Homemade shampoo preparation in tamil

By Go2Tamil

Published on:

Follow Us
homemade-shampoo-preparation-in-tamil

Homemade shampoo preparation: இனி வீட்டிலேயே இயற்கையான ஷாம்பூ தயாரிக்கலாம்!  இனி கெமிக்கல் ஷாம்புகளுக்கு bye  சொல்லிடுங்கள்!

முடியில் நறுமணம் வீச வேண்டுமென்பதற்காகவும் முடி பலபலப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் நீளமாக முடி வளரும் என்னும் இது போன்ற பல விளம்பரங்களை பார்த்து பலவகையான கெமிக்கல் கலந்த ஷாம்புகளை பயன்படுத்தி உங்கள் பணத்தையும் வீணடித்து நேரத்தையும் வீணடித்து மேலும் உங்களிடமிருந்த கொஞ்ச நெஞ்ச முடியும் இப்பொழுது இல்லையா. இனி இந்த கவலை வேண்டாம் இயற்கையாக ஹெர்பல் ஷாம்புவை நீங்கள் வீட்டிலேயே செய்யலாம். மேலும் பல விளம்பரங்களில் ஹெர்பல் ஷாம்பூ என்று சொல்லி விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் சிலரோ அவற்றிலும் கொஞ்சம் அல்லது சிறிதளவு கெமிக்கல் கலந்திருப்பதாக கூறுகின்றன. ஒருவேளை கெமிக்கல் கலந்திருக்குமோ என்று உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் கூட இருக்கலாம். ஏன் இவ்வளவு நேரம் நான் யோசித்து நேரத்தை வீணடித்துவிட்டு. கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையை படித்துவிட்டு நீங்களே  இயற்கை ஷாம்பூ செய்ய தயாராகுங்கள்.  இதற்காக நீங்கள் கடைகளுக்குச் சென்று எந்த ஒரு பொருளையும் இதுக்கென வாங்க வேண்டும் என்று எந்த ஒரு அவசியமும் இல்லை. நேராக உங்கள் கிச்சனுக்கு சென்று பாருங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் உங்கள் வீட்டு கிச்சனில் உங்களுக்கு எதிராகவே இருக்கும். அவற்றைப் பயன்படுத்தி எவ்வாறு இயற்கை ஹெர்பல் ஷாம்பு செய்யலாம் என்பதை காணலாம்.

இயற்கை முறையில் ஷாம்புவை பல பொருட்கள் பயன்படுத்தி செய்யலாம்.

 இயற்கை ஷாம்பூ 1 : தேவையான பொருட்கள்

  • சீயக்காய் பவுடர் – மூன்று அல்லது நான்கு டேபிள் ஸ்பூன்
  • நெல்லிக்காய் பவுடர் –  3 அல்லது 4 டேபிள் ஸ்பூன்
  • ரோஸ் வாட்டர் –  அரை கப்
  • வெந்தய பவுடர் –  மூன்று அல்லது நான்கு டேபிள் ஸ்பூன்
  • வெங்காயம் காயவைத்து நுணுக்கிய பவுடர் –   3 அல்லது 4 டேபிள் ஸ்பூன்
  • கருவேப்பிலை பவுடர் ஒரு டேபிள் ஸ்பூன்
  • ஓடுடன் கூடிய  சோப்புநட்ஸ் 

செய்முறை : 

சோப்பு நட்ஸ் ஓடுடன் விதைகளை மட்டும் நீக்கிவிட்டு சோப்பு நட்சை விதையை நீக்கி தோளுடன் நன்றாக நசுக்கி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்கவும். அதனுடன் நசுக்கி வைத்துள்ள சோப்பு நட்சை கொதிக்க வைத்து விட்டு ஆரிய பின் மேலே உள்ள தண்ணீர் மட்டும் தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

இப்பொழுது பவுடராக நாம் எடுத்துக் கொண்ட சீயக்காய் பவுடர், நெல்லிக்காய் பவுடர் ரோஸ் வாட்டர் வெந்தய பவுடர் வெங்காய பவுடர் கருவேப்பிலை பவுடர் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்து கொட்டி அதனுடன் வடிகட்டி வைத்துள்ள ரீட்டா தண்ணீரையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து இரண்டு மணி நேரம் அப்படியே ஊற வைக்கவும்.

இரண்டு மணி நேரம் கழித்து அதனுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து வைத்தால் இயற்கையான ஷாம்பூ ரெடி. இதை இப்பொழுது வேறொரு பாட்டிலில் மாற்றி வைத்து உபயோகிக்க தயாராகலாம். 

ஒவ்வொரு முறையும் இந்த ஷாம்புவை பயன்படுத்தும் பொழுது நன்றாக குலுக்கி விட்டு பிறகு பயன்படுத்தவும். ஏனென்றால் அதில்  சேர்த்துள்ள பவுடர்கள் எல்லாம் அடியில் தங்கி இருக்கும். அதனால் ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் நன்றாக குளித்துவிட்டு பிறகு பயன்படுத்தவும். 

இந்த இயற்கை ஷாம்பு வை பயன்படுத்தும் பொழுது தலைக்கு அப்ளை செய்துவிட்டு நீடினால் அலசக்கூடாது. இது இயற்கை ஷாம்பூ என்பதால் தலையில் அப்ளை செய்து நன்றாக முடியும் வேர்ப் பகுதியில் மசாஜ் செய்து விட்டு ஒரு பத்து அல்லது 15 நிமிடம் ஆவது குறைந்தபட்சம் தலையில் வைத்திருக்க வேண்டும். பிறகு நீரினால் அலசிக் கொள்ளலாம்.

