கடிதம் எழுதும் சரியான முறையை நாம் ” How To Write Formal letter in Tamil ” மூலம் நாம் இங்கு பார்ப்போம்.
சாதரணமாகவோ அல்லது முறையாகவோ கடிதம் எழுதுவது, தகவல் பரிமாற்றத்தின் ஒரு முக்கிய வழியாகும். அது செய்தி, தகவல் அல்லது வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளப் பயன்படுகிறது. கடிதம் என்பது பொதுவாக இரண்டு நபர்களுக்கிடையேயான தொடர்பை எளிதாக்கும் வகையில் எழுதப்பட்டவை மற்றும் அஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
Write A Formal letter in Tamil
கடிதத்தின் முக்கிய அம்சங்கள்: formal letter in tamil
உள்நோக்கம்:
தகவல், செய்தி அல்லது வாழ்த்துக்களை அனுப்புவது.
வடிவம்:
கடிதங்கள் எழுதப்பட்டவை, தட்டச்சு செய்யப்பட்டவை அல்லது அச்சிடப்பட்டவை.
தொடர்பு:
கடிதங்கள் இரண்டு நபர்களுக்கிடையேயான தொடர்பை எளிதாக்குகின்றன
வழங்குதல்:
கடிதங்கள் அஞ்சல் அல்லது தபால் மூலம் அனுப்பப்படுகின்றன.
நோக்கம்:
சிலருக்கு, கடிதங்கள் விமர்சன வாசிப்பு, சுய-வெளிப்பாடு எழுதுதல், வாதம் எழுதுதல் மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட மற்றவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள ஒரு வழியாகும்
பல வகையான கடிதங்கள் உள்ளன.
சில கடித எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
- முகப்பு கடிதம்
- சலுகை ஏற்பு கடிதம்
- தொழில்முறை நன்றி கடிதம்
- வணிக கடிதம்
- விற்பனை கடிதம்
- பணிநீக்கக் கடிதம்
- விருப்பக் கடிதம்
- பரிந்துரை கடிதம்
அலுவலக கடிதம் எழுதும் முறை
(formal letter in tamil)
ஊர்: XXX
மாவட்டம்: YYY
நாள்: 00/00/00
அனுப்புநர்:
தங்கள் பெயர்,
தங்கள் முகவரி.
தங்கள் பின்கோடு
பெறுநர்:
மாநகராட்சித் தலைவர் அலுவலர்,
மாநகராட்சி அலுவலகம்,
அதன் ஊர் மற்றும்
பின்கோடு
மதிப்புற்குரிய ஐயா\அம்மா
பொருள்: சாலை வசதி அமைத்துத்தர வேண்டி.
வணக்கம்.. நான் (XXX உங்கள் ஊர்) வசித்து வருகிறேன். எங்கள் பகுதியில் நிறைய குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வசித்து வருகின்றன. எனவே குழந்தைகள் நடந்து செல்வதற்கு, பொதுமக்கள் வாகனங்களை ஒட்டி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு கடினமாக இருப்பதால் எங்களுக்கு கூடிய விரைவில் ஒரு சாலை வசதி அமைத்துத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோ.
நன்றி
இப்படிக்கு
(தங்களது கையொப்பம்)
மின்சார புகார் கடிதம் எழுதும் முறை
(formal letter in tamil)
ஊர்: XXX
மாவட்டம்: YYY
நாள்: 00/00/00
அனுப்புநர்:
தங்கள் பெயர்,
தங்கள் முகவரி.
தங்கள் பின்கோடு
தொலைபேசி எண்
பெறுநர்:
மின்சார துறை அதிகாரி பெயர்
(அல்லது )வகிக்கும் பதவி,
உங்கள் ஊரின் மின்சார துறையின் முகவரி
பின்கோடு
மதிப்பிற்குரிய ஐயா\அம்மா :
பொருள்: மின்சார கட்டணத்திற்கான விண்ணப்பம்.
என் பெயர் XXX மற்றும் என் மின்சாரம் மீட்டர் எண் 123456789. கடந்த இரண்டு மாதங்களில் இருந்து எங்கள் வீட்டில் மின் கட்டணம் அதிகரித்துள்ளது என்பதை நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன், ஆனால் எங்கள் வீட்டில் அதிக அளவில் மின்சாரத்தை பயன்படுத்த மாட்டோம். இருப்பினும் கடந்த இரண்டு மாதங்களாக எங்கள் வீட்டில் மின் கட்டணமானது அதிகரித்துள்ளது. ஒருவேளை மீட்டரில் பிரச்சனை இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
எனவே, டிஎன்இபி டிஜிட்டல் மீட்டர் அளவிடுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் தயவுசெய்து சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் கடந்த இரண்டு மாதங்களில் இருந்து மின்சார கட்டணத்தில் திருத்தம் செய்ய வேண்டுகிறேன்.
