7 best hair growth tips in tamil for men: முடி உதிர்தல் என்பது பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.பெண்களுக்கு முடி உதித்தல் அடர்த்தி குறைந்ததாக காணப்படும் ஆனால் ஆண்களுக்கோ முடி உதிர்தல் என்பது வழுக்கையாக மாறிவிடும். ஆண்களுக்கு முடி உதிர முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ஒன்று வெயிலில் அதிகபடியாக பயணிப்பது. மற்றொன்று பரம்பரை பரம்பரையாக அதாவது ஜீன் ஒரு காரணமாக அமைகிறது.
இன்றைய காலகட்டத்தில் சிறு வயதினருக்கே வழுக்கை விழுகிறது. குறைந்த வயதில் வழுக்களுடன் சுற்றுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் முடி உதிர்தல் சிலருக்கு லேசாக வழுக்கையும் ஏற்படும். இதுபோல முடி உதிர்வதற்கு மற்றொரு காரணம் உடல் சூடு. அதாவது நீண்ட நேரம் கணினியில் அமர்ந்தபடியே வேலை பார்ப்பது.
மன அழுத்தம் காரணமாகவும் முடி உதிர்தல் ஏற்படும் அல்லது ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற முடி உதிர்தலை தடுப்பதற்கும், ஆண்களின் முடி பளபளப்பாகவும் நீளமாகவும் இருப்பதற்கு, எளிய டிப்ஸ் சிலவற்றை கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் படித்து தெரிந்து கொண்டு தவறாமல் செய்து பார்த்து வந்தால் முடி உதிர்வை தடுத்து அழகான பளபளப்பான முடியை பெறலாம்.
ஊட்டச்சத்து நிறைந்த உணவு

உங்களின் அன்றாட வாழ்நாளில் உழைக்கும் உடலுக்கு எவ்வாறு ஊட்டச்சத்து முக்கியமோ அதே அளவு முடிக்கும் ஊட்டச்சத்து மிக முக்கியம். ஊட்டச்சத்துதான் முடியை ஆரோக்கியமாக வளர உதவுகிறது. சில வைட்டமின் குறைபாடு காரணத்தினால் முடி உதிர்வு ஏற்படுகிறது. அவற்றை சரியாக கண்டுபிடித்து கவனிக்காவிட்டால் இந்த வைட்டமின் குறைபாடு ஆனது அனைத்து முடியையும் இழந்து வழுக்கை தலையாக மாற்ற வாய்ப்புள்ளது. இதனை முன்கூட்டியே தடுக்க சில வைட்டமின் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
எவ்வாறு வைட்டமின் குறைபாடு இருந்தால் முடி கொட்டுமோ அதேபோல சில வைட்டமின்கள் அதிகமாக இருந்தாலும் முடி கொட்டும் வாய்ப்புள்ளது. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ அதிக அளவில் இருந்தால் முடி கொட்டும் வாய்ப்பு அதிகம்.
முடிக்குத் தேவைப்படும் சரியான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் என்று சொல்லப்படும் இரும்பு, துட்டநாகம், பயோடின், செலினியம், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மட்டுமே முடி உதிர்வை கட்டுப்படுத்தலாம். இதுபோன்ற வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை பெறுவதற்காக தனித்தனியாக எந்த ஒரு உணவும் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நாம் அன்றாட வாழ்வில் உண்ணும் உணவுகளில் இது போன்ற ஊட்டச்சத்து புரதங்கள் நிறைந்த உணவு வகைகள் உள்ளன. அவற்றை சமமாக எடுத்துக் கொண்டால் போதுமானது.
புகைப்பிடித்தலை தவிர்த்தல் வேண்டும்
முடி உதிர்தலுக்கு புகைப்படக்கமும் ஒரு காரணமாக உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். சிலருக்கு புகை பிடித்தல் ஒரு பழக்கமாக மாறி இருக்கும். ஆனால் சிலர் மன அழுத்தத்தின் காரணமாக புகை பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் மன அழுத்தம் இருந்தாலே முடி கொட்டும் இதனுடன் புகை பிடிப்பது சேர்ந்தால் இன்னும் அதிகமாக முடி கொட்டி வழுக்கை ஏற்படும்.
மன அழுத்தம் ஏற்படும் போது அதிகப்படியான கார்டிசோல் என்பது சுரக்கிறது. இது முடியின் வளர்ச்சியை தடுக்கிறது மேலும் முடியின் வேர்பகுதிகள் மற்றும் உச்சந்தலையின் ரத்த ஓட்டத்தை சோர்வடைய செய்யலாம். அதனால் மன உளைச்சலை தடுக்க யோகா மற்றும் உடற்பயிற்சி போன்றவை செய்யலாம் இதன் மூலம் மன உளைச்சல் குறைகிறது முடி உதிர்வும் கட்டுப்படுத்தப்படுகிறது.
மசாஜ் செய்யலாமே
ஹேர் மசாஜ் என்பது பெண்களுக்கு மட்டும் இன்றி ஆண்களுக்கும் உரியதாகும். எண்ணெய்கள் எதுவும் இல்லை என்றாலும் தேங்காய் எண்ணெய் மட்டும் வைத்துக் கூட மசாஜ் செய்யலாம். வழுக்கை உடையவர்கள் தேங்காய் எண்ணெயை தினமும் காலை தூங்கி எழுந்தவுடன் விரலில் தேங்காய் எண்ணெயை தொட்டு வழுக்கை இருக்கும் பகுதியில் நன்றாக மெதுவாக மசாஜ் செய்யவும். இதுபோல செய்து வந்தாலே லேசாக வழுக்கை மண்டையிலும் முடி வளர்வதை காணலாம்.