 இயற்கை ஷாம்பூ 2 : தேவையான பொருட்கள்

  • சீகக்காய் 100 கிராம்
  • பூவந்திக்கொட்டை 100 கிராம்
  •  நெல்லிக்காய் காய வைத்தது 100 கிராம்
  • வெந்தயம் 50 கிராம்
  •  வேப்பிலை 25 கிராம்

செய்முறை:

நன்கு தரமான  சிகைக்காயை பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். அதனுடன் பூவந்திக் கொட்டை என்பது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். நெல்லிக்காயை நன்றாக வெயிலில் காயவைத்து பொடியாக எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது நெல்லிக்காய் பவுடராக கடைகளிலும் வாங்கிக் கொள்ளலாம். வெந்தயத்தை நன்கு வெயிலில் காய வைத்து அரைத்து பவுடராக்கி வெந்தய பொடியாக எடுத்துக் கொள்ளுங்கள். இதனையும் நீங்கள் கடைகளில் வெந்தய பொடியாகவும் வாங்கி பயன்படுத்தலாம். வேப்பிலை அல்லது துளசிவற்றில் ஏதேனும் ஒன்றினை வெயிலில் காயவைத்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

சீக காயை உரலில் நன்றாக இடித்து பிறகு மிக்ஸியில் போட்டு பவுடராக அரைத்து எடுத்துக் கொள்ளவும். மென்மையான பவுடராக வரவில்லை என்றாலும் பரவாயில்லை கொரகொரப்பாக எடுத்துக் கொள்ளலாம். பூவந்திக்கோட்டையை நசுக்கி இரண்டாகப் பிளந்தால் உள்ளே ஒரு விதை இருக்கும். இந்த விதையை பயன்படுத்தக் கூடாது. இது முற்றிலும் நச்சுத்தன்மை கொண்டது. அதனால் விஷத்தன்மை கொண்ட இந்த விதியை உடனடியாக அப்புறப்படுத்துங்கள். வெந்தயத்தை லேசாக வறுத்து பின்பு அரைத்து பொடியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

முதலில் ஒரு இரும்பு கடாய் எடுத்துக் கொள்ளவும். சீகக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் என கூந்தலுக்கு நீங்கள் ஏதேனும் பாத்திரத்தில் வைத்து சூடு படுத்த வேண்டும் என்று நினைத்தால் அதற்கென தனி ஒரு இரும்பு கடாய் வாங்கி அதற்கென மட்டுமே பயன்படுத்தவும். இந்த கடாயில் உங்கள் ஷாம்பூவிற்கு ஏற்றவாறு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

 அடுப்பு தீயை மிதமான சூட்டில் வைத்துவிட்டு இதில் நம் பொடியாக அரைத்து வைத்துள்ள சீகைக்காய் மற்றும்  பூவந்தி கொட்டை பொடிகளை சேர்த்து நன்றாக கிளறி விட்டு பிறகு எடுத்து வைத்துள்ள வெந்தய பொடி, வேப்பிலை பொடி, நெல்லிக்காய் பொடி அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறி கொடுக்கவும். 10 நிமிடம் அல்லது 15 நிமிடங்கள் அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறி கொடுத்தால் போதும். உங்களுக்கு ஷாம்பு ஆனது சற்று அடர்த்தியாக வேண்டும் என்று நினைத்தால் இன்னும் சிறிது நேரம் மிதமான சூட்டிலேயே  அடுப்பில் வைத்து மெதுவாக கொதிக்க வைக்கவும். ஷாம்பு சற்று கெட்டியானதும் அடுப்பை  நிறுத்திவிட்டு ஆடும் வரை ஷாம்புவை ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும். 

நன்றாக ஆரிய பிறகு 8 மணி நேரம் அல்லது 10 மணி நேரம் கழித்து அதனை நன்றாக கைகளால் பிசைந்து விட்டு பிறகு ஒரு வடிகட்டியோ அல்லது காட்டன் துணியில் நன்றாக வடிகட்டி ஒரு ஷாம்பூ பாட்டிலில் அல்லது கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளலாம்.

 வறண்ட தலை முடியை கொண்டவர்களாக இருந்தால்   மற்றும்  தலைக்கு  போஷாக்கு மற்றும் பொலிவிற்காக தேங்காய் பால் பயன்படுத்தி தலையை அலசபவர்கள் என்றால். இந்த ஷாம்பு பயன்படுத்தும் பொழுது ஷாம்புடன் சிறிதளவு தேங்காய் பால் சேர்த்து பயன்படுத்தலாம்.

இந்த ஷாம்பூவை பயன்படுத்தும் பொழுது  நேரடியாக தலையை அப்ளை செய்து விட்டு அலசக்கூடாது. தலையில் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் நன்றாக தேய்த்தால் மட்டுமே தலையில் உள்ள எண்ணெய் பிசுக்கு முற்றிலும்  அகலும். மற்ற கெமிக்கல்  ஷாம்புக்களுடன் இவற்றை ஒப்பிட கூடாது. அவற்றில் உள்ள நறுமணம் போல் இவற்றில் இல்லை எனினும், அதில் வரும் முறை போல் இதில் வரவில்லை என்றாலும், இதன் பலன்  கெமிக்கல் ஷாம்புக்களை விட இயற்கை ஷாம்பூ பலன் அதிகமாக இருக்கும். 

Go2Tamil

We are nearly 8+ years experience in blogging. this website is fully focus on tamil news and contents. If you are need our service for web designing,digital marketing,blogging,DTP,Graphic Designing you can mail me on vigneshwarsankar@gmail.com

Leave a Comment