பித்தத்தைப்போக்கும் இஞ்சி டீ மற்றும் அதன் பயன்களும்

By Go2Tamil

Published on:

Follow Us
benifits-of-ginger-tea-and-their-medicinal-purposes-explained-in-tamil

இஞ்சியில் விட்டமின் ஏ விட்டமின் சி விட்டமின் இ மற்றும் மக்னீசியம் பாஸ்பரஸ் பொட்டாசியம் இரும்புச்சத்து கால்சியம் போன்ற கனிம சத்துக்களும் பல பலமாக உள்ளது.

 இந்த சத்துக்கள் அனைத்தும் நம் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் சத்துக்களாகும் .முக்கியமாக குளிர்காலத்தில் தினமும் இஞ்சி எடுத்துக் கொள்ளும் போது குளிர்காலத்தில் ஏற்படும் பல நோய்கள் நம்மை அண்டவே அண்டாது.

      முதலில் தண்ணீரை அடுப்பில் வைத்து லேசாக கொதி வந்ததும்,அதில் நசுக்கிய இஞ்சி சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் நன்றாக கொதித்து இஞ்சியில் உள்ள சாறு முழுவதும் அந்த தண்ணீரில் இறங்கியதும் அடுப்பில் இருந்து இறக்கி குடிக்கவும். இதில் எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட வேண்டும், முக்கியமாக நல்ல சூடாக இருக்கும் பொழுது எலுமிச்சைச்சாறு சேர்க்கக்கூடாது ,காரணம் நல்ல சூடான நிலையில் சேர்த்தால் எலுமிச்சையில் உள்ள சத்துக்கள் அனைத்தும் அழிந்துவிடும். 

       எனவே வெதுவெதுப்பான நிலையில் சேர்க்க வேண்டும் அதேபோன்று இஞ்சியின் தோலை நீக்கிய பிறகு பயன்படுத்த வேண்டும் இப்படி தினமும் ஒரு வேளை சாப்பிட்டலாம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மிகவும் நல்லது 

benifits-of-ginger-tea-and-their-medicinal-purposes-explained-in-tamil

  பொதுவாக மழை மற்றும் குளிர்காலத்தில் தான் நோய் தொற்று அதிகரிக்கும் எனவே எல்லோரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். அந்த வகையில் இஞ்சி டீயில்  எலுமிச்சை மற்றும் தேன் இந்த மூன்றும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது.

       இருமல் சளி சைனஸ் ஆஸ்துமா போன்ற தொந்தரவு உள்ளவர்கள் தினமும் இஞ்சி டீ குடிப்பது அவசியம். சாதாரண சளி இருமல், வறட்டு இருமல் ,மற்றும் நுரையீரல் ,தொடர்பான ஏற்படும் புற்றுநோய்க்கும் இஞ்சி டீ மிகவும் நல்லது .                      

     இந்த இஞ்சியில்  மார்பில் கட்டி இருக்கும் சளியை கரைக்கக் கூடிய அதே போன்று ஆஸ்துமா நோய்களுக்கும் ஏற்படும் சுவாச பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு தரும் 

இதய ஆரோக்கியம் இதயத்தை பலப்படுத்தும் மருத்துவ குணம் இஞ்சிக்கு உண்டு என்பதால் சீன மருத்துவத்தில் இஞ்சியின் இருந்து எடுத்த ஒருவித எண்ணியை இதய நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது இஞ்சியில் ரத்த ஓட்டத்தை சீர் செய்யும் வைட்டமின்கள் கனிமங்கள் மற்றும் மீனு அமிலங்கள்  இருப்பதால் ரத்த ஓட்டத்தை அதிகரித்து மற்ற சத்துக்களையும் ஆக்சிஜனையும் உடலில் எல்லா பாகங்களுக்கும் செல்ல உதவி செய்கிறது மேலும் செல் வளர்ச்சியையும் தூண்டுகிறது முக்கியமாக இது கொழுப்புகளை ரத்த குழாய்களுக்கு தங்க விடாமல் பார்த்துக் கொள்கிறது இதனால் மாறுபடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளை ஏற்படாமல் தடுக்கிறது

Go2Tamil

We are nearly 8+ years experience in blogging. this website is fully focus on tamil news and contents. If you are need our service for web designing,digital marketing,blogging,DTP,Graphic Designing you can mail me on vigneshwarsankar@gmail.com

Leave a Comment