துப்பாக்கி முனையில் ஒரு கொள்ளை சம்பவம்,
எக்கச்சக்கமாகப் பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையிலிருக்கும் டிடெக்டிவ் வேலுவும் (கவின்), இந்த நாட்டை விட்டே ஓடிவிட வேண்டும் என்ற குறிக்கோளோடிருக்கும் என்.ஜி.ஓ ஓனரான பூமியும் (ஆண்ட்ரியா ஜெரிமியா), கூட்டணி இல்லாமல் தனியாக தேர்தலில் நிற்கும் எம்.எல்.ஏ மணிவண்ணனும் (பவன்) இந்தக் கொள்ளையில் எப்படிச் சம்பந்தப்படுகிறார்கள், அதில் சம்பந்தப்பட்ட கவின், ஆண்ட்ரியா, பவன் ஆகியோரின் அறிமுகம், அவர்கள் முன் நிற்கும் பெரிய பிரச்னை போன்றவற்றை அடுக்கி, தொடக்கக் காட்சியையே இடைவேளை காட்சியைப் போல வைத்துத் தொடங்குகிறது படம்.

தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த ராபின் ஹூட் வகை படங்களை நன்கு புரிந்து அதேபோல் கவின் கதாபாத்திரம் அமைந்தால் கிளிஷே என்று சொல்லிவிடுவார்கள் என எண்ணி வேண்டுமென்றே கவின் கதாபாத்திரத்தை கெட்டவனாக சித்தரித்தது போலவே தோன்றுகிறது, அவர் ஒரு எத்திக்கல் ஹேக்கர், மோசடி செய்பவர் மற்றும் பிளாக்மெயிலர் என்று வகைப்படுத்தி விடலாம், ஆனால் அவரின் அதீத பண ஆசை மற்றும் பொறுப்பற்ற செயல்கள் மேலும் கள்ளக்காதல் உறவு, அடிக்கடி கவின் பேசும் “நான் கெட்டவன் தான் ஆனா எச்ச இல்ல” வசனம் இவற்றை வைத்து அவர் ஒரு ஆன்டி ஹீரோவாக சித்தரிக்க முடிந்தவரை இயக்குனர் முயற்சி செய்திருக்கிறார் ஆனால் அந்த முயற்சி பல இடங்களில் சற்றே சலிப்பளிக்கிறது . கவினுக்கு இந்த படத்தில் ஹீரோயினாக வரும் ரதி (ருஹானி சர்மா) போர்ஷன் எல்லாம் கொஞ்சம் ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருந்தாலும், ஆரம்பத்திலேயே கவினுக்கு கொடுத்த அடைமொழி மற்றும் கவின் அந்த சூப்பர் மார்க்கெட்டில் நடக்கும் கொள்ளை சம்பவத்தில் சிக்கும் இடத்திற்கு கனகச்சிதமாக பொருந்துகிறது.
கவினின் குடும்பப் பின்னணி, அவரின் டிடெக்டிவ் சேட்டைகள், அவற்றைத் தாண்டி அவர் செய்யும் சாகசங்கள், ஆண்ட்ரியாவின் கதை, அவருக்கு இருக்கும் வெவ்வேறு முகங்கள், ட்விஸ்ட்கள், பவனின் கதை என மூன்று நெடுஞ்சாலைகளும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டபடியே நகர்ந்தாலும், எங்குமே நிதானமும், அழுத்தமுமில்லாமல் ஓடிக்கொண்டேயிருக்கிறது. பல கிளைக்கதைகளைத் துண்டுதுண்டாகக் குவித்ததோடு, பல கட்களை அந்தரத்தில் மிதக்கவிட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆர். ராமர்.
