Best remedies for dark circles under eye in tamil

By Go2Tamil

Published on:

Follow Us
Best remedies for dark circles under eye in tamil

Best remedies for dark circles under eye in tamil : கண்களின் கீழ்  உள்ள கருவளையம்   நிரந்தரமாக மறைய வீட்டில் உள்ள இந்த பொருட்களை போதும்!

கருவளையம் என்பது இன்றைய காலத்தில் முக்கிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. முன்பெல்லாம் பெண்களுக்கு மட்டும் தான் கருவளையம் வரும். ஆனால் தற்பொழுது ஆண்களும் கருவளையம்  பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். அது மட்டும் இன்றி முன்பெல்லாம் 30 வயது  அல்லது 35 வயது  கடந்த பெண்களுக்கு மட்டுமே கருவளையம் அதிகமாக வரும். ஆனால் இப்பொழுதோ இளம் வயது பெண்களுக்கே குறிப்பாக 20 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கும் கருவளையம் ஏற்படுகிறது. 

 அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது மன உளைச்சல்,  மன அழுத்தம் போன்றவை பார்க்கப்படுகிறது. இவைகள் வேலைப்பளு காரணமாகவோ அல்லது போதிய வருமானம் இல்லை இதில் அடிப்படையில் மன உளைச்சல் மன  அழுத்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இதனால் சரியான தூக்கம் இன்றி அழைக்கிறார்கள். சரியாக தூங்கவில்லை என்றாலும் கண்ணின் கீழ் கருவளையம் ஏற்படும் வாய்ப்புள்ளது. சரி, இப்பொழுது கருவளையம் வந்துவிட்டது. இந்த கருவளையத்தை நிரந்தரமாக எவ்வாறு போக்கலாம் என்று கேட்டால் வீட்டில் உள்ள சில எளிய பொருட்களைக் கொண்டு இந்த கருவளையத்தை கொஞ்சம் கொஞ்சமாக போக்கி, பிறகு நிரந்தரமாக மறைய வைத்து விடலாம். வாருங்கள் அது எந்தெந்த பொருள் என்பதை இனி விரிவாக பார்க்கலாம்.

வீட்டில் இருக்கும் அன்றாட  காய்கறிகளில் ஒன்று உருளைக்கிழங்கு. ஒரு சாதாரண உருளைக்கிழங்கில் 30 சதவீதம் வைட்டமின் சி அடங்கியுள்ளது. இந்த விட்டமின் சி ஆனது தோள்களில் உள்ள கண்ணுக்குத் தெரியாத செல்களை பாதுகாக்க கூடிய ஒரு ஆன்டிஆக்சிடென்ட் ஆக பயன்படுகிறது.

Best remedies for dark circles under eye in tamil

 ஒன்று அல்லது பாதி உருளைக்கிழங்கை  கழுவி பிறகு தோல் நீக்கி விடுங்கள். தோல் நீக்கிய உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக கட் செய்து பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த உருளைக்கிழங்கு ஆனது மாவு போல இருக்கும். இந்த உருளைக்கிழங்கு மாவை கண்களின் கீழ் உள்ள கருவளையம் மேல் சிறிய பேக்காக போடவும். காலை எழுந்த உடனோ அல்லது இரவு தூங்குவதற்கு முன்பு இதுபோல போட்டு கொண்டு ஒரு 20 நிமிடங்கள் கழித்து சாதாரண நேரில் கழுவி விடவும். இதுபோல தினசரி செய்து வந்தால் கருவளையம் மறைவதை காணலாம்.

அவ்வப்போது உருளைக்கிழங்கை அரைத்து பயன்படுத்த  சிரமப்படுபவர்கள் இந்த டிப்ஸை  செய்து பாருங்கள். தோல் நீக்கிய உருளைக்கிழங்குடன் ஒரு வெள்ளரிக்காயையும் தோல் நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள் தோல் நீக்கிய உருளைக்கிழங்கு மற்றும் தோல் நீக்கிய வெள்ளரிக்காயை மிக்ஸியில் போட்டு அதனுடன் சிறிதளவு எலுமிச்சை  சாறு, கற்றாழை ஜெல், ஆகிய இரண்டையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைத்துக்  கொள்ள வேண்டும். அரைத்து வைத்த இந்த பேஸ்ட்டை ஃப்ரிட்ஜில் வைத்துக்கொண்டு, எப்போதெல்லாம் போட நினைக்கிறீர்களோ எப்போதெல்லாம் ஓய்வு கிடைக்கிறதோ அப்போது அப்ளை செய்து வாருங்கள். இப்படி செய்வதனால் விரைவில் கொஞ்சம் கொஞ்சமாக கருவளையம் மறைவதை காணலாம்.

