திருக்குறள் தமிழ் மொழியின் மிக முக்கியமான ஒரு நூல் ஆகும். இது மிகவும் எளிமையான மற்றும் அனைத்து காலத்திற்கும் ஏற்ற கருத்துக்கள் கொண்டது. எனவே திருக்குறள் உலகப் பொதுமறை என்று போற்றப்படுகிறது.திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர் எனும் தெய்வப்புலவர்
திருக்குறள் மூன்று பால்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
- அறத்துப்பால்,
- பொருட்பால்,
- இன்பத்துப்பால்.
அறத்துப்பால்:
அறம், ஒழுக்கம், நல்லொழுக்கம் போன்றவற்றை விளக்கும் அதிகாரங்கள் இதில் அடங்கும்.
பொருட்பால்:
பொருளாதாரம், அரசியல், ஆட்சி போன்றவற்றை உள்ளடக்கியது.
இன்பத்துப்பால்:
காமம், களவு, பாசம் போன்ற இன்பங்களை விளக்கும் அதிகாரங்கள் அடங்கும்
திருக்குறள் மொத்தம் 133 அதிகாரங்கள் மற்றும் ஒரு அதிகாரத்திற்கு 10 பாடல்கள் வீதம் 1330 குறள்களைக் கொண்டது.
50 easy thirukkural in tamil
1.அகர முதல எழுத்பதல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
2.துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை
3.நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
4.நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
5.அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
6.யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
7.இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல
8.கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
9.எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
10.உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து
11.கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
12.அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
13. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
14. வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
50 easy thirukkural in tamil
15. இருள்சேர் இருவினையும் சேர இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
16. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
17. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
18. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

19. கோளில் பொறியின் குணமிலவே
எண்குணத்தான் தாளை வணங்காத் தலை .
20. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
21.உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
22.கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
23.வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
24.இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
25.துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை
50 easy thirukkural in tamil
26.விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி
27.கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
28.தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்
29.நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு
50 எளிமையான திருக்குறள்கள்
30.ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு
50 easy thirukkural in tamil
31.செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
32.அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
33.வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
34.இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை
50 easy thirukkural in tamil
35.அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்
36.அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்
37.அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
38.அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு
39.அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
40.இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்
50 Easy Thirukkural in Tamil
41.உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு
42.மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
43.துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு
44.இனிய உளவாக இன்னாத கூறல் கனி
இருப்பக் காய்கவர்ந் தற்று
45.செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது
46.காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
47.பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது
48.தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்
49.உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து
50.நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று