ஆரம்பத்திலேயே இயக்குநர் நெல்சன் வாய்ஸ் ஓவரில் இடைவேளை காட்சியில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது மற்றும் ஆண்ட்ரியாவிடம் கவின் எப்படி சிக்கியிருக்கிறார். ஆண்ட்ரியா பவனிடம் எப்படி சிக்கியிருக்கிறார் என்பதை சொல்லிவிட்டு படத்திற்குள் செல்லும் இடம் சிறப்பாக உள்ளது, மூன்று கதாபாத்திரங்களின் கதையை தொடக்கத்திலிருந்து தொடர்புப்படுத்தியே காட்சிகள் பின்னப்பட்டிருப்பதால், இரண்டாம் பாதியில் பல வேலைகள் மிச்சமாகியிருக்கின்றன. ஆனாலும், கதாபாத்திரங்களுக்கும் நமக்கும் இடையான தொடர்பு மிஸ் ஆகிறது.
நல்லவர், வில்லி, பலி ஆடு எனக் காட்சிக்குக் காட்சி பல பரிமாணங்களை எடுத்துக்கொண்டே இருக்கும் கதாபாத்திரத்தை, தன் தோரணையும் மர்மமும் கலந்த உடல்மொழியால் தாங்குகிறார் ஆண்ட்ரியா ஜெரிமியா. ஆண்ட்ரியா அடைய நினைக்கும் நோக்கம் என்பது அவர் எளிதாக தற்போது இருக்கும் நிலையிலிருந்து அடையக்கூடிய நோக்கம் என்று சிந்திக்க வைக்கிறது அதனாலேயே ஆன்ட்ரியாவின் வில்லத்தனம் ஆங்காங்கே திணிக்கப்பட்டது போலவே ஆர்வதை குறைக்கிறது.

குற்ற உணர்வு, ஆசை, ஏமாற்றம், இழப்பு போன்றவை நடுத்தர மக்களுக்கானது போன்ற வசனங்கள் திணிக்க பட்டது என்றாலும் அது ஏற்புடையதாய் இல்லை.சார்லி கதாபாத்திரம் இன்னும் வலுவாக அமைத்திருந்தால் அவர் வரும் இறுதி காட்சிகளில் ஆபத்தம் எட்டி பார்க்காமல் இருந்திருக்கும்.
அர்ச்சனா வரும் போர்ஷன் எல்லாம் டாக்டர் படத்தை நினைவுப் படுத்துகிறது. மேலும், ரொம்பவே செயற்கையாக இருக்கும் உணர்வைத் தருகிறது.
இயக்குநர் வெறும் Gen z தலைமுறையினருக்கா எழுத பட்ட திரைக்கதையாகவே தோன்றிகிறது, அதற்கு ஆக சிறந்த உதாரணம் கவின் கதாபாத்திரம், காட்சிக்கு ஒட்டாத நெல்சன் நகைச்சுவைகள்.கிரேசி மோகன் படங்களை பார்த்த தலைமுறையினருக்கு டார்க் ஹியூமர் ஒன்றும் புதிதல்ல,
இலக்கணங்களை மீறி நடித்திருக்கும் கவின் காமெடி கலந்த கொஞ்சம் வில்லத்தனம் கலந்த அந்த நடிப்பு அவருக்கு சூட்டாகி இருக்கிறது. குறிப்பாக வட இந்தி பெண் காட்சிகள், நானும் மோகன் மாதிரி என்று இருவரும் சொல்லும் அந்த சீனுக்கு அரங்கம் அதிர்ந்தது, கவினுக்கும் அவரது மனைவிக்கும் இருக்கும் சிக்கல்களை தனி காட்சிகளாக காட்டாமல் இருந்தது ஒரு ஆறுதல்.
படத்தில் சில குறைகள் இருந்தாலும், கோலிவுட்டில் ஒரு மணி ஹெய்ஸ்ட் முயற்சியை மிடில் கிளாஸ் காமன் மேன் மக்களின் மனநிலையை மையப்படுத்தி படமாக்கிய விதம் படத்தை மோசம் இல்லை என்று சொல்ல வைக்கிறது.
“சில்வர் ஜூப்ளி போக வேண்டிய படம் இப்போ நூறு நாள் படம் ஆக்கிட்டீங்க” அஜித் நடித்த ‘வில்லன்’ படத்தை பார்த்து விட்டு ரஜினி கே.எஸ் ரவிக்குமாரிடம் சொன்னது.