கொத்தமல்லி இலையை மண் இல்லாமல் நன்றாக நேரில் கழுவி விட்டு கட் செய்து வைத்துக் கொள்ளுங்கள். எடுத்துக் கொண்ட வெள்ளரிக்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக கட் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்துக் கொண்ட கொத்தமல்லி மற்றும் வெள்ளரிக்காயை ஒரு மிக்ஸியில் போட்டு அதனுடன் ஒரு சிட்டிகை அல்லது கால் சித்தியை அளவு குங்குமப்பூ சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். வெள்ளரிக்காயில் இயற்கையாக நீர்ச்சத்து உள்ளதால் அரைக்கும் பொழுது தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும்.

இந்த பேஸ்ட்டை கண்களின் கீழ் உள்ள கருவளையத்தின் மேல் ஒரு பேக்காக போட்டு 20 நிமிடம் அல்லது 25 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். கண்களின் படாமல் கண்களை சுற்றி உள்ள கருவளையம் மேல் மட்டுமே பயன்படுத்தவும். அவ்வப்போது இவற்றை அரைக்க சிரமமாக இருந்தால், ஒரு வாரத்திற்கு தேவையானவற்றை அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

Best remedies for dark circles under eye in tamil

அரைத்து எடுத்ததை வடிகட்டி எடுத்து அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு வாரம் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த தேவையானவற்றை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வாரத்திற்கு மேல் இவற்றை பயன்படுத்த வேண்டாம்.

விளக்கெண்ணையில் விட்டமின் ஈ அதிகம் உள்ளது. இது சருமத்தில் உள்ள வறட்சியை நீக்கி, எப்பொழுதும் சருமத்தை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது. நம் முன்னோர்கள்  நல்லெண்ணையை தலையில் தேய்த்து குளிப்பது போல விளக்கெண்ணெய் கண்களில் விட்டு, கண்களில் உள்ள அழுக்குகளை நீக்குவார்கள். உஷ்ணம் அடைந்த கண் மற்றும்  தலையை குளிர்ச்சி ஊட்டக்கூடிய வல்லமை கொண்டது விளக்கெண்ணெய்.

விளக்கெண்ணெயுடன் இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு டீஸ்பூன் காபித்தூள் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். விளக்கெண்ணெயுடன் கற்றாழை ஜெல்லும் காபி தோலும் கலக்காது. அதனால் வேறு ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரை எடுத்துக் கொள்ளுங்கள் அந்த நீருக்கு மேல் மற்றொரு பாத்திரத்தை வைத்து இந்தப் பாத்திரத்தில் எடுத்துக்கொண்ட விளக்கெண்ணெய் காபித்தூள் மற்றும் கற்றாழை ஜெல்லை நன்றாக கலக்கவும். அடியில் வைத்துள்ள சுடுதண்ணியால் மேலே இவை மூன்றும் ஒரு பேஸ்ட் போல் தயாராகும். இந்த பேஸ்ட்டை ஒரு கண்ணாடி பௌலில் போட்டு வைத்துக் கொள்ளலாம். இரவு தூங்குவதற்கு முன்பு இந்த கிரீமை கருவளையம் இருக்கும் கண்களின் கீழ் தடவி, இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் மசாஜ் செய்து அப்படியே தூங்கவும். காலையில் எப்பொழுதும் போல் முகத்தை கழுவி விடவும்.

வாழைப்பழம் சருமத்திற்கு மிகவும் நல்லது.வாழைப்பழம் ஒரு சிறந்த பேஸ் பேக்காக பயன்படுகிறது. வாழைப் பழத்தை சாப்பிட்ட பிறகு அதன் தோலை தூக்கி எறியாமல் இரு முனைகளையும் வெட்டிவிட்டு கையில் அரைவட்டப் பகுதியில் வைத்துக் கொண்டு கண்களை மூடி கண்களுக்கு மேலேயும் கீழேயும் வட்ட வடிவில் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இதுபோல தொடர்ந்து மசாஜ் செய்து வருவதனால் வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் நம் சருமத்திற்கு தேவையான வைட்டமின்களை நமக்கு கொடுக்கிறது. இதன் மூலம் கருவளையம் வெகுவிரைவில் குறைய தொடங்குகிறது. இந்த வாழைப்பழ  மசாஜ் எந்த நேரம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.