நன்றி
இப்படிக்கு
(தங்களது கையொப்பம்)
காவல்துறை புகார் கடிதம் எழுதும் முறை
(Formal letter in tamil)
ஊர்: XXX
மாவட்டம்: YYY
நாள்: 00/00/00
அனுப்புநர்:
தங்கள் பெயர் மற்றும் உங்கள் வயது,
தகப்பனார் பெயர்
தங்கள் முகவரி
தொலைபேசி எண்:
பெறுநர்:
உயர் திரு. சார்பு ஆய்வாளர் அவர்கள்,
XXXX காவல் நிலையம்,
XXXX மாவட்டம்.
மதிப்பிற்குரிய ஐயா\அம்மா
பொருள்: YYYY [சுமத்தப்படும் குற்றம் குறித்து சுருக்கமாக] நபர் குறித்த புகார் மனு.
பெரு மதிப்பிற்குரிய காவல் துறை சார்பு ஆய்வாளர் அவர்களுக்கு வணக்கம்! மனுதாரர் ஆகிய நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். குற்றவாளி ஆகிய xxxx என்பவர் [சுமத்தப்படும் குற்றம் குறித்து விரிவாக]. இச்செயல் கடந்த xxxxx தேதியில் நிகழ்ந்தது. குற்றவாளி இச் செய்கையால் எனக்கு [தனது தரப்பில் ஏற்பட்ட பாதிப்பை விவரமாக தெரிவிக்கவும்].
ஆகையால், குற்றவாளி செய்த இத்தகைய செயலுக்கு விசாரணை செய்யுமாறும், அதேபோல் குற்றவாளியால் எனக்கோ என்னைச் சார்ந்த குடும்பத்திற்கோ எவ்வித பிரச்சனைகள் ஏற்படாத வண்ணம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தங்களை பணிவாக வேண்டிக்கொள்கின்றேன்.
நன்றி
இப்படிக்கு,
(தங்களது கையொப்பம்)
நில அபகரிப்பு புகார் கடிதம் எழுதும் முறை
(Formal letter in Tamil)
ஊர்: XXX
மாவட்டம்: YYY
நாள்: 00/00/00
அனுப்புநர்:
தங்கள் பெயர் மற்றும் உங்கள் வயது,
தகப்பனார் பெயர்
தங்கள் முகவரி
தொலைபேசி எண்:
பெறுநர்:
காவல் ஆணையர்,
மாவட்ட காவல்துறை அலுவலகதின் முகவரி.
மற்றும் பிண்கோடு
மதிப்புற்குரிய ஐயா/அம்மா
பொருள்: நில ஆக்கிரமிப்பு குறித்த வாத செய்தி
இக்கடிதத்தின் வாயிலாக தங்கள் துறையிடம் நான் சமர்ப்பிக்கும் புகார் என்னவென்றால், எனது சொந்த நிலத்தில் சட்டவிரோதமாக ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இது உடனடியாக காவல்துறையினரால் கையாளப்படாவிட்டால் பாதகமான உடமைக்கு வழிவகுக்கும்.
தொலைதூர கிராம/ நகர் பகுதியான (நிலத்தின் விபரங்கள்/ முகவரியில்) பயரிடப்படாத நிலம் ஒன்றை வாங்கியிருந்தேன். அந்த நிலம் வாங்கி ஒரு வருடம் கழிந்த நிலையில் நான் வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டேன் ஆதலால் பராமரிப்பின்றி இருந்த அந்த நிலத்தில் யாரோ ஒருவர் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளார். மேலும் அவ்விடத்தில் குடிசையிட்டு விவசாயம் செய்து வருகிறார்.
இவ்விவகாரம் குறித்து காவல்துறையிடம் முறையாக புகார் அளிக்கிறேன். உரிய காலத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனக்கு சொந்தமான நிலத்தை மீட்டுதருமாறு வேண்டிக்கொள்கிறேன்.
இப்புகாரின் அடிப்படை ஆதாரமாக எனது நில உரிமை பத்திரமும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தின் புகைப்படங்களையும் இக்கடித்ததுடன் இணைத்துள்ளேன்.
மேலும் இப்புகாரின் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எனது முழு ஒத்துழைப்பையும் அளிக்க விருப்பமளிக்கிறேன்.
நன்றி
இப்படிக்கு
(தங்கள் கையொப்பம்)