கிறிஸ்துமஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
நாம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு ஆண்டும், உற்சாகமாக கொண்டாடும் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை, இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை, நாம் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் புனித நாளாகும். கிறிஸ்துவின் பிறப்பு பெத்லெஹேமில், ஒரு சிறிய மாட்டு கொட்டகையில் நடந்தது. அப்போது அந்த நேரம், வானத்தில் ஒரு நட்சத்திரம் மின்னியது. அது பிரகாசமாய் மினியத்தில், மூன்று ஞானிகளின் கண்ணில் தென்பட்டு, கவனத்தை ஈர்த்தது.
இந்த ஞானிகள் தங்களிடம் இருக்கும் தங்கம், வெள்ளி, மற்றும் உலோக பொருட்கள் போன்ற விலையுயர்ந்த பரிசுகளுடன், பெத்லெஹேமுக்கு வந்து, கிறிஸ்துவை வாழ்த்தி ஆசிர்வதித்தனர். இவர்களின் பயணம் மற்றும் பக்தியானது, கடவுளின் மகிமையை உணர்த்தியது.
கிறிஸ்துமஸ் பண்டிகையின் தனிப்பட்ட அழகே, அதனை கொண்டாடும் மரபு தான். வீடுகளில் கிறிஸ்துமஸ் மரம் அலங்காரம் செய்வது, விதவிதமான சாப்பாட்டு ஏற்பாடுகள், மற்றும் மகிழ்ச்சியுடன் பகிரும் வாழ்த்து அட்டைகள், போன்ற விஷயங்கள், ஒவ்வொரு வீட்டிலும் இந்த தினத்தை ஒரு திருநாளாக கொண்டாடப்படுகின்றது.
முதலில், 4-ஆம் நூற்றாண்டிலிருந்தே, ரோமாவில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் உலகமெங்கும் அது ஒரு மிகப்பெரிய பண்டிகையாக பரவியது 12-ஆம் நூற்றாண்டுக்கு பிறகு தான்.
இந்த நாளானது ஒருவர்கொருவர் அவர்களது அன்பின் முக்கியத்துவத்தையும், அமைதியின் முக்கியத்துவத்தையும், மற்றும் பகிர்வின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறது. இந்த நாளானது ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்துக்கொண்டு, மகிழ்ச்சியை பரிமாறுவதற்கான தருணமாக விளங்குகிறது.
happy christmas in tamil | கிறிஸ்துமஸ் தொடர்பான சுவாரஸ்யமான தகவல்கள்
இயேசு பிறந்த திகதி சரியாக அறியப்படவில்லை: இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள் உண்மையில் டிசம்பர் 25ஆம் தேதியா என்பது சரியான ஆதாரமில்லை. ஆனால் டிசம்பர் 25 ஆனது ரோமன் சூரிய பெருவிழாவுடன் தொடர்புடைய நாளாகும், அதனாலேயே இந்த தேதியை தேர்ந்தெடுத்தனர்.
‘ஜிங்கிள் பெல்ஸ்’ பசுபிக் பாடலல்ல!: – ‘ஜிங்கிள் பெல்ஸ்’ என்ற புகழ்பெற்ற கிறிஸ்துமஸ் பாடல், முதலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக எழுதப்பட்ட பாடலல்ல. இது நன்றி தினம் (thanks giving day) தாங்க்ஸ்கிவிங் தினத்திற்காக எழுதப்பட்டது.
கிறிஸ்துமஸ் ட்ரீயை அழகாக அலங்கரிப்பது ஜெர்மனியில் ஆரம்பமான ஒரு பழக்கமாகும். 16ஆம் நூற்றாண்டில் முதல் முறையாக கிறிஸ்துமஸ் மரம் மினுமினுப்பு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
சாண்டா கிளாஸ் என்பர் யார்? இவர் உண்மையானவரா? அல்லது கதையா? சாண்டா கிளாஸ் என்ற சின்னம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். “சாண்டா கிளாஸ்” என்பது, 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த செயின்ட் நிக்கோலஸில்(saint nicholas) என்பவர் கருணையுள்ள ஒருவர், ஏழைகளுக்கு உதவி செய்தார்.
Why is it called White Christmas? கிறிஸ்துமஸ் வெள்ளை நிறம் கொண்டதற்கு காரணம் என்ன? வடக்கு அரைக்கோளத்தின் வடக்கு நாடுகளில் ( northern countries of the Northern Hemisphere) கிறிஸ்துமஸ் ஈவ் அல்லது கிறிஸ்துமஸ் தினத்தில் பனி இருக்கும். கிறிஸ்துமஸ் மாதம் இந்த இடங்களில் பனி பொலிவு ஏற்படுவதால் இதனை ‘வெள்ளை கிறிஸ்துமஸ்(White Christmas )’ என்று கூறுவார்கள்.
why santa clause wear red color ? சாண்டாவின் சிவப்பு உடை: சாண்டா கிளாஸ் சிவப்பு உடையை அணிவதற்கான கரணம் என்வென்றால், 1930-ல் கோகா-கோலா நிறுவனத்தின் விளம்பரங்களால் இந்த சிவப்பு நேரம் மிகவும் பிரபலமாக இருந்தது. அதற்கு முன்பு சாண்டா வித்தியாசமான நிறங்களில் உடையில் காட்சியளித்தார்.
மின்விளக்குகளை கிறிஸ்துமஸ் மரத்திற்கு பயன்படுத்துவதும் 1882 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒரு மின்சார மேம்பாட்டு பொறியாளர் இதை உருவாக்கினார்.
முதல் கிறிஸ்துமஸ் அஞ்சல் அட்டை 1843-ல் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. தற்போது இந்த அட்டைகள் உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளன.