த பிறகு அதை மீட்க இவர்கள் செய்யும் வேலைகள் மிடில் க்ளாஸ் தாண்டி சூப்பர் ஹீரோக்கள் போல் இவர்கள் செயல்படுவது கொஞ்சம் யதார்த்த மீறல்.

எல்லோரும் சொல்வது போல் இதெல்லாம் படத்தில் தான் சாத்தியம் என்பது போல் மிடில் க்ளாஸ் என்று டைட்டிலில் கொஞ்சம் யதார்த்தத்தை மீறி சினிமாத்தன்மைகாக பல காட்சிகள் உள்ளது, சிவபுண்ணியம் சில இடங்களில் இட்லிக்கடை சிவா நேசனை நினைவுபடுத்தினாலும் ரசிக்கும் படியாகவே இருந்தது.இரண்டாம் பாதியில் காட்சிகள் யூகிக்க முடிவதும் பலவீனம். லாஜிக் மீறல்களும் லேசாக இடிக்கத்தான் செய்கின்றன. எல்லா மிடில் கிளாஸ் படங்களிலும் நல்லவர்களை கொட்டி குவித்துக்கொண்டிருந்தால், தமிழ்நாடு கன மழையில்  மூழ்கிவிடும். படத்தின் க்ளைமாக்ஸ் எல்லாம் குழந்தைகளுக்கு நீதிக் கதை சொல்வதை போல அநியாயத்துக்கு ஸ்பூன் பீட் கருத்துக்கள்.

படத்தின் முதல் பாதி விஜயலட்சுமி தம்பி திருமணத்திற்கு பண ஏற்பாடு செய்வது, அதனால் வரும் மோதல் சண்டை என அனைத்தையுமே கலகலப்பாகவே கொண்டு சென்றுள்ளனர். ஆங்காங்கே ஆறுதல் தரும் ஒன்லைன் காமெடிகளும் ஆசுவாசம் தருகின்றன. இப்படி  சில இடங்களில் சிறிய வெற்றிகள், ஆனால் வெற்றிகள் இருந்தபோதிலும் படமும் மிடில் கிளாஸ் தான்.

Yamini

My journey into journalism began with an old, beat-up tape recorder and an insatiable need to ask 'Why?

Leave a Comment