தலையை தூய்மையாக பேணி காக்கவும்
உச்சந்தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிக அளவில் ஷாம்பு பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஆண்கள் தினமும் தலைக்கு குளிக்க வேண்டும். வாரத்திற்கு மூன்று முறையாவது தலையை நல்ல தூய்மையான தண்ணீரில் அலச வேண்டும். தினமும் கெமிக்கல் நிறைந்த ஷாம்புவை பயன்படுத்தி வந்தால் அது தலையில் உள்ள இயற்கையான எண்ணெய் சுரப்பியை அழித்துவிடுகிறது. இதனால் முடி பார்ப்பதற்கு வரட்டும் அதிக முடியலப்பும் ஏற்படும்.
முடிக்கு கிரீன் டீ பேக்!
உடல் எடையை குறைக்க சிலர் அன்றாடம் கிரீன் டீ குடிப்பார்கள். இது உடல் எடையை குறைக்க உதவும் ஆனால் முடியின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கும்.
அன்றாடம் குடிக்கும் கிரீன் டீ பேக்கை தூக்கி எறியாமல் அதை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலை குளிப்பதற்கு முன்பு கிரீன் டீ பேக்கை பிரித்து அதன் உள்ள கிரீன் டீ பவுடரை உச்சந்தலையில் நன்றாக தடவி விடவும். கேல்ப்பு பகுதிகள் முழுவதும் படுமாறு தடவி விட்டு. ஒரு அரை மணி நேரம் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். பிறகு குளிர்ந்த நீரினால் தலையை நன்றாக அலசவும். இதுபோல செய்வதனால் முடியின் இரத்த ஓட்டம் தூண்டப்பட்டு முடி அடர்த்தியாக வளர உதவுகிறது.
உருளைக்கிழங்கு அல்லது வெங்காய ஜூஸ்
சின்ன வெங்காயத்தை தோலை உரித்து மிக்ஸியில் அடித்து அதன் ஜூசை தனியாக பிரிந்து எடுத்துக் கொள்ளவும். இந்த ஜூஸை முடியின் வேர் பகுதிகள் முழுவதும் நன்றாக அப்ளை செய்து ஒரு கால் மணி நேரம் கழித்து அல்லது அரை மணி நேரம் கழித்து தலையை அலசவும். வெங்காயத்தில் உள்ள ஸல்ஃபர் திசுக்களில் உள்ள கொலாஜனை அதிகப்படுத்தும். இதன் மூலம் முடி வேகமாக வளரும். வெங்காயத்தை தலையில் தேய்த்து குளிப்பது என்பது நம் தாத்தா பாட்டி சொன்ன பழைய டிப்ஸ் ஆக இருக்கலாம் ஆனால் அது இன்றும் சில வீட்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. நம் முன்னோர்கள் நமக்கு சொன்ன இந்த சின்ன வெங்காய டிப்ஸ் இன்றுவரை நல்ல பயன் அளிக்கிறது நீங்களும் செய்து பாருங்கள்.
சின்ன வெங்காயம் தலையில் தேய்த்து குளிப்பதனால் எரிச்சல் ஏற்படுகிறது என்று உணர்ந்தாலோ அல்லது வெங்காயத்தின் வாசனை பிடிக்கவில்லை என்று நினைக்கிறீர்களா? அப்பொழுது இந்த டிப்ஸ் உங்களுக்காக. வெங்காயத்திற்கு பதிலாக உருளைக்கிழங்கை பயன்படுத்திக் கொள்ளலாம். உருளைக்கிழங்கை தோல் நீக்கி விட்டு மிக்ஸியில் அடித்து அதன் சாரி தலையில் ஸ்கேல்பு பகுதிகள் முழுவதும் மற்றும் முடியின் வேர்பகுதி முதல் நுனிப்பகுதி வரை நன்றாக படும்படி தேய்த்து அரை மணி நேரம் அப்படியே விட்டு விடவும். பின்பு குளிர்ந்த நீரில் மைல்டு ஷாம்பு அல்லது ஹெர்பல் ஷாம்பு கொண்டு தலையை அலசவும்.
முட்டை ஹேர் மாஸ்க் ட்ரை பண்ணுங்கள்

இந்த முட்டை ஹேர் மாஸ்கானது பல பேருக்கு தெரிந்த மற்றும் சீக்கிரம் பலன் தரக்கூடிய ஒரு ஹேர் மாஸ்க். முட்டையில் உள்ள புரதமானது முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது. முடி பார்ப்பதற்கு சில்க்கி ஹேர் ஆகவும் புரதம் நிறைந்ததாகவும் இருக்க இந்த முட்டை ஹேர் மாஸ்க் பெரும் பங்கு வகிக்கிறது.
முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்துக்கொண்டு அதனுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து கொள்ளவும். மேலும் இதனுடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் லாவண்டர் ஆயில் கலந்து கொண்டால் பார்ப்பதற்கு ஒரு பேஸ்ட் போல இருக்கும். இந்த பேஸ்ட்டை நன்றாக உச்சந்தலையில் தேய்த்து ஸ்கேல்பு பகுதிகளிலும் தேய்த்து மசாஜ் செய்யவும். பிறகு இந்த மாஸ்டர் அப்படியே விட்டு விடவும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து தலையை குளிர்ந்த நீரினால் அலசவும்.