Best remedies for dark circles under eye in tamil_banana peel

இது செய்ய பகல் இரவு மாலை என எந்த ஒரு கட்டுப்பாடுமில்லை. கண்களில் கருவளையம் இல்லை என்றாலும் கூட வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி எறியாமல் அந்தத் தோலை கண்களின் மேலும் கீழும் சுற்றி மசாஜ் செய்து கொள்ளலாம். இப்படி செய்வதனால் உங்கள் கண்களின் கீழ்  பெரும் மாற்றத்தை காணலாம். கண்களின் கீழ் மட்டும் மசாஜ் செய்வதோடு இல்லாமல் முகங்களிலும் மசாஜ் செய்வதனால் முகம் பளபளப்போடு காணப்படும். 

டீ பேக்கை குடித்துவிட்டு தூக்கி எறியாமல், அந்த டீ பேக்கை ஃப்ரிட்ஜில் வைத்து குளிரான பிறகு, குளிரூட்டப்பட்ட டீ பேக்கை கண்களின் கீழ் அல்லது  கண்களை மூடி கண்களுக்கு மேல் பத்தரது 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். இது  இரவு நேரம் செய்வதற்கு ஏற்றது.

எலுமிச்சை சாறு சிறிதளவு எடுத்து தண்ணீருடன் கலந்து, அந்த தண்ணீரில் தக்காளி சாறையும் கலந்து இரண்டையும் ஒன்றாக மிக்ஸ் செய்து விட்டு ஒரு பஞ்சு எடுத்து அந்தப் பஞ்சை கலந்து வைத்த நீரில் தொட்டு பிழிந்து அந்த பஞ்சை கண்களின் கருவளையம் உள்ள இடத்தில் மசாஜ் செய்யவும்.

கற்றாழை ஜெல்லை கண்களின் கீழ் மெதுவாக   அரைவட்ட வடிவில் மசாஜ் செய்யவும்.

தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு பாதாம் எண்ணையை கண்களின் கீழ் தடவி  கொண்டு பிறகு தூங்கலாம்.

சிறிதளவு ஆலிவ் ஆயிலை எடுத்துக்கொண்டு, கண்களுக்கு  கீழ் தடவி மசாஜ் செய்து விட்டு இரவு முழுவதும் அப்படியே விடவும்.

 பத்து புதினா இலைகளை எடுத்துக்கொண்டு கைகளில் லேசாக நசுக்கி அதன் சாறை கண்களின் கீழ் உள்ள கருவளையம் இருக்கும் இடத்தில் மட்டும் தடவி வரவும். 

புதினா இலை நசுக்கி அதன் சாறுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சிறிதளவு கடலை மாவு சேர்த்து ஒரு பேஸ்ட் போல் ரெடி செய்து அந்த பேஸ்ட்டை இரவு தூங்குவதற்கு முன்பு கண்களின் கீழ் உள்ள கருவளையம் இடத்தில் தடவிக் கொண்டு தூங்கலாம்.

வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக வட்ட வடிவில் வெட்டி எடுத்துக்கொண்டு

 இரவு தூங்குவதற்கு முன்பு கண்களை மூடி கண்களுக்கு மேல் வெள்ளரிக்காயை வைத்து அரை மணி நேரம் கண்களை மூடிக்கொள்ளவும். பிறகு அவற்றை எடுத்துவிட்டு உறங்கவும்.

நீண்ட நேரம் செல்போன்  பார்ப்பது அல்லது கணினியில்  வேலை செய்வது.

இரவு நேரங்களில் தூங்காமல் இருப்பது.

 இரவு நேரத்திலோ அல்லது இருட்டிலோ அதிகமாக செல்போன் பார்ப்பது மற்றும் கணினி பயன்படுத்துவது.

மன அழுத்தத்தை போக்க யோகா செய்யலாம். 

டீ காபி போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

கசப்பான அதிக காரமான உணவுகளை எடுத்துக்  கொள்வதை தவிர்க்க வேண்டும்.

 

Go2Tamil

We are nearly 8+ years experience in blogging. this website is fully focus on tamil news and contents. If you are need our service for web designing,digital marketing,blogging,DTP,Graphic Designing you can mail me on vigneshwarsankar@gmail.com

Leave a Comment